போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்!

Written By:

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதோடு, அவ்வப்போது எல்லைக்குல் ஊடுருவி சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வருகிறது. கரடுமுரடான மலைப்பகுதிகளை ஒட்டி அம்மாநில எல்லைப்பகுதி அமைந்துள்ளதால், நம் நாட்டு பாதுகாப்புப் படையினர் எல்லையை கண்காணிப்பதிலும், அங்கு ஊடுருவல் முயற்சிகளை தடுப்பதிலும் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

அத்துடன், அவசர சமயங்களில் அங்கு ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது. இந்த நிலையில், இந்திய- சீன எல்லையோரம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் மெசுக்கா விமான தளத்தில் போயிங் குளோப்மாஸ்டர் சி-17 சரக்கு விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. மிக குறைந்த தூர ஓடுபாதை கொண்ட அந்த தளத்தில் குளோப்மாஸ்டர் சி17 விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. முக்கியத்துவம் பெற்றதற்கான காரணம், குளோப்மாஸ்டர் சி17 விமானத்தின் சிறப்புகளை இந்த செய்தியில் படிக்கலாம்.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இந்திய - சீன எல்லையோரம் உள்ள மெசுக்கா தளமானது கடல் மட்டத்திலிருந்து 6,200 அடி உயரத்தில் அமைந்த மலைப் பிரதேசம். இந்த தளத்திலிருந்து அருகிலுள்ள விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் என்று பார்த்தால் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகர் நகரம். இந்த தளமானது திப்ரூகர் நகரிலிருந்து 500 கிமீ தொலைவில் உள்ளது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இந்த தளத்திற்கு தரை வழியாக ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் கொண்டு செல்வதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். ஆனால், தற்போது போயிங் குளோப்மாஸ்டர் விமானத்தை தரையிறக்கியிருப்பதன் மூலமாக, துருப்புகளையும், தளவாடங்களையும் உடனடியாக கொண்டு சேர்க்க முடியும்.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

நெடிதுயர்ந்த மலைப்பிரதேசமாகவும், மோசமான தட்பவெப்ப நிலை, காற்று வீச்சு கொண்ட இந்த பகுதியில் எல்லா ரக விமானங்களையும் பயன்படுத்த முடியாது. நம் நாட்டு விமானப்படையிடம் உள்ள அன்டனோவ் ஏஎன்32 விமானத்தை இந்த தளத்தில் இறக்க முடியும்.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இதுபோன்ற இடத்தில் இந்த விமானம் தரையிறங்குவதற்கு விசேஷ அம்சங்கள் இருக்க வேண்டும் அல்லவா? அவை என்னென்ன என்பைத தொடர்ந்து பார்க்கலாம்.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

அமெரிக்க விமானப்படையின் சரக்கு போக்குவரத்து பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட மாடல். தற்போது உலகின் பல நாடுகளில் போயிங் சி17 குளோப்மாஸ்டர் பயன்பாட்டில் உள்ளது. போர் முனைகளுக்கு தளவாடங்களையும், துருப்புகளையும் கொண்டு செல்வதை முதன்மை பணியாக கொண்டு பயன்படும் விதத்தில் சிறப்பம்சங்களை பெற்றது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இந்த விமானத்தில் ராணுவ பீரங்கி வண்டிகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்வதற்கான பெரிய இடவசதி உள்ளது. 102 ராணுவ வீரர்களை இந்த விமானத்தில் ஏற்றிச் செல்ல முடியும். இந்த விமானமானது 77 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இதன் மிக முக்கிய சிறப்பம்சம், தற்காலிக ஓடுபாதைகளில் கூட தரையிறக்கவும், டேக் ஆஃப் செய்யவும் முடியும். வெறும் 3,500 அடி நீளமும், 27 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதையிலேயே தரையிறக்க முடியும். அதேபோன்று, 7600 அடி நீளமுடைய ஓடுபாதையில் டேக் ஆஃப் செய்யலாம்.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இவ்வளவு பிரம்மாண்டமான இந்த விமானத்தை மிக குறைந்த தூர ஓடுபாதையிலிருந்து டேக் ஆஃப் செய்யவும், தரையிறக்கவும் முடியும். இதுதான் இதன் விசேஷம். மிக மோசமான வானிலை நிலவும் பகுதிகளில் கூட இந்த விமானத்தை பாதுகாப்பாக இயக்க முடியும்.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இந்த விமானம் 53 மீட்டர் நீளமும், 52 மீட்டர் அகலமும், 16.8 மீட்டர் உயரமும் உடையது. இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி நிறுவனத்தின் 4 எஃப் 117- பிடபிள்யூ-100 டர்போஃபேன்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

இந்த விமானத்தில் 1,34,556 லிட்டர் எரிபொருள் நிரப்புவதற்கான பெட்ரோல் டேங்குககள் உள்ளன. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 4,482 கிமீ தூரம் பறக்கும். அதிகபட்சமாக மணிக்கு 829 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

கடந்த 2011ம் ஆண்டு 10 சி-17 குளோப்மாஸ்டர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்தது. அதில் 6 விமானங்கள் இந்தியா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒவ்வொரு விமானமும் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

உலகிலேயே சி-17 குளோப்மாஸ்டர் 3, லாக்ஹீட் மார்ட்டின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் மற்றும் Il-76 ஆகிய மூன்று பெரிய வகை விமானங்களை பயன்படுத்தும் ஒரே விமானப்படை இந்திய விமானப்படைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

ராணுவ போக்குவரத்து மட்டுமின்றி, பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளிலும் இந்த விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்க அதிபர் வெளிநாடுகளுக்கு பயணிக்கும்போது, அவர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார் இந்த விமானத்தில் வைத்துதான் எடுத்துச் செல்லப்படுகின்றது.

போயிங் சி17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானத்தின் சிறப்பம்சங்கள்

மொத்தம் 256 போயிங் சி17 குளோப்மாஸ்டர் விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதில், 222 விமானங்கள் அமெரிக்க விமானப்படையிடம் உள்ளன. மீதமுள்ள விமானங்கள்தான் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. அதில், அதிகபட்சமாக இந்தியாவிற்கு 10 விமானங்களை தர அமெரிக்கா முன்வந்தது நினைவுகூறத்தக்கது. தற்போது இந்த விமானத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

English summary
Interesting Facts About Boeing C17 Globemaster Military Aircraft.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark