ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

Written By:

ரேடாரில் சிக்காத திறன் படைத்த அதிநவீன போர் விமானங்களை ஐந்தாம் தலைமுறை போர் விமானம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த வகை போர் விமானங்களை உருவாக்கி தங்களது நாட்டின் பாதுகாப்பு பலத்தை உயர்த்துவதுதான் பல நாடுகளின் கனவாக உள்ளது.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

ரேடாரில் சிக்காத திறன் படைத்த முதல் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அமெரிக்கா பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. அமெரிக்காவின் எஃப்-22 போர் விமானத்தை காப்பியடித்து, அண்மையில் சீனாவும் செங்க்டு ஜே-20 என்ற போர் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அண்மையில் வெளியிட்டது.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த வரிசையில், தற்போது ரஷ்யாவும் இணைந்துள்ளது. ரேடார் கண்களுக்கு புலப்படாத திறன் படைத்த புதிய போர் விமானத்தை ரஷ்யா வெளியிட்டு இருக்கிறது. எஸ்யூ-57 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய போர் விமானத்தின் தொழில்நுட்ப சிறப்புகள் மற்றும் இதர தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம். எனவே, இந்த போர் விமானத்திற்கு எஸ்யூ-57 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தை எதிரி நாடுகளின் ரேடார்கள் கண்டுபிடிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

Recommended Video
Jeep Compass Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த விமானம் இரட்டை எஞ்சின் கொண்டது. மணிக்கு 2,600 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. அமெரிக்காவின் எஃப்- 22 மற்றும் சீனாவின் ஜே-20 போர் விமானங்களைவிட வேகமாக செல்லும் திறன் படைத்தது என்று ரஷ்யா மார் தட்டுகிறது.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

அதிகபட்சமாக 20 கிமீ உயரத்தில் பறக்கும் திறன் பெற்றிருக்கிறது. எதிரி நாட்டு வான் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், எதிரிகளின் இலக்கை தாக்கி அழிப்பதற்குமான திறன்களையும் கொண்டுள்ளது இந்த போர் விமானம்.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த விமானத்தில் அதிநவீன மின்னணு கட்டுப்பாட்டு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், கட்டுப்படுத்துவது மிக எளிதாக இருக்கும். அதேபோன்று, ஒருவேளை விமானத்தை குறிவைத்து வரும் ஏவுகணை தாக்குதல்களை கண்டறிவதற்கான நவீன ரேடார் சாதனங்களும் உள்ளன.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த விமானத்தில் கே-77எம் என்ற ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கும். இவை அதிகபட்சமாக 201 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்குகளை அழிக்கும் திறன் வாய்ந்தது.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த ஆண்டு இறுதியில் 6 எஸ்யூ- 57 போர் விமானங்கள் ரஷ்யா விமானப் படைக்கு சோதனை செய்வதற்காக வழங்கப்பட உள்ளன. அடுத்து ஓர் ஆண்டிற்கு மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். வரும் 2019ம் ஆண்டில் இந்த புதிய போர் விமானம் ரஷ்ய விமானப்படையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த போர் விமானத்தின் மிக முக்கிய சிறப்பு, அமெரிக்கா மற்றும் சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை விட இது உற்பத்தி செலவீனம் குறைவானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு விமானத்தை உற்பத்தி செய்ய 120 மில்லியன் பவுண்ட்டுகள் செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இதனிடையே, வரும் 2019ம் ஆண்டில் மொத்தமாகவே 12 எஸ்யூ- 57 போர் விமானங்களை ரஷ்ய விமானப்படை வாங்க இருப்பதாகவும், அதிகபட்சமாக 60 விமானங்களை மட்டும் கொள்முதல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக ஆர்டர்கள் இல்லாதததால், இந்த விமானம் தோல்வியடைந்த மாடலாக உலக பாதுகாப்புத் துறை நிபுணர்களால் சொல்லப்படுகிறது.

 ரேடாரில் சிக்காத ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா!

இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமான தொழில்நுட்பத்தை ரஷ்யாவின் சுகோய் நிறுவனம் பெற்றிருப்பது, இந்தியாவுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் விஷயமாக கருதலாம். ஏனெனில், இந்தியாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும், இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும்தான் இணைந்து உருவாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Details About Russia's SU-57 Fighter Jet.
Story first published: Friday, August 18, 2017, 12:48 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos