ஐஎன்எஸ் அரிஹந்த் போர்க்கப்பலை ரகசியமாக கடற்படையில் சேர்த்த பிரதமர் மோடி

Written By:

அணு ஆயுதங்களை முதலில் ஏவுவதில்லை என்ற கோட்பாட்டை இந்தியா கடைபிடித்து வருகிறது. ஆனால், எதிரி நாடுகள் அணு ஆயுதத்தை ஏவும்போது, அதனை முறியடிப்பதற்கான 'செகண்ட் ஸ்ட்ரைக்' என்ற திட்டத்தை நம் நாட்டு ராணுவம் கைவசம் வைத்துள்ளது.

அதன்படி, இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால், எதிரி நாட்டை இந்திய போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் சூழ்ந்து கொண்டு துவம்சம் செய்துவிடும். அதற்காக, ஏற்கனவே விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் எப்போதுமே தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், செகண்ட் ஸ்ட்ரைக் திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில், இந்தியாவிலேய தயாரான ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை ரகசியமாக கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

ஆயுதங்களை ஏவுதல் மற்றும் ஆழ்கடல் சோதனைகளில் ஐஎன்எஸ் அரிஹந்த் சிறப்பாக செயல்பட்டது. இதனையடுத்து, கடற்படையில் சேர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான நிகழ்ச்சியின் மூலாமக இந்த புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

இந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூலமாக புதிய பலத்தை இந்தியா பெற்றிருக்கிறது. உலகில் வெகு சில நாடுகளில் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை கட்டமைக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதில், இந்தியாவும் இணைந்துள்ளது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களின் மிக முக்கிய பலம், எரிபொருளுக்காக அடிக்கடி கரைக்கு வராமலேயே நீண்ட நாட்கள் நீருக்கடியில் இருக்க முடியும். இதனால், இதன் நடமாட்டத்தை கண்டுபிடிப்பது கடினம்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஆனால், இந்த கப்பலை நீண்ட தூரம் இயக்க முடியும். போர் காலங்களில் அதிக நாட்கள் எதிரி நாடுகளின் எல்லைகளில் வைத்திருக்க முடியும்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

அணு ஆயதங்களையும் நீருக்கு அடியில் இருந்து ஏவ முடியும். இதுதொடர்பான சோதனைகளில் ஐஎன்எஸ் அரிஹந்த் வெற்றி பெற்று இருக்கிறது. இதன்மூலமாக, நிலம், நீர் மற்றும் ஆகாயம் என மூன்று விதமான முறைகளில் அணு ஆயுதங்களை ஏவும் வல்லமை பெற்ற நாடாக இந்தியா மாறியிருக்கிறது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

ஒரேநேரத்தில் இதன் நான்கு திசைகளிலும் 12 ஏவுகணைகளை ஏவக்கூடிய திறன் கொண்டது இந்த போர்க்கப்பல். ஒருமுனைக்கு 3 ஏவுகணைகளை ஏவுவதற்கான பாட் எனப்படும் ஏவு சாதனைங்களை கொண்டிருக்கிறது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

இந்த நீர்மூழ்கி கப்பலில் 700 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர வகையிலான 12 கே-15 ஏவுகணைகளையும் 3,500 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் 4 கே-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் இருக்கும்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

தரையிலிருந்தும், ஆகாயத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஏவுவதற்கான தளங்களை எதிரிகள் கண்டறிந்து அழிக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், நீருக்கடியில் இருந்து அணு ஆயுத ஏவுகணைகளை ஏவும் திறன் இருப்பதன் மூலமாக, எதிரிகள் அவ்வளவு எளிதாக இந்த கப்பலை கண்டறிய முடியாது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி போர்க்கப்பல் சுமார் 6,000 டன் எடையும், 110 மீட்டர் நீளமும், 11 மீட்டர் அகலமும் கொண்டது. ரூ.14,500 கோடி முதலீட்டில் இந்த கப்பல் தயாராகியிருக்கிறது. இந்த கப்பலில் 95 வீரர்கள் பணியாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

இந்த கப்பலின் ஹல் எனப்படும் உடல்கூடு பாகத்தை எல் அண்ட் டி நிறுவனத்தின் ஹஸிரா கப்பல் நிறுவனமும், கட்டுப்பாட்டு சாதனங்களை டாடா பவர் நிறுவனமும், நீராவி டர்பனை வால்சந்த்நகர் இன்டஸ்ட்ரீம் நிறுவனமும் தயாரித்து கொடுத்துள்ளன.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

இந்த கப்பலில் இருக்கும் அணு உலைகள் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த அணு உலைகளில் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் மூலமாக கடுமையான வெப்பம் கிடைக்கும்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

அந்த வெப்பத்தின் மூலமாக தண்ணீர் சூடாக்கப்பட்டு நீராவி பெறப்படுகிறது. இந்த நீராவியின் மூலமாக டர்பைன் இயக்கப்பட்டு கப்பல் செலுத்தப்படும். இந்த டர்பைன் மூலமாகவே மின் உற்பத்தியும் செய்ய முடியும். கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி கடல்நீரை குடிநீராக்கும் வசதி, கப்பலுக்குள் காற்றை சுத்திகரிக்கும் எந்திரங்களை இயக்க முடியும்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

நீர்மூழ்கி கப்பல்கள் சோனார் ஒலி மூலமாக கப்பல் செல்லும் தடத்தில் இருக்கும் தடைகள் மற்றும் கப்பல்களை கண்டறிந்து அதற்கு தக்கவாறு செலுத்தப்படும். ஆனால், இந்த சோனார் ஒலியை வைத்து எதிரிகள் கண்டறிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

ஆனால், இந்த கப்பலில் எதிரி நாட்டு கப்பல்கள் சோனார் ஒலியை வைத்து கண்டறியாத வகையில் விசேஷ ரப்பர் பூச்சு மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதனால், அவ்வளவு எளிதாக எதிரிகளின் ரேடார்களிலும், சோனார் ஒலி தொழில்நுட்பத்தின் மூலமாகவும் கண்டறிய முடியாது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில்தான் இந்த நீர்மூழ்கி கப்பல் கட்டமைக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலை கட்டுவதற்கு ரஷ்யாவும் அதீத ஒத்துழைப்பை நல்கியுள்ளது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

இந்த கப்பலில் 95 வீரர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கான ஆயுதம் ஏவும் பயிற்சி, கப்பலை செலுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கான விரிவான பயிற்சிகளை ரஷ்யா மற்றும் இந்திய கப்பல் கட்டும் தள நிபுணர்களும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து வழங்கியிருக்கின்றனர்.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

அதுமட்டுமல்ல, அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இயக்குவதற்கும், ஆயுதங்களை ஏவுவதற்குமான பயிற்சிகளின்போது, அவசர உதவிகளை வழங்குவதற்காக ரஷ்யா தனது ஆர்எஃப்எஸ். எப்ரான்ன் என்ற நீர்மூழ்கி கப்பலை விசாகப்பட்டினத்தில் நிறுத்தியது நினைகூறத்தக்கது.

அணு ஆயுத தாக்குதலை முறியடிக்கும் வல்லமை கொண்ட ஐஎன்எஸ் அரிஹந்த் தயார்!

இதே குடும்ப வரிசையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரித்மான் அடுத்த ஆண்டு சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
English summary
INS Arihant Nuclear Submarine Commissioned Into The Navy Silently. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos