இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடமும், சொகுசு பஸ்களும்... !!

Posted By:

நீண்ட தூர பயணங்களை இலகுவாக்கியதில், வால்வோ நிறுவனத்துக்கு பெரும் பங்கு உண்டு. இந்திய போக்குவரத்து துறையில் புதிய கோணத்தில் எடுத்துச் சென்ற பெருமைக்குரிய வால்வோ நிறுவனத்தின் துணையுடன் பஸ் நிறுவனங்களும் மிக நீண்ட தூர வழித்தடங்களில் பஸ்களை இயக்க துவங்கின.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

இப்போது தென் இந்தியாவையும், வட இந்தியாவையும் நேரடியாக இணைக்கும் விதத்தில் பல நீண்ட தூர பஸ் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில், பெங்களூரிலிருந்து ஜோத்பூருக்கு நேரடி பஸ் வசதியை விஆர்எல், எஸ்ஆர்எஸ் உள்ளிட்ட பெரிய பஸ் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதுதான் இந்தியாவின் மிக நீளமான நேரடி பஸ் வழித்தடமாக கருதப்படுகிறது.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

1,950 கிமீ தூரமுடைய இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் 36 மணி நேரத்தில் கடந்து விடுகின்றன. பெங்களூர் ஜோத்பூர் மட்டுமின்றி, பெங்களூரிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்பூர், உதய்பூர் மற்றும் குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி பஸ் சேவையை பஸ் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக கர்நாடக அரசு போக்குவரத்து கழக நிறுவனமும்[KSRTC] சொகுசு பஸ் சேவையில் முன்னிலை வகிக்கிறது. கேஎஸ்ஆர்டிசி நிறுவனமும் ஏராளமான வழித்தடங்களில் வால்வோ பஸ்களை பயன்படுத்தி வருகிறது.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

மேலும், இந்த வழித்தடங்களில் பெரும்பாலும் வால்வோ பி9ஆர் மற்றும் பி11ஆர் மல்டி ஆக்சில் பஸ்கள்தான் இயக்கப்படுகின்றன. உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் பயணிகளுக்கு சிறப்பான இடவசதியுடன் கட்டமைக்கப்படுகின்றன. இதனால், பஸ் நிறுவனங்கள் மத்தியில் இந்த பஸ்களுக்கு அதிக வரவேற்பு இருக்கின்றது.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

அதிர்வுகள் குறைவான சொகுசு பயணத்தை வழங்குவதில் வால்வோ சொகுசு பஸ்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டன. நெருக்கடி இல்லாத சொகுசான இருக்கைகளுடன் பல்வேறு தொழில்நுட்ப சமாச்சாரங்கள் சேர்ந்துதான் உங்களது ஒவ்வொரு பயணத்தையும் செம்மையாக்குகின்றன.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

பெங்களூர் - ஜோத்பூர் என்றில்லை, மிக நீண்ட தூர வழித்தடங்களில் தற்போது பெரும்பாலான பஸ் நிறுவனங்கள் இயக்குவது வால்வோ பி9ஆர் மற்றும் பி11ஆர் ஆகிய மாடல்கள்தான். இரண்டுமே மல்டி ஆக்சில் அமைப்புடையதுதான்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

ஆனால், பி11ஆர் பஸ்சின் கடைசி ஆக்சிலில் இருபுறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும் ஒற்றை சக்கரங்கள் முன்புற சக்கரங்கள் திரும்புவதற்கான எதிர்புறத்தில் திரும்பும். இதனால், பஸ்சை குறுகிய சாலைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் செலுத்துவதற்கும், திருப்புவதற்கும் எளிதாக இருக்கும்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

வால்வோ பி9ஆர் பஸ்சைவிட பி11ஆர் பஸ் அதிக நீளம் கொண்டது. இந்த பஸ்களில் 53 பயணிகள் வரை செல்ல முடியும். தற்போது பி11ஆர் பஸ்சின் 9400PX என்ற வால்வோ பஸ் மாடல் இந்தியாவின் மிக நீளமான பஸ் மாடல்களில் ஒன்று. இது 14.5 மீட்டர் நீளம் கொண்டது.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

நீண்ட தூர வழித்தடங்களில் இப்போது இந்த பஸ் மாடலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பஸ்சிலும் ஐ ஷிஃப்ட் கியர்பாக்ஸ் மற்றும் எதிர்புறத்தில் சக்கரங்கள் திரும்பும் அமைப்புடைய பின்புற ஆக்சில் போன்றவை சிறப்பம்சங்களாக உள்ளன.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

நீங்கள் பயணிக்கும் மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களில் பின்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு ஆக்சில்களில் இரண்டாவதாக இருக்கும் ஆக்சிலில் இருபுறத்திலும் தலா ஒரு சக்கரங்கள் இருந்தால், அது திரும்பும் திறன் பெற்றதாக கருதலாம். இந்த பஸ்கள் 180 டிகிரி கோணத்தில் திரும்பும் திறன் கொண்டதாக இருக்கும்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

அதேநேரத்தில், இயக்குவதற்கான செலவீனத்தில் பி9ஆர் பஸ் சிறப்பாக இருப்பதால், பெரும்பாலான மிக நீண்ட தூர வழித்தடங்களில் இந்த பஸ் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக, கட்டணத்தையும் குறைவாக நிர்ணயிக்க முடியும்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

வால்வோ பி9ஆர் பஸ்சில் 340 எச்பி பவரை அளிக்க வல்ல 9.4 லிட்டர் யூரோ-3 மாசு அம்சம் கொண்ட டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐ-ஷிப்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. இ

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

இந்த ஐ ஷிப்ட் கியர்பாக்ஸ் மூலமாக அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான அதிர்வுகள், சிறப்பான செயல்திறன் போன்ற பல தொழில்நுட்ப சாதகங்களை பெற முடிகிறது. இந்த பஸ்களில் மிகசக்திவாய்ந்த டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

அதிக டார்க்கை வழங்கும் திறன் கொண்ட இந்த எஞ்சின்கள் உடனடி பிக்கப்பையும், சிறப்பான செயல்திறன் மூலமாக, அதிவேகத்தில் பயணிக்கும் வாய்ப்பையும் இந்த பஸ்கள் பெறுகின்றன. இந்த பஸ்களில் 300 லிட்டர் மற்றும் 400 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

மேலும், சொகுசான பயணத்தை வழங்குவதற்கு ஏதுவாக ஏர் சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆக்சில்களிலும் ஆன்ரோல் பார் அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால், மிகுந்த பாதுகாப்பான, அதிக நிலைத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

வால்வோ நிறுவனத்தின் இபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், சரிவான சாலைகளில் செல்லும்போது சீராகவும், அதிக நிலைத்தன்மையுடன் பஸ்சை செலுத்தும் வால்வோ காம்பேக்ட் ரிட்டார்டர் என்ற பிரேக் அமைப்பும் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. அவசர சமயத்திற்கு வால்வோ எஞ்சின் பிரேக் சிஸ்டமும், ட்யூப்லெஸ் டயர்களும் தடங்கல் இல்லா பயணங்களை வழங்குகிறது.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

சில மணிநேர பஸ் பயணங்களே அலுத்து போய்விடும் நிலையில், கிட்டத்தட்ட 36 மணிநேர பஸ் பயணம் அலுப்பூட்டுவதாகவே இருக்கும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், இந்த பஸ்களில் பயணிக்கும் பெரும்பாலானோர் எந்த சிரமும் இல்லாமல் பயணித்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

இந்த வழித்தடத்தில் ரூ.1,500 முதல் ரூ.2,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விமானக் கட்டணத்தை ஒப்பிடும்போது இது மிக குறைவு என்பதால் பயணிகள் மிகுந்த வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ரயிலிலும் பொது பெட்டியில் ஏறிக்கொண்டு அவஸ்தை பட வேண்டாம்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

சரியான நேரத்தில் ஓட்டல்களில் இந்த பஸ்கள் நிறுத்தப்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். பலர் தூங்கியே பொழுதை கழித்ததாக தெரிவிக்கின்றனர். வால்வோ பி9ஆக் பஸ் 1,950 கிமீ தூரத்தை 31 மணிநேரத்தில் கடந்துவிட்டதாக பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ஹைதராபாத்- டெல்லி இடையில் நேரடி பஸ் சேவையை துவங்குவதற்கு பஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாம்.

 இந்தியாவின் நீளமான பஸ் வழித்தடத்தில் இயக்கப்படும் வால்வோ பஸ்கள்!

வால்வோ பஸ்களை போன்றே மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஸ்கானியா மல்டி ஆக்சில் பஸ் மாடல்களும் நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பஸ் மாடல்களும் தற்போது வாடிக்கையாளர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன.

வால்வோ பஸ்களில் அவசர கால வழிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விபரம்

வால்வோ பஸ்களில் அவசர கால வழிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விபரம்

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

ரயில் பயணங்கள் இனிமையானதாகவும், சொகுசானதாகவும் கருதப்படுகிறது. அதிலும் சொகுசு ரயிலில் பயணம் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கிறது. ஏனெனில், அந்த ரயில்களில் அளிக்கப்படும் வசதிகளும், சொகுசு அம்சங்களும் பிரம்மிக்க வைக்கின்றன. இதுபோன்று, இந்தியாவில் இயக்கப்படும் டாப்- 5 சொகுசு ரயில்கள் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

01. மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்

நம் நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் டாப் - 10 சொகுசு ரயில்களின் பட்டியலில் இந்த ரயிலும் இடம்பெற்றுள்ளது. நம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு வசதிகளும், சொகுசு அம்சங்களும் இந்த ரயிலில் இருக்கின்றன.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

இந்த ரயிலில் பயணிப்பது 5 நட்சத்திர விடுதியில் தங்குவதற்கான இணையான அனுபவத்தையும், உபசரிப்பையும் தருவதாக இருக்கும்.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

சொகுசான படுக்கை அறை, ரெஸ்ட்டாரண்ட், ரெஸ்ட் ரூம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் என இந்த ரயிலில் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

இந்த ரயில் வடக்கில் டெல்லியிலிருந்தும், தெற்கில் திருவனந்தபுரத்தில் இருந்தும் சுற்றுலா ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ரூ.3.97 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

02. கோல்டன் சாரியாட்

02. கோல்டன் சாரியாட்

புராதன சின்னங்களை இயக்கும் வகையில், கர்நாடக சுற்றுலா கழகம் சார்பில் இயக்கப்படும் சுற்றுலா ரயில் இது. நட்சத்திர ஓட்டலுக்கு இணையாக வடிவமைக்கப்பட்ட 11 சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

உட்புறத்தில் மைசூர் மஹாராஜா அரண்மனையில் இருப்பது போன்ற மர அலங்கார வேலைப்பாடுகள் இந்த ரயிலின் முக்கிய சிறப்பு.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

ஆயுர்வேத மசாஜ் மையம், ரெஸ்ட்டாரண்ட், சொகுசான படுக்கை அறை, உயர்தர உணவு வகைகள் என பயணிகளுக்கு ராஜ உணர்வை அளிக்கும்.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

பெங்களூரில் இருந்து இயக்கப்படும் இந்த ரயிலில் ஓர் இரவுக்கு ரூ.16,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

03. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்

03. ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ்

ராஜஸ்தானில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை இணைக்கும் விதத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

ராஜபுத்திர வம்சத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில், உபசரிப்பு வழங்கப்படுவது இதன் சிறப்பு.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

இசை நிகழ்ச்சியுடன் பயணிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பது இந்த ரயிலின் தனிச்சிறப்பு. வியக்க வைக்கும் அம்சங்களுடன் இன்டீரியர் கவர்கிறது.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

டெல்லியிலிருந்து இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிப்பதற்கு ஒருவருக்கு ரூ.3.78 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

04. பேலஸ் ஆன் வீல்ஸ்

04. பேலஸ் ஆன் வீல்ஸ்

இந்தியாவின் உண்மையான சொகுசு ரயில் என்ற போற்றப்படும் பெருமைக்குரியது பேலஸ் ஆன் வீல்ஸ். உயர்தர உபசரிப்பு, கலாச்சாரம் மற்றும் சொகுசு தன்மைகளை அளிக்கும் இந்த ரயில் குஜராத் ராஜபுத்னா அரச குடும்பத்தினர் மற்றும் ஹைதராபாத் நிஜாம் குடும்பத்தினர் பயன்படுத்திய பெருமைக்குரியது.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

தற்போது மேம்படுத்தப்பட்டு சுற்றுலா ரயிலாக இயக்கப்படுகிறது. ஜெய்ப்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

இந்த ரயிலில் பயணிக்க ஒருவருக்கு ரூ.3.63 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

05. டெக்கான் ஒடிசி

05. டெக்கான் ஒடிசி

ராயல் புளூ என்ற நீல வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் இந்த ரயில் நட்சத்திர விடுதிகளுக்கு இணையான சொகுசு அம்சங்களையும், உபசரிப்பையும் வழங்குகிறது. ராஜ் ஓட்டல் குழுமத்தால் இந்த ரயில் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்கள் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் அம்சங்களை இந்த ரயில் பெற்றிருக்கிறது. மசாஜ் மையம், ரெஸ்ட்டாரண்ட், சொகுசான படுக்கை அறைகளை கொண்டுள்ளது.

இந்தியாவின் டாப்- 5 சொகுசு ரயில்கள்... மயக்கம் போட வைக்கும் கட்டணம்!!

மும்பை மற்றும் டெல்லியில் இருந்து இயக்கப்படுகிறது. ஒருவருக்கு ரூ.4.27 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரயில் பயணங்கள் அலுத்துப்போனவர்கள் இந்த சொகுசு ரயில்கள் புதிய அனுபவத்தை வழங்கும்.

English summary
Interesting Details About India's Longest Bus Route. Read in Tamil.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark