எதிரி ஏவுகணைகளை நொடியில் 'காலி' பண்ணும் சாஃப்ட் கில்லர் 'காளி'!

Written By:

அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் காரணமாக, ஆயுத பலத்தை பெருக்கும் அவசியத்தை இந்தியா எதிர்நோக்கி வருகிறது. அதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நவீன வகை ஆயுதங்களை பெற்றிருப்பதும் அவசியமாகி இருக்கிறது.

அந்த வகையில், பல ரகசிய ஆயுதங்களை இந்திய பாதுகாப்புத் துறை உருவாக்கி வருகிறது. அதில், இந்தியாவின் டாப் சீக்ரெட் ஆயுதமாக கூறப்படும் காளி-5000 திட்டத்தை பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

லேசர் ஆயுதம் போல...

லேசர் ஆயுதம் போல...

காளி-5000 ஆயுதத்தை பலர் லேசர் ஆயுதமாக பாவிக்கின்றனர். ஆனால், லேசர் போன்ற அம்சங்களை பெற்றிருந்தாலும், இது வேறு வகையான பல அனுகூலங்களை பெற்றிருக்கிறது. காளி ஆயுத திட்டம் துவங்கிய விதம், அதன் செயல்பாடு, எதிர்கால பயன்பாடு ஆகியவற்றை தொடர்ந்து காணலாம்.

காளி திட்டம்

காளி திட்டம்

லேசர் ஆயுதத்தை விட சிறப்பான பயன்பாடு கொண்ட இந்த காளி திட்டம் முதலில் தொழிலக பயன்பாட்டுக்காகத்தான் உருவாக்கப்பட்டது. 1985ம் ஆண்டு பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டாக்டர். ஆர். சிதம்பரம்தான் இந்த திட்டத்தை முன்னெடுத்தார்.

லேசர் ஆயுதமல்ல...

லேசர் ஆயுதமல்ல...

இது லேசர் ஆயுமாக பலர் கருதினாலும், இது லேசர் ஆயுதத்திலிருந்து வேறுபடுகிறது. அதிக திறன் கொண்ட எலக்ட்ரான்களை வெளிப்படுத்தும் எக்ஸ்ரே சாதனமாக இதனை உருவாக்கினர். Kilo Ampere Linear Injector என்பதின் சுருக்கமே KALI என்ற பெயர் பெற்றிருக்கிறது.

திட்டத் துவக்கம்

திட்டத் துவக்கம்

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆய்வு செய்த பின்னர், 1989ம் ஆண்டு இந்த திட்டப் பணிகள் துவங்கின. முதலில் தொழிலக பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட காளியின் சிறப்பம்சங்கள், நவீன ஆயுதமாக மாற்றும் வல்லமை, சிறப்பம்சங்கள் பெற்றிருப்பதை அறிந்து கொண்டு, அதனை உருவாக்கும் பணிகள் துவங்கின.

காளி குடும்பம்

காளி குடும்பம்

இதுவரை காளி 80, காளி 200, காளி 1000, காளி 5000 மற்றும் காளி 10000 என்ற குடும்ப வரிசையில் மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த சாதனத்தில் அதி திறன் மிக்க எலக்ட்ரான்களை உருவாக்கும் கருவியும், அதனை ஒருமுகப்படுத்தி இலக்கை நோக்கி செலுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கின்றன.

 லேசரைவிட பவர்ஃபுல்

லேசரைவிட பவர்ஃபுல்

லேசர் ஆயுதத்தின் மூலம் எதிரிகளின் விமானம் அல்லது ஏவுகணையில் துளை போட்டு அழிக்கும். இதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.. ஆனால், இந்த காளி ஆயுதம் நொடிப்பொழுதில் எதிரி விமானம் மற்றும் ஏவுகணைகளின் சாஃப்ட்வேரை முற்றிலுமாக அழிக்க வல்லது.

 சாஃப்ட் கில்லர்

சாஃப்ட் கில்லர்

இதனை சாஃப்ட் கில்லர் என்று அழைக்கின்றனர். பிற ஆயுதங்களை போல இல்லாமல், சாஃப்ட்வேரை செயலிழக்க வைத்து எதிரி விமானங்களையும், ஏவுகணையையும் வீழ்த்தும்.

ஆற்றல் மையம்

ஆற்றல் மையம்

தண்ணீர் நிரப்பப்பட்ட கெப்பாசிட்டர்களிலிருந்து அணுக்களை உற்பத்தி செய்யும் வகையில், இந்த காளி ஆயுதம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மைக்ரோவேவ் கன்

மைக்ரோவேவ் கன்

இந்த காளி ஆயுதத்தில் ஒரு ஜிகாவாட் மின்திறனை கொண்ட மைக்ரோவேவ் கன் பொருத்தப்பட்டிருக்கும். அதிலிருந்து வெளிப்படும் அபரிமிதமான எக்ஸ்ரே கதிர்கள் கண் மூடி கண் திறப்பதற்குள், எதிரி விமானங்களின் கம்ப்யூட்டர்களை முற்றிலுமாக அழித்துவிடும்.

தேஜஸ் விமானத்தில் சோதனை

தேஜஸ் விமானத்தில் சோதனை

தேஜஸ் போர் விமானத்தின் சாஃப்ட்வேர்களின் கதிர்வீச்சை தாங்கும் திறனை பற்றி சோதிப்பதற்காக, இந்த காளி ஆயுதம் முதலில் பயன்படுத்தப்பட்டது. தற்போது இதனை தனி ஆயுதமாக உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. ஆனால், இதனை முழுமையான ஆயுதமாக மாற்றுவதில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

நடைமுறை சிக்கல்கள்

நடைமுறை சிக்கல்கள்

இந்த ஆயுதத்தை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலை தற்போது உள்ளது. இதனை பல முறை பயன்பாட்டு கருவியாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அத்துடன், இந்த ஆயுதத்தின் எடையும் மிக அதிகமாக இருக்கிறது. அதனை குறைத்து, சிறந்த செயல்திறன் கொண்டதாக மேம்படுத்தி வருகின்றனர். மேலும், எரிபொருளை உற்பத்தி செய்யும் காலமும் அதிகம் உள்ளது.

விமானத்தில் பொருத்த திட்டம்

விமானத்தில் பொருத்த திட்டம்

இந்தியாவின் வான்வெளி கண்காணிப்பு மையமாக செயல்படும், இலூஷின் Il-76 விமானத்தில் காளி மைக்ரோவேவ் துப்பாக்கியை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த காளி ஆயுதத் திட்டம் முழமை பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு அச்சுறுத்தல்

சீனாவுக்கு அச்சுறுத்தல்

எதிரிகளை காலி பண்ணும் இந்த காளி ஆயுதம் ராணுவ பலத்தில் வலிமையான அண்டை நாடான சீனாவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூற்று தெரிவிக்கின்றனர்.

 பயங்கர ஆயுதம்

பயங்கர ஆயுதம்

இதனை ஆங்கிலத்தில் deadly weapon என்ற ரகத்தில் அதிபயங்கர ஆயுதமாக குறிப்பிடுகின்றனர். இது நிச்சயம் இந்திய ஆயுத பலத்தை புதிய கோணத்தில் கொண்டு செல்லும் என கருதப்படுகிறது.

இந்தியாவின் டாப் 10 ஆயுதங்கள்!

போர் என்று வந்தால் இந்தியாவை முன்னின்று காக்கும் சக்திவாய்ந்த டாப் 10 ஆயுதங்கள்!

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Facts About India's Top Secret Weapon KALI.
Story first published: Wednesday, March 23, 2016, 13:48 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark