முகேஷ் அம்பானியின் அன்டிலியா சொகுசு வீட்டின் பிரம்மாண்ட கார் கராஜ்!

Posted By:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, உலக செல்வந்தர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். இந்தியாவின் பெரும் பணக்காரரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக விளங்குகிறார்.

மேலும், மும்பையிலுள்ள அவரது அன்டிலியா வீடு பற்றியும் பல்வேறு தகவல்களை படித்திருப்பீர்கள். ஆனால், அவரது வீட்டின் பெருமைக்கும், அவருக்கும் பெருமை சேர்ப்பது அவரது வீடு மட்டுமல்ல. அவரது பிரம்மாண்டமான கார் கலெக்ஷன் மட்டுமல்ல, அவரது வீட்டு கார் கராஜும் வியக்க வைக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆடம்பர வீடு

ஆடம்பர வீடு

கடந்த ஆண்டு ஃபோர்ஸ் வர்த்தக பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில், உலகின் மிகவும் ஆடம்பரமான வீடு என்று பெருமையுடன் முதலிடத்தை முகேஷ் அம்பானியின் அன்டிலியா பெற்றது. அதில், அம்பானி வீட்டு கராஜ் பற்றியும் குறிப்பு எடுக்கப்பட்டு மதிப்பீட்டு செய்யப்பட்டிருக்கிறது.

வீட்டின் சிறப்புகள்

வீட்டின் சிறப்புகள்

மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு 173.13 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளங்களும், சாதாராண வீட்டின் மூன்று தளங்களுக்கு ஒப்பான உயரம் கொண்டது. 4 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு இடவசதி கொண்டது. சாதாரண வீடாக இதனை கட்டியிருந்தால், 60 மாடிகள் கொண்டதாக இருந்திருக்கும். இந்த வீட்டின் மதிப்பு ரூ.6,400 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

கார் பிரியர்

கார் பிரியர்

முகேஷ் அம்பானி ஒரு தீவிரமான கார் பிரியர். அவரிடம் நூற்றுக்கணக்கான இறக்குமதி கார்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அதில் பல கார்களை இந்த அன்டிலியா வீட்டிற்கு தன்னுடன் சேர்த்து குடி பெயர்த்துவிட்டார்.

அன்டிலியா கார் கராஜ்

அன்டிலியா கார் கராஜ்

அன்டிலியா வீட்டின் முதல் ஆறு தளங்களும் வாகனங்கள் நிறுத்துமிடமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 168 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.

கார் பராமரிப்பு நிலையம்

கார் பராமரிப்பு நிலையம்

அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர்.

அதிகாரப்பூர்வ கார்

அதிகாரப்பூர்வ கார்

முகேஷ் அம்பானியிடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவர் பயன்படுத்தும் கார் மாடல் மேபக் 62 கார்தான். அதன் மதிப்பு ரூ.5 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கடுத்து, சமீபத்தில் வாங்கப்பட்ட குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்.

அடிக்கடி பயன்படுத்தும் மாடல்கள்

அடிக்கடி பயன்படுத்தும் மாடல்கள்

மேபக் 62 தவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆகிய கார்களையும் அவ்வப்போது பயன்படுத்துகிறார். அவர் அடிக்கடி பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் ஒரே தளத்தில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.

ஹெலிபேடுகள்

ஹெலிபேடுகள்

வீட்டின் மேல் தளத்தில் மூன்று ஹெலிபேடுகள் உள்ளன. மேலும், ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது.

Image Source: Bornrich

விமானங்கள்

விமானங்கள்

முகேஷ் அம்பானியிடம் ஏர்பஸ் 319, ஃபால்கன் 900இஎக்ஸ் மற்றும் போயிங் பிசினஸ் ஜெட்2 ஆகிய மூன்று விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் முகேஷ் அம்பானிக்காக உட்புறத்தில் விசேஷமாக வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டவை.

