விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் குறித்து அறியாத சுவாரஸ்யங்கள்!

Written By:

நாட்டின் படை பலத்தை பரைசாற்றுவதிலும், வான் மற்றும் கடல் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மேலும், இவை மிதக்கும் போர் விமானப்படை தளமாக செயல்படுவதால், உலகின் எந்த பகுதிக்கும் கொண்டு செல்லககூடிய நகரும் படைத்தளமாகவும் பயன்படுத்த முடியும்.

மிகுந்த பொருட்செலவில் கட்டப்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்கும் நாடுகள் கடற்படை பலத்தில் செல்வாக்கு மிகுந்ததாக இருக்கின்றன. தற்காப்பு ஆயுதங்கள், கண்காணிப்பு சாதனங்கள், படைக்கலன்கள் மற்றும் போர் விமானங்களை நிறுத்துவதற்கும், அவற்றை வானில் எழும்புவதற்கும், தரையிறங்குவதற்கும் ஓடுதளத்துடன் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்படும் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. நோட்டமிட...

01. நோட்டமிட...

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கடற்படை கப்பல்களிலிருந்து எதிரி நாட்டு போர்க்களங்களை நோட்டமிடுவதற்காக பலூன்கள் ஏவப்பட்டன. இந்த நிலையில், 1903ம் ஆண்டு இறக்கையுடன் கூடிய விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டவுடன், அதனை ஏற்றி, தரையிறக்கும் வசதியுடன் அமெரிக்க கடற்படையில் பர்மிங்ஹாம் என்ற கப்பல் உருவாக்கப்பட்டது. 1910ம் ஆண்டு இந்த கப்பலில் இருந்து முதல்முறையாக விமானம் இயக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஜப்பானும் இதுபோன்ற கப்பலை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் உலகப்போரில்தான் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் செயல்பாடுகள் பெரிதும் கைகொடுத்தன.

 02. நீர்மூழ்கி

02. நீர்மூழ்கி

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் நீர்மூழ்கி விமானம் தாங்கி கப்பல்களை பயன்படுத்தியது. மூன்று போர் விமானங்களை தாங்கிச் செல்லும் வசதி கொண்ட இந்த நீர்மூழ்கி கப்பல்கள் கடலின் மேற்புறத்தில் வந்து விமானங்களை மேலே சென்றபின் உடனடியாக தண்ணீருக்குள் மூழ்கி விடும். உலகின் எந்தமூலைக்கும் எதிரிகளின் கண்களுக்கு தெரியாமல் போர் விமானங்களை கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த நீர்மூழ்கி விமானம் தாங்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.

02. பவர்ஃபுல்

02. பவர்ஃபுல்

உலகின் அனைத்து நாடுகளின் விமானப்படைகளின் பலத்தை ஒப்பிடுகையில், அமெரிக்காவின் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலின் பலம் 70 சதவீதமாம்.

 03. ஆன்லைனில்...

03. ஆன்லைனில்...

ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான eBay தளத்தில் தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை விற்பனை செய்வதற்கு பிரேசில் முயற்சித்தது.

04. இயக்குதல் செலவு

04. இயக்குதல் செலவு

அமெரிக்காவின் புதிய ஃபோர்டு கிளாஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலை இயக்குவதற்கு நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் டாலர் செலவாகிறதாம். அதாவது, கார் வாங்குவதைவிட அதை பராமரிப்பதுதான் கஷ்டம் என்பதுபோலத்தான். இதனை வாங்குவதைவிட இதனை இயக்குவதற்கு தனி பட்ஜெட் போட வேண்டியிருப்பதாலேயே, பல நாடுகள் தள்ளி நிற்கின்றன.

 05. எரிபொருள் தேவை

05. எரிபொருள் தேவை

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்காவின் நிமிட்ஸ் கிளாஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் போதுமானது.

07. விமானிகளுக்கு பயிற்சி

07. விமானிகளுக்கு பயிற்சி

இரண்டாம் உலகப்போரின்போது விமானிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஏரியில் வைத்து இயக்கக்கூடிய இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை அமெரிக்கா பயன்படுத்தியது.

08. அணுசக்தி கப்பல்

08. அணுசக்தி கப்பல்

அமெரிக்காவை தவிர்த்து உலகிலேயே அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி கப்பலை கட்டமைத்திருக்கும் ஒரே நாடு பிரான்ஸ்.

09. சூதாட்ட விடுதி

09. சூதாட்ட விடுதி

சீனாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் உக்ரைன் நாட்டிலிருந்து வாங்கப்பட்டது. 1998ல் அந்த கப்பலை சீன தொழிலதிபர் ஒருவர் வாங்கி சூதாட்ட விடுதியாக பயன்படுத்தி வந்தார். பின்னர், அது விமானம் தாங்கி போர்க்கப்பலாக மாற்றப்பட்டது.

10. ஹெர்குலிஸ்

10. ஹெர்குலிஸ்

உலகின் மிகப்பெரிய ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்களில் ஒன்றான ஹெர்குலிஸ் சி130 விமானம், விமானம் தாங்கி போர்க்கப்பலில் தரையிறங்கி, மேலே எழும்பும் திறன் கொண்டது.

 11. அம்மாடியோவ் கட்டணம்

11. அம்மாடியோவ் கட்டணம்

டாப் கன் சினிமாவின் இயக்குனர் விமானம் தாங்கி போர்க்கப்பலில் படப்பிடிப்பு நடத்தினார். அப்போது, சூரியன் உதிப்பதை பின்புலத்தில் இருக்குமாறு படமாக்குவதற்காக விமானம் தாங்கி கப்பலை திசை மாற்றக்கூறினார். அதற்காக 25,000 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த காட்சி 5 நிமிடங்கள் மட்டுமே படமாக்கப்பட்டது.

12. ஐடியா

12. ஐடியா

1960ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு ஆஸ்திரேலியாவின் கடல் பணியாளர் சம்மேளனம் ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, விமானங்களை கப்பலுடன் சங்கிலியால் பிணைத்து கட்டினர். பின்னர், விமான எஞ்சின்களை இயக்கி, அதிலிருந்து கிடைத்த உந்து சக்தியை வைத்து கப்பலை துறைமுகத்தில் நிறுத்தினர்.

13. மின்சார சப்ளை

13. மின்சார சப்ளை

1929ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் உள்ள டகோமா நகருக்கு யுஎஸ்எஸ் லெக்ஸிங்டன் சிவி-2 விமானம் தாங்கி கப்பல்தான் ஒரு மாதத்திற்கு மின்சார சப்ளையை வழங்கியது.

14. கடத்தல் நாடகம்

14. கடத்தல் நாடகம்

கடந்த 1957ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் யுஎஸ்எஸ் பெனிங்டன் விமானம் தாங்கி போர்க்கப்பலில் சிட்னி பல்கலையை சேர்ந்த 10 மாணவர்கள் கடத்தல்காரர்கள் போன்று வேடமணித்து நுழைந்தனர். மேலும், கப்பலை கைப்பற்றியதாகவும் அவர்கள் அறிவித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள் கப்பலை விட்டு இறக்கப்பட்டதுடன், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

15. டைட்டானிக் போன்றே...

15. டைட்டானிக் போன்றே...

உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை ஜப்பான் கட்டியது. முதல் பயணத்தின்போதே இந்த போர்க்கப்பல் கடலில் மூழ்கியது.

16. தண்ணீர் உற்பத்தி

16. தண்ணீர் உற்பத்தி

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் கேலன் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் கட்டமைப்பு வசதி கொண்டது.

17. கப்பலுக்குள் தீவு

17. கப்பலுக்குள் தீவு

விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் மேல்பகுதியில் உள்ள உத்தரவு மையத்தை The Island என்று குறிப்பிடுகின்றனர்.

18. குத்து

18. குத்து

விமானம் தாங்கி கப்பல்களிலிருந்து போர் விமானத்தை வெறும் 2 வினாடிகளில் 300 கிமீ வேகத்தில் ஏறுவதற்கு புறப்படும்போதும், இறங்கும்போது கொக்கி போன்ற அமைப்பு விமானத்தை இழுத்து நிறுத்தும்போது, முகத்தில் குத்து விடுவது போன்று இருக்கும் என விமானிகள் கூறுகின்றனர்.

19. பிரம்மாண்டம்

19. பிரம்மாண்டம்

ஒவ்வொரு விமானம் தாங்கி போர்க்கப்பலிலும் போர் விமானங்களை நிறுத்துவதற்கான இடம், அதனை பழுது பார்ப்பதற்கான ஒர்க்ஷாப், பணியாளர்கள் தங்கும் அறைகள், சாப்பாட்டுக்கூடம், கட்டுப்பாட்டு அறை, மாலுமி அறை, பொருட்களுக்கான அறை, ஆயுத அறை, தளவாடங்கள் என ஒரு மிதக்கும் நகரமாகவே இருக்கும். சில விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் 90 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை கூட நிறுத்த முடியும். 5,000 பணியாளர்களை கொண்டிருக்கும். அதாவது, வர்ணிக்க முடியாத அளவு பிரம்மாண்டமானவையாக இருக்கின்றன.

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!!

உலகின் மிகப்பெரிய டாப்- 10 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!!

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Facts About Aircraft Carriers.
Story first published: Wednesday, May 25, 2016, 14:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark