சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க உதவும் இந்தியாவின் மிக நீளமான பிரம்மபுத்திரா ஆற்றும் பாலத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

By Staff

நாட்டின் வடகிழக்கு பகுதியில் சீன எல்லைக்கு மிக அருகில் பிரம்மபுத்திரா நதியின் மீது நாட்டிலேயே மிக நீளமான வரலாற்று சிறப்புமிக்க ஆற்றுப் பாலம் ஒன்றினை இந்தியா அமைத்துள்ளது. இந்தப் பாலத்தினை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து இன்று முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில எல்லைக்கு அருகில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 9.15 கிமீ ஆகும். ஆறுகளுக்கு மீதாக கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுவே நாட்டின் மிக நீளமானதாகும்.

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள தோலா மற்றும் சதியா ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் தோலா-சதியா பாலம் என்று அழைக்கப்படுகிறது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

சீன எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தையும் அதன் அண்டை மாநிலமான அசாமையும் நீரால் பிரிக்கிறது பிரம்மபுத்திரா நதி. இந்தப்பகுதியில் ஆற்றுப் பாலம் கட்டினால் அருணாச்சல பிரதேசத்தின் வழியே சீன எல்லையை அடைய அது எளிதாக அமையும் என்று திட்டமிடப்பட்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

சதியா பகுதி சீனாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது, இங்கிருந்து சீன எல்லை சுமார் 100 கிமீ தூரம் மட்டுமே.

தற்போது இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதன் மூலம் மூன்று பக்கமும் லோஹித், பிரம்மபுத்திரா மற்றும் தில்பங் ஆறுகளால் சூழப்பட்ட சதியா பகுதிக்கு போக்குவரத்து எளிதாகியுள்ளது. இது ராணுவ பயன்பாட்டிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

சீனாவை ஒட்டி இந்தப் பாலம் அமைந்துள்ளதால் போர்க் காலங்களில் அல்லது அசாதர சூழ்நிலைகளில் ராணுவத்தினரையும், ராணுவ தளவாடங்களையும் எல்லையை நோக்கி தரை வழியாக மிக விரைவாக நகர்த்த இந்தப் பாலம் பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

முன்னதாக தோலா முதல் சதியா வரையிலான சுற்றுப்பாதை வழியான பயண நேரம் 6 மணி நேரமாக இருந்தது, தற்போது இது ஒரு மணிநேரமாக குறைந்துள்ளது.

முன்னதாக இந்தப் பகுதியை விரைவாக கடக்க வேண்டுமெனில், சிறிய ரக படகுகள் மூலமாகவே கடக்க முடியும், அதுவும் பகல் நேரத்தில் மட்டுமே. இது வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பகுதி என்பதால் அந்த நேரங்களில் இந்தப் பகுதியை கடக்க வழி இல்லாத நிலை இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

இந்தப் பாலத்தைக் கண்டு சீனா அலறக் காரணம் இல்லாமல் இல்லை. வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சீன எல்லை எப்போதும் இந்தியாவுக்கு தலைவலியை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் சீனா அடிக்கடி நம்மை சீண்டியபடியே உள்ளது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

அருணாச்சல பிரதேச பகுதியில் இந்தியாவுக்கு சீனா தனது சீண்டல்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறது. இந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து சரிவர இல்லாதது இந்தியாவிற்கு ஒரு குறைபாடாகவே இருந்து வந்தது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

தற்போது அந்தக் குறையை இந்த பிரம்மபுத்திரா நதிப்பாலம் போக்கியுள்ளது. இது இந்தியாவின் ராணுவ வலிமையை சீனாவிற்கு தரைவழியாக உணர்த்த ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்துள்ளது.

 பிரம்மபுத்திரா பாலத்தை கண்டு அஞ்சும் சீனா: காரணம் என்ன?

950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் மூலம் ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மேலும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிலான எரிபொருட்கள் மிச்சமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்த பாலத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக போக்குவரத்தும் மேம்படும் என்று தெரிகிறது.

எனினும், எதிரிகள் மூலம் இந்தப் பாலத்திற்கு அச்சுறுத்தலும் உள்ளது என்பதால் இதனை பாதுகாக்க கூடுதல் கவனமுடன் அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

Most Read Articles
English summary
Read in Tamil about india's longest river bridge shakes china.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X