இந்தியாவின் நம்பர்-1 சொகுசு கார் தயாரிப்பாளர் ஆடி - சில சுவாரஸ்யங்கள்

இந்தியாவின் நம்பர்-1 சொகுசு கார் தயாரிப்பாளர் என்ற இடத்தை பிடித்துள்ள ஆடி நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படுகிறது. 2004ம் ஆண்டு முதல் இந்தியாவில் கார் விற்பனை செய்து வந்தாலும், முறைப்படி 2007ல் ஆடி நிறுவனம் இந்தியாவில் ஸ்தாபிதமானது.

சொகுசு கார் தயாரிப்பில் தனது சக நாட்டு போட்டியாளர்களான பிஎம்டபிள்யூ மற்றும் பென்ஸ் நிறுவனங்களை குறுகிய காலத்தில் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

ஆடி நிறுவனர்

ஆடி நிறுவனர்

1899ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் ஆடி நிறுவனத்தை ஆகஸ்ட் ஹார்ச் என்பவர் துவங்கினார். ஆனால், ஆடி நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆகஸ்ட் ஹார்ச் நிறுவனத்திலிருந்து விலகினார். 1909ல் இரண்டாவது ஆட்டோமொபைல் நிறுவனத்தை ஆகஸ்ட் ஹார்ச் துவங்கினார். பின்னர், 1932ம் ஆண்டு ஆடி, ஹார்ச், வான்டரர் மற்றும் டிகேடபிள்யூ உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இணைத்து ஆட்டோ யூனியன் என்ற புதிய பிராண்டாக மாறியது.

சின்னம்

சின்னம்

1932ல் ஆட்டோ யூனியன் நிறுவனமாக மாறியபோது 4 நிறுவனங்கள் இணைந்திருப்பதை குறிக்கும் வகையில், 4 வளையங்கள் இணைந்திருப்பது போன்ற சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவும் பவேரியாதான்

இதுவும் பவேரியாதான்

பிஎம்டபிள்யூவின் பிறப்பிடமான அதே பவேரியாவில்தான் ஆடியின் தலைமையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

பிளிரும் டிடி

பிளிரும் டிடி

பெர்ஃபார்மென்ஸ் கார்களில் அதன் எக்ஸாஸ்ட் குழாயின் வடிவமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, ஆடி டிடி காரை 5 இஞ்ச் அளவு கொண்ட புகைபோக்கி குழாயுடன் அறிமுகம் செய்தது ஆடி.

ஆடி அர்த்தம்

ஆடி அர்த்தம்

ஆடி என்றால் லத்தீன் மொழியில் ' செவி மடுத்து கேள்' என்று அர்த்தமாம். இதற்கு ஜெர்மன் மொழியில் ஹார்ச் என்று கூறுகின்றனர். ஆடியின் உரிமையாளர் பெயர் ஹார்ச்சின் பெயரிலேயே நிறுவனத்திற்கும் பெயரிடப்பட்டுள்ளதாம்.

தையலோ தையல்

தையலோ தையல்

ஆடி ஏ8 காரில் லெதர் இன்டிரியர்களில் மொத்தம் 36,520 தையல்கள் போடப்பட்டிருக்கிறதாம்.

எக்ஸ்ரே செக்கப்

எக்ஸ்ரே செக்கப்

மனிதரின் உடலில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிவது போன்று, ஆடி ஏ8 கார் தயாரிக்கப்பட்டு வெளிவரும்போது ஏதெனும் குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டறிய எக்ஸ்ரே மெஷின் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

முதல் கிராஷ் டெஸ்ட்

முதல் கிராஷ் டெஸ்ட்

1938ல் உலகின் முதல் கிராஷ் டெஸ்ட் சோதனையை ஆடிதான் செய்தது. விபத்தில் சிக்கினால் கார் என்னவாகும், பயணிகளின் பாதுகாப்பு என்ன என்பதை அறிந்துகொள்ளும் விதமாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதிலும் முதல்

இதிலும் முதல்

1980ல் ஆடி ராலி ரேஸ் கார்களில் முதன்முறையாக டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டது.

மாறுவேடம்

மாறுவேடம்

1994ல் தயாரிக்கப்பட்ட டிஎஸ்2 ஆடி ஆர்எஸ் காரின் பெரும் பகுதி போர்ஷேவால் வடிவமைக்கப்பட்டது. இதனால், கிரில், பிரேக்குகள் மற்றும் டெயில்கேட் பகுதிகளில் போர்ஷே சின்னம் போடப்பட்டிருந்தது.

ஃபோக்ஸ்வேகன்

ஃபோக்ஸ்வேகன்

1965ல் டெய்ம்லர் வசமிருந்து ஆடியை ஃபோக்ஸ்வேகன் குழுமம் வாங்கியது. தற்போது 99.5 சதவீத பங்குகள் ஃபோக்ஸ்வேகன் வசம் இருக்கிறது.

டுகாட்டியை வாங்கிய ஆடி

டுகாட்டியை வாங்கிய ஆடி

புகழ்பெற்ற இத்தாலிய சூப்பர் பைக் நிறுவனமான டுகாட்டியை கடும் போட்டிக்கு இடையில் கடந்த ஆண்டு ஆடி நிறுவனம் கையகப்படுத்தியது.

ஆடி பைக்

ஆடி பைக்

கார் தயாரிப்பு மட்டுமின்றி, தற்போது டுகாட்டியின் ஒத்துழைப்புடன் புதிய எலக்ட்ரிக் பைக்கை வடிவமைக்கும் பணிகளில் ஆடி ஈடுபட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

ஆடியின் எல்இடி பகல்நேர விளக்குகளும், ஹெட்லைட்டும் பிரபலமானது. இதை பார்த்து பல நிறுவனங்கள் சிறிய மற்றும் நடுத்தர ரக கார்களில் இதை பின்பற்றத் துவங்கியுள்ளன.

ஆடியின் முதல் கார்

ஆடியின் முதல் கார்

ஆடியின் முதல் கார் டி டைப்.

இந்தியாவில் ஆடி

இந்தியாவில் ஆடி

இந்தியாவில் ஆடி நிறுவனம் ஏ4, ஏ6, ஏ6 ஆகிய சொகுசு செடான் கார்களையும், க்யூ-3, க்யூ5, க்யூ7 ஆகிய சொகுசு எஸ்யூவி கார்களையும், ஆர்எஸ்5, டிடி மற்றும் ஆர்8 ஆகிய ஸ்போர்ட்ஸ் ரக கார்களையும் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X