ஃபால்கன் 900இஎக்ஸ்

ஃபால்கன் 900இஎக்ஸ்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மிக பிரபலமான தனி நபர் பயன்பாட்டு விமானம்தான் ஃபால்கன் 900. இந்த விமானம் பல்வேறு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்ட மாடல் ஃபால்கன் 900 இஎக்ஸ் மாடல். அதிகபட்சமாக 8,340 கிமீ தூரம் வரை பறக்க முடியும். ஹனிவெல் பிரைமஸ் ஏவியானிக் கட்டுப்பாட்டு சிஸ்டம் கொண்டது.

 விசேஷ உள் அமைப்பு

விசேஷ உள் அமைப்பு

உட்புறத்தில் சிறிய அளவிலான ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்ற வகையில், கட்டமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தற்காலிக அலுவலகமாகவும் அவர் பயன்படுத்தும் விதத்தில் சிறப்பு வசதிகள் உள்ளன. மேலும், சேட்டிலைட் டிவி, வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

போயிங் பிசினஸ் ஜெட்- 2

போயிங் பிசினஸ் ஜெட்- 2

இந்த விமானம் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 78 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தை முகேஷ் அம்பானியின் தனி பயன்பாட்டுக்காக பல்வேறு வசதிகளுடன் மாற்றியிருக்கின்றனர்.

 விஷேசம் என்ன?

விஷேசம் என்ன?

விமானத்தின் விலை மட்டும் 70 மில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதன் உட்புற கட்டமைப்புக்கு கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வரை செலவழித்து, விசேஷமாக உள் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆலோசனைக் கூட்டங்கள், அலுவலகப் பணிகள் செய்வதற்கு ஏதுவாகன வசதிகள் உள்ளன. அத்துடன், படுக்கை அறை வசதியும் உள்ளது. இந்த விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 13,200 டாலர்கள் செலவழியும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.

ஏர்பஸ் 319 கார்ப்பரேட் ஜெட்

ஏர்பஸ் 319 கார்ப்பரேட் ஜெட்

தனது மனைவி நீட்டா அம்பானிக்கு முகேஷ் அம்பானி பரிசளித்த விமானம் இது. ரூ.242 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக இடவசதி, சொகுசு வசதிகள் நிரம்பிய தனிநபர் பயன்பாட்டு விமான மாடலாக விளங்குகிறது.

 விசேஷம்

விசேஷம்

நீட்டா அம்பானிக்கு அளிக்கப்பட்ட இந்த காஸ்ட்லி பரிசான ஏர்பஸ் 319 விமானம் இடைநில்லாமல் 11,100 கிமீ தூரம் வரை பறக்கக்கூடியது. மணிக்கு 1,012 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியது. உலகின் சிறந்த தனிநபர் பயன்பாட்டு விமானமாக வர்ணிக்கப்படுகிறது. இந்த மூன்று விமானங்களும், மும்பை விமான நிலையத்தின் தனி நபர் விமான நிறுத்துமிடத்தில்தான் நிறுத்தப்பட்டு இருக்கும்.

ஆடம்பர படகு

ஆடம்பர படகு

முகேஷ் அம்பானியிடம் 20 மில்லியன் டாலர் மதிப்புமிக்க ஆடம்பர படகு ஒன்றும் உள்ளது.

அம்பானி வீட்டு கார் கராஜ்!

நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம், மசாஜ் அறை, பொழுதுபோக்கு வசதிளை கொண்டது. மூன்றடுகளையும் இணைக்கும் விதத்தில், லிஃப்ட் வசதியும் உண்டு. 12 விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த ஆடம்பர படகில், 20 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த ஆடம்பர படகின் மின்சார தேவையில் 30 சதவீத அளவுக்கு சோலார் மின்தகடுகள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

01. முகேஷ் அம்பானியின் புல்லட் புரூஃப் கார்...

02. முகேஷ் அம்பானியின் ஆஸ்தான கார்கள்...

03. இந்தியாவின் முன்னணி சிஇஓ.,க்களின் கார்கள்...

 

Images Source: Youtube

மேலும்... #ஆஃப் பீட்
English summary
India's Richest Man Mukesh Ambani's Motor garage details.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark