விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானங்கள் மற்றும் விமானப் பயணம் பற்றிய சில சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

விரைவான போக்குவரத்தை வழங்கும் விமான பயணங்கள் எல்லோருக்கும் விருப்பமானதாகவே இருக்கிறது. இந்த நிலையில், விமானங்களில் இருக்கும் சில சுவாரஸ்யமான விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

01. விமானத்தில் பயணிக்கும்போது பகல் வேளைகளில் ஜன்னல் திரை மறைப்பை திறந்து வைக்குமாறு பணியாளர்கள் அறிவுறுத்துவது உண்டு. சூரிய வெளிச்சம் விமானத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு கோருகின்றனர்.

சில சமயங்களில் விமானத்தில் மின்சார சப்ளை துண்டிக்கப்பட்டால், விமானத்திற்குள் திடீரென இருள் சூழ்ந்து கொண்டால் ஜன்னல் மூலமாக வெளிச்சம் கிடைக்கும்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானத்திற்குள் ஏதேனும் அபாயம் இருப்பதை பணியாளர்கள் உணர்ந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காவும் இது பயன்படுகிறது.

மேலும், விமான இறக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சினில் தீப்பற்றுவது உள்ளிட்டவற்றை எளிதாக தெரிந்து கொள்வதற்கும் இது உதவும் என்பதே காரணம்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் மேலே எழும்போதும், தரை இறங்கும்போதும் கழிவறைகளை பயன்படுத்த பணியாளர்கள் அனுமதிப்பதில்லை. இதற்கு காரணம் என்ன தெரியுமா?

தரை இறங்கும்போது விமானம் விபத்தில் சிக்கினால் விமான கழிவறையில் சீட் பெல்ட் இல்லாமல் பயணிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதுதான் என்று தெரிவிக்கின்றனர்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் காற்று இல்லாத வெற்றிடங்களை கடக்கும்போது பயங்கரமாக குலுங்கும். இதனால், விமானத்தின் பேலன்ஸ் குறையும். இதுகுறித்து பயணிகள் அச்சம் கொள்ள தேவையில்லை. இதனால், விபத்து ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

டர்புலென்ஸ் எனப்படும் காற்று வெற்றிடங்களை விமானம் கடக்கும்போது, சீட் பெல்ட் அணிவதற்கான எச்சரிக்கை செய்வார்கள். இந்த சமயத்தில் விமானத்தின் உயரம் தடாலடியாக குறைந்து கீழே இறங்கும்.

அப்போது, சீட் பெல்ட் அணியவில்லை எனில், பயணியின் தலையில் காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, விமான பயணத்தில் சீட் பெல்ட் குறித்த விழிப்புணர்வு அவசியம்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

மின்னல் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு அம்சங்களை விமானத்தின் உடல்பாகம் பெற்றிருக்கிறது. மேலும், மின்னல்களிலிருந்து வரும் அதிகப்படியான மின்சாரத்தால் விமானத்தின் மின் சாதனங்கள் பாதிக்கப்படாத வகையிலேயே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, மின்னல் தாக்குதல் பற்றி அதிகம் பயப்பட தேவையில்லை.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

சில விமானங்களின் இறக்கையின் முனைப்பகுதி மேல்நோக்கி மடங்கியது போல இருக்கும். இதன்மூலமாக, விமானம் டர்புலென்ஸ் ஏற்படும்போது, உராய்வை குறைத்து விமானம் நிலைத்தன்மையுடன் செல்ல உதவுகிறது.

அத்துடன், சுலபமாக விமானம் மேலே எழும்புவதற்கும், தரை இறங்குவதற்கும் உதவுகிறது. அத்துடன், எரிபொருள் சிக்கனத்தையும் இந்த இறக்கை அமைப்பு அதிகரிக்கும்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் இரவு நேரங்களில் பயணிக்கும்போது இதர பைலட்டுகள் விமானம் பறக்கும் திசையை கண்டறிவதற்கு ஒரு உபாயம் உள்ளது.

அனைத்து விமானங்களிலும் இடது புற இறக்கையில் சிவப்பு விளக்கும், வலது புற இறக்கையில் பச்சை விளக்கும் பொருத்தப்பட்டு இருக்கும். எதிரில் அல்லது அருகில் கடந்து செல்லும் விமானங்களின் பைலட்டுகள், இந்த விளக்குகளை வைத்தே விமானம் எந்த திசையில் பறக்கிறது என்பதை கண்டுபிடித்துவிடுவர்.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானத்தின் இறக்கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஃப்ளாப்புகள் விமானத்திற்கு தூக்கு விசையை அளிக்கின்றன. மேலும், விமானம் குறைவான வேகத்தில் பறப்பதற்கும் உதவுகின்றன. குறிப்பாக, தரை இறங்குவதற்கு மிக முக்கிய கருவியாகவும் செயல்படுகின்றன.

விமானங்களும், அதன் பயணங்கள் பற்றியும் சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அவசர கால கதவை திறக்க முடியுமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழுவது உண்டு. விமானம் பறந்துகொண்டிருக்கும்போது அவசர கால கதவை திறக்க முடியாது. மேலும், விமானம் பறந்துகொண்டிருக்கும்போது வெளிப்புற காற்றழுத்தம் காரணமாக, திறப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

Most Read Articles
English summary
Interesting Facts About Planes.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X