காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் தலைப்பகுதியாக வர்ணிக்கப்படும் காஷ்மீரில் இருந்து, வால் பகுதியாக வர்ணிக்கப்படும் தென்கோடி முனையில் உள்ள தமிழகத்திலுள்ள கன்னியாகுமரியையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

மிக நீளமான நெடுஞ்சாலை

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 44தான் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையாக குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே இந்த நெடுஞ்சாலை 7 என்ற எண்ணில் குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது மறுசீரமைப்பு முறையில் 44 என்ற எண்ணிற்கு மாற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

ரத்த நாளமாக மாறிய என்எச்-44

இந்திய தேசத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய ரத்த நாளம் போன்று இந்த நெடுஞ்சாலை சாலைப் போக்குவரத்தில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

மொத்த தூரம்

காஷ்மீர் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலை 3,745 கிமீ தூரம் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை இருந்த என்எச்-1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரை இருந்த என்எச்2, ஆக்ரா - மும்பை இடையிலான என்எச்-5, பினனர் அங்கிருந்து குவாலியர் வரையிலான என்எச்-3, அங்கிருந்து ஜான்சி வரையில் என்எச்-26 நெடுஞ்சாலையாக பயணிக்கிறது.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

நாக்பூர் டு கன்னியாகுமரி

ஜான்சியிலிருந்து நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரையில் என்எச்-7 என்று பல்வேறு எண்களில் இருந்த தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து தேசிய நெடுஞ்சாலை 44 என்று பெயரிடப்பட்டது.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

கூட்டு நெடுஞ்சாலை கட்டமைப்பு

இதுதவிர்த்து, குறைந்த தூரத்திற்கு பல நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் துணைச் சாலைகள் இந்த வழித்தடத்தில் இடம்பெறுகிறது. எனவே, இது பல்வேறு நெடுஞ்சாலைகளின் தொகுப்பாகவே இதனை குறிப்பிடலாம்.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

இணைக்கப்படும் மாநிலங்கள்

தேசிய நெடுஞ்சாலை 44 மூலமாக இந்தியாவின் 11 மாநிலங்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த நெடுஞ்சாலை செல்கிறது.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

முக்கிய நகரங்கள்

தேசிய நெடுஞ்சாலை 44 மூலமாக ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், ஜலந்தர், லூதியானா, அம்பாலா, கர்னல், பானிபட், சோனிபட், டெல்லி, மதுரா, ஆக்ரா, குவாலியர், ஜான்சி, நர்சிங்க்பூர், நாக்பூர், அடிலாபாத், ஹைதராபாத், கர்னூல், அனந்த்பூர், பெங்களூர், தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

வர்த்தக முக்கியத்துவம்

காஷ்மீர் டூ கன்னியாகுமரி என்பது ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் தலைமுதல் கால் வரை சென்றடையும் வகையில் குறிப்பிடப்படுகிறது. அரசு திட்டமாக இருந்தாலும், அது தனிமனித சாதனைகளுக்கான திட்டமாக இருந்தாலும், காஷ்மீர் டு கன்னியாகுமரி என்ற வாசகம் இடம்பெறுவது வாடிக்கை. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசத்தின் தலைமுதல் கால் வரை இணைப்பதில் இந்த நெடுஞ்சாலை மிக முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் அதிக வர்த்தகம் சார்ந்த போக்குவரத்தில் இந்த சாலை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.

காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!

இந்தியாவின் முதுகெலும்பு சாலை

வர்த்தகத்திற்கும், சுற்றுலா மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்ட தூர சாதனைகளுக்கும் இந்த நெடுஞ்சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் பல்வேறு சிறந்த பொறியியல் கட்டமைப்புத் திறனை பரைசாற்றும் விஷயங்களும் உள்ளன. பல்வேறு தட்டவெப்பம், கலாச்சாரத்தை கடந்து இந்தியாவின் முதுகெலும்பாக இந்த சாலை இருந்து வருகிறது.

குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are the some interesting facts about India's longest highway.
Story first published: Friday, March 12, 2021, 13:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X