இந்தியா வரும் ஃபோர்டு மஸ்டாங் பற்றி 15 சுவாரஸ்யத் தகவல்கள்!!

Written By:

அமெரிக்காவின் புகழ்பெற்ற மஸில் ரக கார் மாடலான ஃபோர்டு மஸ்டாங் இந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அமெரிக்க சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த மாடல் முதல்முறையாக வெளிநாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில், இந்தியாவும் ஒன்றாக இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த காரை பற்றிய 10 சுவாரஸ்யத் தகவல்கள் இதோ உங்களுக்காக...!!

01. முதல் தலைமுறை

01. முதல் தலைமுறை

கடந்த 1964ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் தற்போது 6- ம் தலைமுறை மாடலாக வந்துள்ளது.

02. மஸ்டாங் சின்னம்

02. மஸ்டாங் சின்னம்

மஸ்டாங் காரின் குதிரை சின்னத்தை வடிவமைத்தவர் பில் கிளார்க்.

 03. பெயர் காரணம்

03. பெயர் காரணம்

மஸ்டாங் I புரோட்டோடைப் ஜான் நஜ்ஜர் என்பவர் வரைபடமாக தயாரித்தார். அதற்கு பி1 - 51 மஸ்டாங் விமானத்தின் பெயரை சூட்டினார். அந்த வரைபடத்தின் அடிப்படையில்தான் மஸ்டாங் கார் உருவாக்கப்பட்டது.

04. ரெக்கார்டு பிரேக்

04. ரெக்கார்டு பிரேக்

அறிமுகம் செய்யப்பட்ட தினத்தன்று மட்டும் 22,000 மஸ்டாங் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன. முதல் இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு மில்லியன் மஸ்டாங் கார்கள் விற்பனையானது.

05. முதல் கார்

05. முதல் கார்

ஸ்டான்லி டக்கர் என்ற விமான ஓட்டிக்கு முதல் மஸ்டாங் கார் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

06. பொன்விழா கண்ட மாடல்

06. பொன்விழா கண்ட மாடல்

கடந்த ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் கார் அறிமுகம் செய்யப்பட்டு 50ம் ஆண்டுகள் நிறைவு பெற்றதன் கொண்டாட்டங்கள் நடந்தன. இதையொட்டி, 6ம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

07. புதிய தலைமுறை

07. புதிய தலைமுறை

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் 6வது தலைமுறை மாடல் மஸ்டாங் காரின் இரண்டாம் தலைமுறை ஃபால்கன் காரின் அடிப்பைடயில் வடிவமைக்கப்பட்டது.

08. எஞ்சின் ஆப்ஷன்கள்

08. எஞ்சின் ஆப்ஷன்கள்

தற்போது 3.7 லிட்டர் வி6 எஞ்சின், 5.0 லிட்டர் வி8 எஞ்சின் மற்றும் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல்களில் கிடைக்கிறது. இதில், 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதாக இருக்கும். இந்த ஈக்கோபூஸ்ட் மாடல்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 09. உடற்கூறு வகைகள்

09. உடற்கூறு வகைகள்

புதிய தலைமுறை மஸ்டாங் கார் 2 டோர் கூபே, ஹேட்ச்பேக், ஃபாஸ்ட்பேக் மற்றும் கன்வெர்ட்டிபிள் ஆகிய உடற்கூறு வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கூபே ரக மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

10. புதிய சஸ்பென்ஷன் அமைப்பு

10. புதிய சஸ்பென்ஷன் அமைப்பு

முதல்முறையாக 6ம் தலைமுறை மஸ்டாங் காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்ப்டடுள்ளது. இதனால், மிகச்சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும்.

11. எதிர்பார்க்கும் விலை

11. எதிர்பார்க்கும் விலை

ரூ.50 லட்சத்திற்கும் மேலான விலையில் மஸ்டாங் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது.

12. பொன்விழா சின்னம்

12. பொன்விழா சின்னம்

மஸ்டாங் காரின் பொன்விழாவையொட்டி, ஒவ்வொரு 2015 மாடல் மஸ்டாங் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் குதிரை சின்னமும், Mustang - Since 1964 என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

13.. மஸ்டாங் கடிகாரம்

13.. மஸ்டாங் கடிகாரம்

மஸ்டாங் பொன்விழாவுக்காக ஃபோர்டு வெளியிட்ட ஸ்பெஷல் எடிசன் கைக்கடிகாரம்.

 14. ஃபோர்டு பிராண்டு மதிப்பு

14. ஃபோர்டு பிராண்டு மதிப்பு

இந்தியாவில் மஸ்டாங் காருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், ஃபோர்டு தனது பிராண்டு மதிப்பை உயர்த்தும் வகையில், இந்த காரை இந்தியா கொண்டு வர இருக்கிறது.

 15. சினிமா பிரபலம்

15. சினிமா பிரபலம்

இதுவரை 3,000க்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 
English summary
Ford has recently introduced its all-new iconic muscle car the Mustang. They have been contemplating to launch this vehicle in India as their flagship model.
Story first published: Tuesday, March 31, 2015, 16:31 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark