நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

இந்தூர் நகரில் சிஎன்ஜி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கூடிய விரைவில் 50 சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. நடப்பு செப்டம்பர் மாத இறுதிக்கு உள்ளாகவே இந்த சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்பது இந்தூர் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாக இருக்கும். இந்தூர் நகரில் ஒட்டுமொத்தமாக 400 சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

இதில், தற்போதைக்கு 50 பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுவது முதற்கட்டம்தான். வரும் காலங்களில் சிஎன்ஜி பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும். அனேகமாக நடப்பு 2021ம் ஆண்டு இறுதிக்குள்ளாக எஞ்சிய 350 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

சிஎன்ஜி மூலம் பேருந்துகளை இயக்குவதால் ஓரளவிற்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 400 சிஎன்ஜி பேருந்துகளை இயக்குவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டு விட்டது. அத்துடன் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதமே சிஎன்ஜி பேருந்துகளின் சேவையை தொடங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

ஆனால் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அந்த திட்டம் தாமதமானது. ஒரு வழியாக தற்போது இந்த சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த சிஎன்ஜி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் நிகழ் நேர கண்காணிப்பிற்காக ஜிபிஎஸ் வசதியையும் இந்த பேருந்துகள் கொண்டிருக்கும்.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

எந்த வழித்தடங்களில் தேவை அதிகமாக உள்ளதோ, அந்த வழித்தடங்களில் இந்த சிஎன்ஜி பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ள நிலையில், சிஎன்ஜி வாகனங்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகி வருகின்றன. அத்துடன் பல்வேறு மாநில அரசுகளும் சிஎன்ஜி பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளன.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கூட சமீபத்தில் சிஎன்ஜி பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டது. டீசலை காட்டிலும் சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு. அத்துடன் டீசலுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது. எனவேதான் சிஎன்ஜி பேருந்துகளுக்கு ஒரு சில மாநில அரசுகள் அதிக முக்கியத்துவம் வழங்கி கொண்டுள்ளன.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

சிஎன்ஜி மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் தற்போது தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க வேண்டும் என மாநில அரசுகள் விரும்புகின்றன. ஒன்றிய அரசும் கூட இந்த காரணத்திற்காகதான் எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

ஒன்றிய அரசு மட்டுமல்லாது, பல்வேறு மாநில அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியங்களை வழங்கி வருகின்றன. ஏற்கனவே குஜராத், டெல்லி போன்ற மாநிலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வரும் நிலையில், இந்த பட்டியலில் தற்போது உத்தரகாண்ட் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் புதிதாக இணைந்துள்ளன.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மானியம் கிடைப்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை சொந்தமாக்குவதற்கு பலர் முன்வருவார்கள். இந்த காரணத்திற்காகதான் மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசுகள் வழங்குகின்றன. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கலாம்.

நல்ல லாபம் கிடைக்கும்... சுற்றுச்சூழலுக்கும் ரொம்ப நல்லது... இனி இந்த ஊரில் சிஎன்ஜி பஸ்கள் ஓடப்போகுது!

தற்போது இந்திய சந்தையில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் இங்கு மிகவும் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வரும் காலங்களில் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் பைக்குகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indore to get 50 cng buses
Story first published: Saturday, September 11, 2021, 21:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X