ஷெல் ஆயில் நிறுவனத்துக்காக தயாராகும் உலகின் மிகப்பெரிய கப்பல்

By Saravana

உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையை ப்ரீலூட் என்று பெயரிடப்பட்ட கப்பல் பெற்றுள்ளது. கடலில் உள்ள எண்ணெய் கிணறுகளிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுத்து அதனை சேமிக்கும் வசதிகளுடன் இதனை கட்டமைத்துள்ளனர்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஷெல் ஆயில் நிறுவனத்துக்காக இந்த கப்பலை தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கட்டமைத்து கொடுக்கிறது. பிரம்மாண்டமான மிதக்கும் தொழிற்சாலையாக செயல்பட இருக்கும் இந்த கப்பலை பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.


கூடுதல் விபரம்

கூடுதல் விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் கூடுதல் தகவல்களை காணலாம்.

 வடிவம்

வடிவம்

இந்த கப்பல் 1,601 அடி நீளமும் 243 அடி அகலமும், 360 அடி உயரமும் கொண்டது. முழுமையாக பாரம் ஏற்றப்பட்ட நிலையில், இதன் எடை 6 லட்சம் டன்னாக இருக்கும்.

எரிவாயு உற்பத்தி

எரிவாயு உற்பத்தி

ஆண்டுக்கு 3.6 டன் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்யும்.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

கடலில் இருக்கும் எண்ணெய் கிணறுகளிலிருந்து இயற்கை எரிவாயுவை எடுத்து அதனை -260 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சேமிக்கும் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

சேமிப்பு தொட்டிகள்

சேமிப்பு தொட்டிகள்

175 நீச்சல் குளங்களுக்கு நிகரான அளவு இயற்கை எரிவாயு சேமிப்புத் தொட்டிகள் இந்த கப்பலில் உள்ளன.

 வடிவமைப்பு

வடிவமைப்பு

தென்கொரியாவிலுள்ள ஜியோஜ் என்ர இடத்திலுள்ள சாம்சங் ஹெவி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் இந்த கப்பல் கட்டமைக்கப்பட்டது. இந்த கப்பல் இரண்டு பாகமாக கட்டமைக்கப்பட்டு பிறகு ஒன்றிணைக்கப்பட்டது.

 சிறப்பு பாதுகாப்பு

சிறப்பு பாதுகாப்பு

கடும் சூறாவளி மற்றும் மோசமான வானிலைகளை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பாதுகாப்பு வசதிகளை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

பார்ஜர் உதவி

பார்ஜர் உதவி

பார்ஜர் எனப்படும் இழுவைக் கப்பல்கள் மூலமாகவே இதனை இழுத்துச் செல்ல முடியும்.

2016ல் டெலிவிரி

2016ல் டெலிவிரி

வரும் 2017ம் ஆண்டு முதல் இந்த கப்பலில் எரிவாயு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய பகுதியின் கடலிலுள்ள எண்ணெய் கிணறுகளிலிருந்து எரிவாயு எடுக்க 25 ஆண்டுகளுக்கு இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என ஷெல் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
The largest floating vessel in the world has taken to the water for the first time in South Korea. At a length of 1,601 feet, the Prelude, which is owned by Shell, is 150 feet longer than the Empire State Building is high.
Story first published: Monday, September 1, 2014, 15:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X