முதல்முறையாக இந்தியா வந்த நவீன ஏர்பஸ் ஏ350 விமானத்தின் சிறப்புகள்!

உலகின் அதிநவீன விமான மாடல்களில் ஒன்றான ஏர்பஸ் ஏ350-900 விமானம் முதல்முறையாக இந்தியா வந்தது. இந்த விமானத்தின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

உலகின் மிகவும் நவீன விமான மாடல்களில் ஒன்றாக புதிய ஏர்பஸ் ஏ350-900 விமானம் சந்தைக்கு வந்துள்ளது. இந்த விமானத்தை முதலாவதாக மூனிச்- டெல்லி வழித்தடத்தில் அறிமுகம் செய்துள்ளது லூஃப்தான்ஸா விமான நிறுவனம்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

கடந்த சனிக்கிழமை மூனிச் நகரிலிருந்து டெல்லிக்கு முதலாவது சர்வீஸை அந்த விமானம் துவங்கியது. இந்த சர்வீஸ் துவக்க விழாவை மூனிச் விமான நிலையத்தில் வெகு விமரிசையாக நடத்தியது லூஃப்தான்ஸான் நிறுவனம். அனைவரின் கவனத்தையும் இந்த விமானம் ஈர்த்துள்ளதற்கான சில காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

சர்வீஸ் துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை லூஃப்தான்ஸா டெலிவிரி பெற்றுள்ளது. அதில், முதலாவது விமான சர்வீஸ் மூனிச்- டெல்லி இடையே துவங்கி உள்ளது. இந்த விமானமானது நீண்ட தூர வழித்தடத்தில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

போயிங் 777 மற்றும் 787 ட்ரீம்லைனர் மாடல்களுக்கு போட்டியாக இந்த விமானம் களமிறக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட விமான மாடலாகவும், இது நிச்சயம் பைலட்டுகளுக்கும், பயணிகளுக்கும் சிறப்பான அனுபவத்தை தரும் என்றும் இந்த விமானத்தை சோதனை செய்த லூஃப்தான்ஸா நிறுவன பைலட்டுகள் புகழ்ந்து கூறியுள்ளனர்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

கடந்த 2006ம் ஆண்டு ஏர்பஸ் ஏ350 விமான மாடல் அறிவிக்கப்பட்டது. ஏ-350-800, ஏ350-900 மற்றும் ஏ-350-1000 ஆகிய மூன்று மாடல்களில் இந்த விமான மாடல் பயன்பாட்டை பொறுத்து வடிவமைக்கப்பட்டது. இதில், நடுத்தர வகை மாடல்தான் ஏர்பஸ் ஏ350-900 மாடல். இனி நீண்ட தூர வழித்தடங்களில் இந்த விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைக்கும்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தில் 293 பயணிகள் செல்ல முடியும். இந்த விமானத்தில் 48 பிசினஸ் க்ளாஸ் இருக்கைகளும், 21 பிரிமியம் எக்கனாமி வகுப்பு இருக்கைகள், 224 எக்கனாமி வகுப்பு இருக்கைகளும் உள்ளன.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தில் நவீன வகை மூட் லைட் என்ற விளக்கு அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது பயணத்தின்போது மிக இனிமையான அனுபவத்தை தரும். இதுதவிர, மிக சொகுசான இருக்கைகளும் இந்த விமானத்தில் இருக்கின்றன. டிவி திரைகளுடன் இந்த விமானத்தை கஸ்டமைஸ் செய்து வாங்கி உள்ளது லூஃப்தான்ஸா நிறுவனம்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தின் உடற்கூடு நவீன கார்பன் ஃபைபர் பாகங்களின் கட்டுமானத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உறுதியானதாகவும், அதேநேரத்தில் இலகுவானதாகவும் இருக்கிறது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை இந்த விமானம் தரும்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

இந்த விமானம் 219 அடி நீளமும், 212.4 அடி அகலமும் உடையது. 55.9 அடி உயரத்துடன் வடிவமைக்கப்பட்டுல்ளது. உடற்கூடு மட்டும் 20 அடி உயரமும், 18.4 அடி அகலமும் கொண்டது. அதிகபட்சமாக 280 டன் எடையுடன் பறக்கும்.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தில் இரண்டு ரோல்ஸ்ராய்ஸ் ட்ரென்ட் எக்ஸ்டபிள்யூபி எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 374.5 கேஎன் முன்னோக்கு விசையை அளிக்க வல்லது. இந்த விமானமானது அதிகபட்சமாக மணிக்கு 1,098 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

 ஏர்பஸ் ஏ350-900 விமானம்: சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தில் 1.41 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் அதிகபட்சமாக 15,100 கிமீ தூரம் வரை செல்லும். ஏறும்போது 7,200 அடி நீள ஓடுபாதையும், இறங்கும்போது 6,450 அடி நீள ஓடுபாதையும் தேவைப்படும். இந்த விமானத்தை இனி பரவலாக காண முடியும்.

புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் படங்கள்!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
English summary
Interesting Facts About Airbus A350-900 Aircraft.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X