உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

போர் என்றவுடன் டாங்கிகள், போர் விமானங்கள், போர் கப்பல்கள் குறித்துத்தான் பேச்சு எழும். ஆனால், இந்த வகையில் ரயில் என்பது இரண்டாம் வகை பயன்பாட்டுக்கான சாதனமாகவே ராணுவத்திடம் இருக்கும்.

ஆனால், கவச வாகனங்கள் போன்று உலகின் பல்வேறு நாடுகளில் கவச ரயில்களும் பல போர்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அவை பற்றிய தகவல்கள் இங்கே அரிதாகவே இருக்கின்றன. அந்த வகையில், ராணுவ பயன்பாட்டில் இருந்த கவச ரயில்கள் பற்றிய சிறப்புச் செய்திகளையும், சுவாரஸ்யங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

1861-1865ம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது முதல்முறையாக கவச ரயில்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அடுத்து, 1870-1871 ஆண்டுகளுக்கு இடையே பிரான்ஸ் மற்றும் பிரஷ்யா [தற்போதைய ஜெர்மனி] இடையிலான யுத்தத்தின்போதும் இந்த கவச ரயில்கள் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

அடுத்து மெக்ஸிகன் புரட்சி, முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் காலக்கட்டங்களிலும் இந்த கவச ரயில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடைசியாக, 1990களில் யூக்கோஸ்லோவாக்கியா நாட்டு உள்நாட்டு போரிலும் தென்பட்டுள்ளது.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

எதிரிகளின் தாக்குதல்களை முறியடித்து முன்னேறிச் செல்லும் வகையில் வெடிகுண்டு தாக்குதல்களிலும் சேதமடையாத கட்டமைப்பு, எதிரிகளின் மீது பதில் தாக்குதல் நடத்தி நிலை குலைய செய்யும் பீரங்கி அல்லது எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட வண்டிகள் கவச வாகனங்களாக பயன்பாட்டில் உள்ளன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

கவச ரயில்களில் மிகப்பெரிய பீரங்கிகள் மற்றும் எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ராணுவ துருப்புகளையும் பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு இந்த கவச ரயில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

சில கவச ரயில்கள் வெறும் எஞ்சினிலயே பீரங்கிகளை பொருத்தி பயன்படுத்தியிருக்கின்றனர். சில கவச ரயில்களில் பல கவச ரயில் பெட்டிகளை இணைத்தும் பயன்படுத்தியிருக்கின்றனர்.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

அந்த காலத்தில் கவச ரயில்களில் பொருத்தப்பட்ட நீராவி எஞ்சின்களில் சில விசேஷ தொழில்நுட்ப வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களில் சேதமடையாத வகையில் சில விசேஷ பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

ரயில் எஞ்சின் முன்னால் இணைக்கப்பட்டிருந்தபோது, எதிரிகளின் தாக்குதலின்போது சேதமடைந்து பாதிப்பை சந்தித்ததால், சில கவச ரயில்களில் எஞ்சின் பின்புறம் இணைக்கப்பட்டது. அதாவது, முன்புறம் முட்டி தள்ளிக் கொண்டு போவது போல் இணைக்கப்பட்டது.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த கவச ரயில்களில் பெரிய பீரங்கிகள், எந்திர துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கான லாஞ்சர்களும் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும், ராணுவ துருப்புகளை ஏற்றிச் செல்வதற்கான ரயில் பெட்டிகளில் கூட எந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

சில கவச ரயில்களில் விமானங்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை முறியடிக்கும் ஏவுகணைகளை ஏவும் வசதியும் இருந்தன. சில கவச ரயில்கள் போர் சமயத்தில் உத்தரவு பிறப்பிக்கும் மையமாகவும் பயன்படுத்தப்பட்டன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

எளிதாக கீழே கவிழாத தொழில்நுட்பத்துடன் இந்த கவச ரயில்கள் தயாரிக்கப்பட்டன. அத்துடன், ரயில் தண்டவாளங்களை எதிரிகள் பயன்படுத்தாத வகையில், அவற்றை நீக்குவதற்கான கருவிகளும் இந்த கவச ரயில்களில் இருந்தன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

ராணுவ துருப்புகள் மட்டுமின்றி, ராணுவ வாகனங்களும் இந்த கவச ரயில்களில் வைத்து எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டன. மேலும், ஏவுகணைகள், வெடிகுண்டுகளும் இந்த ரயில்களில் வைத்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. எனவே, இவை பல்வகை பயன்பாட்டு கவச ரயில்களாக கூறப்பட்டன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த கவச ரயில்களை எதிரிகள் அவ்வளவு எளிதில் தாக்க முடியாது. ஆனால், அது செல்லும் பாதையை கண்டறிந்துவிட்டால், அந்த தண்டவாளத்தை விமானம் மூலமாக துல்லியமாக தகர்க்கும் வாய்ப்பு இருந்து வந்தது.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!

மேலும், தரையில் எளிதாகவும், விரைவாகவும் செல்லும் டாங்கிகளின் வருகையும், இதர கவச வாகனங்களின் வருகையும் இந்த கவச ரயிலுக்கான முக்கியத்துவத்தை மதிப்பிழக்கச் செய்தன.

கவச ரயில்கள்... சுவாரஸ்யத் தகவல்கள்!
English summary
Interesting Facts About Armoured Train. Read in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark