ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

Written By:

மோட்டார் வாகன துறை வரலாற்றில் பொதிந்து கிடைக்கும் அற்புதங்களையும், சுவாரஸ்யங்களையும் அவ்வப்போது செய்திகளாக தொகுத்து வழங்கி வருகிறோம்.

இன்றைய தொகுப்பிலும் பல சுவாரஸ்யமான செய்திகளும், தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவை நிச்சயம் உங்களை மெர்சலாக வைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

இன்றைய காலக்கட்டத்தில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு ஒரே காரை பயன்படுத்துவது சாதனையாகிவிட்டது. ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் ஸ்விப்ட் என்பவர் தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி சாதனை படைத்தார். ஆலன் ஸ்விஃப்ட் பட்டப்படிப்பு முடித்ததற்காக, 1928 ரோல்ஸ்ராய்ஸ் Piccidilly-P1 Roadster காரை அவரது தந்தை பரிசளித்துள்ளார். அந்த காரை பொக்கிஷமாக பயன்படுத்தி வந்த ஆலன் ஸ்விஃப்ட் 2005ம் ஆண்டு தனது 102வது வயதில் காலமானார். மேலும், தனது காரை தொடர்ந்து பராமரித்து பாதுகாப்பதற்காக லைமேன் அன்ட் மெர்ரி வுட் மியூசியத்திடம் ஒரு லட்சம் டாலர்களை நன்கொடையாக வழங்கினார். அவர் மறைந்தாலும் அவரது கார் இன்றைக்கும் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

நெடுஞ்சாலைகளில் பல மணி நேரம் காரை ஓட்டிச்செல்லும்போது தொடர்ந்து ஆக்சிலரேட்டரை அழுத்திச் செல்லும்போது வலது கால் அயர்ச்சி அடைவது வழக்கம். இதற்கு உபாயமாக, ஆக்சிலரேட்டரை கொடுக்காமல் கார் குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து பயணிப்பதற்கான வசதிதான் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம். இன்றைக்கு பல கார்களில் இந்த வசதி சர்வ சாதாரணம். 1948ம் ஆண்டு இந்த க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை கண்டறிந்தவர் ரால்ஃப் டீட்டர் என்பவர்தான். இதில் என்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா? ரால்ஃப் டீட்டர் பார்வையற்றவர். அவரது வழக்கறிஞர் கார் ஓட்டும்போது வேகத்தை கூட்டிக் குறைத்த வண்ணம் இருந்ததை கண்டு எரிச்சலிலும், அதற்கு தீர்வாகவும், இந்த க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தை கண்டறிந்தாராம்.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

அமெரிக்காவை சேர்ந்த இர்வ் கோர்டன் என்பவர் தனது 1966 வால்வோ பி1800 காரில் 30 லட்சம் மைல்கள் ஓட்டியிருக்கிறார். மொத்தம் 47 ஆண்டுகள் அந்த காரை அவர் பயன்படுத்தியிருக்கிறார். உலகிலேயே அதிக தூரம் பயணித்த கார் என்ற கின்னஸ் சாதனையாக இது குறிப்பிடப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

காரில் ரேடியோ சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதனை தடை செய்ய அமெரிக்காவில் பல மாகாணங்கள் முடிவு செய்தன. கார் ஓட்டும்போது ஓட்டுனர்களுக்கு கவனக் குறைவை ஏற்படுத்துவதாக கூறி, அவை தடை செய்ய முற்பட்டன.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

உலகிலேயே அதிக மறுசுழற்சி பொருட்கள் அடங்கிய தயாரிப்புகளில் ஒன்று கார். ஆம், காரில் இருக்கும் 95 சதவீத பாகங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்பட முடியுமாம். உலகில் ஆண்டுக்கு 27 மில்லியன் கார்களின் உதிரிபாகங்கள் மறுசுழற்சி முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

காரில் டேஷ்போர்டு அமைப்பு இன்று மிக முக்கியமானதாகவிட்டது. கட்டுப்பாட்டு கருவிகள், ஏசி சிஸ்டம், பொருட்களை பாதுகாப்பது என பல்வேறு அம்சங்களுடன் இன்றைக்கு டேஷ்போர்டு அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால், முதல்முதலில் இந்த டேஷ்போர்டு அமைப்பு உருவானதற்கான காரணம் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். வண்டிகளில் பூட்டப்படும் குதிரைகள் ஓடும்போது தெறிக்கும் சேறு, சகதி மற்றும் சாணத்திலிருந்து உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படத்தக்கூடாது என்பதற்காகவே மரத்தாலான தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

கார் உற்பத்தி துவங்கி இன்றைய நாள் வரை கணக்கிட்டால், உலகின் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையைவிட அதிக அளவில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளனவாம். ஆனால், அவற்றில் பல கார்கள் பயன்படுத்தப்படாத நிலைக்கு சென்றிருக்கவும், பல லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படாமலேயே போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

உலகம் முழுவதும் நிகழ்நேர கணக்கின்படி, 100 கோடி கார்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.78 லட்சம் கார்கள் உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

தலைமுடியை குத்திட்டு நிற்க செய்யும் ஒரு விஷயம் இதுவாக கூறலாம். ரிமோட் சாவியை தலையில் வைத்து பிடித்தால், அதன் சிக்னல் தரும் சுற்றளவு இருமடங்கு அதிகரிக்குமாம். அதாவது, மனிதனின் கபாலம், ஆம்பிளிஃபயர் போன்று செயல்படும் என்று சொல்லப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யங்கள்

பெட்ரோல், டீசல் கார்களை போன்று மின்சார கார்களில் இருக்கும் மின் மோட்டார்களிலிருந்து சப்தம் வராது. இது குழந்தைகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு பெரும் அபாயத்தை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த குறையை போக்குவதற்காக பெட்ரோல், டீசல் கார்கள் போன்று மின்சார கார்களிலும் சப்தம் தருவதற்கான விசேஷ ஒலி கருவியை நிசான் உருவாக்கி வருகிறது. இதே போன்று பல கார் நிறுவனங்களும் இந்த ஒலி தரும் சாதனத்தை உருவாக்கி வருகின்றனர்.

English summary
Here we compiled some interesting and less known facts about cars and driving. Read in Tamil.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark