விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

விமானங்கள் மற்றும் விமானத் துறை வரலாற்றில் இருக்கும் சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய பரபரப்பான உலகில் விமானப் போக்குவரத்து மிக இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பஸ், கார்களைவிட பலர் இன்று விமானங்களில்தான் அதிகம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், விமானங்கள் மற்றும் விமானத் துறையில் இருக்கும் சில சுவாரஸ்யங்களின் தொகுப்பை இந்த செய்தியில் காணலாம்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

விமானத்தின் விண்ட்ஷீல்டு எனப்படும் முன்பக்க கண்ணாடி மிகவும் காஸ்ட்லியானது. உதாரணத்திற்கு, போயிங் 747-400 விமானத்தின் விண்ட்ஷீல்டின் விலையில் ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு காரையே வாங்கிவிடலாமாம்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

சர்வதேச விமான ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அவசர சமயங்களில் அனைத்து விமானங்களும் உள்ளே இருக்கும் பயணிகளை வெறும் 90 வினாடிகளில் வெளியேற்றுவதற்கான வசதியை பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஏன் என்றால் விமானத்தில் தீப்பிடித்துக் கொண்டால், ஒன்றரை நிமிடங்களில் அது விமானம் முழுவதுமாக பரவும் வாய்ப்பு இருப்பதுதான் காரணம்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

விமானங்களில் மிக அதிக அளவு மின்சார வயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. போயிங் 747 விமானத்தில் மட்டும் கிட்டத்தட்ட 240 கிமீ முதல் 280 கிமீ நீளமுடைய மின்சார வயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

உலகின் மிகப்பெரிய ராணுவ பயன்பாட்டு விமானம் சி-5. உலகின் மிக நீளமான இந்த விமானம் 143 அடி நீளம் கொண்டது. இந்த விமானத்தை செங்குத்தாக நிறுத்தினால், அது 6 அடுக்குமாடி கட்டடத்தை விட பெரியதாக இருக்கும்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

நீண்ட தூர விமானங்களில் பல டன் எடையுடைய எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக பிரம்மாண்ட எரிபொருள் கலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. போயிங் 767 விமானத்தின் கலன்களில் இருக்கும் எரிபொருள் மூலமாக 1,400 மினி வேன்களுக்கு எரிபொருள் நிரப்பி விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

அதேபோன்று, போயிங் கேசி-135 விமானத்தில் பின்புறத்தில் 8 சக்கரங்களும், முன்புறத்தில் 2 சக்கரங்களும் இருக்கின்றன. இந்த 10 டயர்களுக்கு தேவையான மூலப்பொருட்களில் இருந்து 100 கார்களுக்கு தேவையான டயர்களை தயாரித்து விட முடியுமாம்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

வளி மண்டலத்தில் விமானங்களில் இருந்து வெளியேறும் கரிய மில வாயு காரணமாக வானில் காற்றழத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், அதனால் டர்புலென்ஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் மூலமாக தெரிய வந்துள்ளது.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

வர்த்தக ரீதியிலான விமான நிலையங்களில் 2 அடி முதல் 4 அடி கனத்திற்கு அஸ்பால்ட் கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு இருக்கும். டாக்சி வே தடங்கள் 18 இன்ச் தடிமனுக்கு கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு இருக்கும். இதனால், விமானங்களின் எடையை வெகுவாக இந்த தளங்கள் தாங்கும் வலிமை கொண்டதாக இருக்கின்றன.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

ஏர்பஸ் நிறுவனம் 360 கோணத்தில் வெளிப்புறத்தை பயணிகள் பார்க்கும் வகையில் ஒரு டிரான்ஸ்பரண்ட் விமானத்தை உருவாக்கி வருகிறது. இது பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

வேறு எந்த பணியில் இருப்பவர்களைவிட, விமானப் பணிப்பெண்கள் மீதுதான் பயணிகள் பலருக்கும் கண்டதுமே காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறதாம். இதுவும் ஆய்வு முடிகள் மூலமாக தெரிய வந்துள்ளது.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

விமானங்கள் விபத்தில் சிக்கும்போது ஏற்படும் உயிரிழப்புகளைவிட, அவை வெளியிடும் நச்சுப் புகை பாதிப்பால்தான் அதிகம் பேர் உயிரிழக்கின்றனராம். ஆண்டுக்கு 10,000 பேர் வரை விமானங்கள் வெளியிடும் நச்சுப்புகை பாதிப்பால் உயிரிழப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

கடந்த 1986ம் ஆண்டு வாயேஜர் என்ற விமானம் எங்கும் தரையிறங்காமலும், எரிபொருள் நிரப்பாமலும் உலகை வலம் வந்து சாதனை படைத்தது. அந்த விமானம் 42,432 கிமீ தூரத்தை 9 நாட்களில் கடந்தது குறிப்பிடத்தக்கது. டிக் ருடான் மற்றும் ஜியானா யாகேர் என்ற இரண்டு பைலட்டுகள் அந்த விமானத்தை இயக்கினர்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

ஆய்வுகளின்படி, 80 சதவீத விமான விபத்துக்கள் பெரும்பாலும் டேக் ஆஃப் செய்த பின் 3 நிமிடங்களிலும், தரை இறங்குவதற்கு 8 நிமிடங்கள் முன்பாகவும் நடப்பதாக தெரிய வந்துள்ளது.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

விமானம் பறக்கும்போது மட்டுமே ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கி விமான கட்டுப்பாட்டு நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேல் எழும்போதும், தரை இறங்கும்போது பைலட்டுகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். டர்புலன்ஸ் ஏற்படும் சமயங்களில் ஆட்டோபைலட் சிஸ்டத்தை அணைத்துவிட்டு, பைலட்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் விமானத்தை எடுத்துக் கொள்வர்.

விமானங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களின் தொகுப்பு!

உலகின் மிக மோசமான விமான விபத்து 1977ம் ஆண்டு டெனிரிஃப் தீவில் நடந்தது. அந்த தீவில் உள்ள விமான நிலைய ஓடுபாதையில், 600 பயணிகளுடன் எதிர் எதிர் திசையில் வந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில், 500 பேர் உயிரிழந்தனர்.

Most Read Articles
English summary
Interesting Facts About Airplanes- Part 3.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X