சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னையில் உள்ள ரெனோ - நிஸான் கார் ஆலையில் முழு வீச்சில் உற்பத்திப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஆலை வர்த்தகத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கும் நிலையில், இந்த ஆலை பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனமும், ஜப்பான் நாட்டை சேர்ந்த நிஸான் நிறுவனமும் கூட்டணியில் அமைக்கப்பட்ட முதல் ஆலையாக சென்னை கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டது. ரூ.4,500 கோடி முதலீட்டில் இந்த பிரம்மாண்ட ஆலை அமைக்கப்பட்டது.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னை அருகே ஓரகடத்தில் 640 ஏக்கர் பரப்பளவில் ரெனோ - நிஸான் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில், நிர்வாகம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானோர் நேரடியாக பணிபுரிவதுடன், பல ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பணி வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்தியா மட்டுமின்றி, 69 வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் இதுவரை 21 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்த ஆலையில் முதல்முதலில் ரெனோ கோலியோஸ் எஸ்யூவியும் மற்றும் ஃப்ளூயன்ஸ் செடான் காரும் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து, நிஸான் நிறுவனத்தின் வி பிளாட்ஃபார்மில் மைக்ரா, சன்னி, பல்ஸ் மற்றும் ரெனோ ஸ்காலா (நிஸான் சன்னி காரின் ரீபேட்ஜ் மாடல்) ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

அதேபோன்று, எம்0 பிளாட்ஃபார்மில் ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ (ரெனோ டஸ்ட்டர் ரீபேட்ஜ் மாடல்), நிஸான் கிக்ஸ், ரெனோ கேப்ச்சர் மற்றும் ரெனோ லாட்ஜி ஆகிய கார்களும் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இந்த கார்களில் பெரும்பாலான மாடல்கள் இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. ரெனோ டஸ்ட்டர், நிஸான் கிக்ஸ் கார்கள் விற்பனையில் உள்ளன. டட்சன் பிராண்டில் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இதனிடையே, ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த இந்த ஆலையில் முழு அளவிலான உற்பத்தி இதுவரை இல்லாத நிலை இருந்தது. தற்போது ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்- ஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட க்விட் மற்றும் சிஎம்எஃப்-ஏ ப்ளஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட ட்ரைபர் உள்ளிட்ட மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

அதேபோன்று, அண்மையில் வந்த நிஸான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகர் ஆகிய மாடல்களுக்கும் பெரும் வரவேற்பு இருப்பதால், மூன்று ஷிஃப்ட்டுகளிலும் கார் உற்பத்தி நடக்கிறது.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இதனால், இந்த ஆலையில் முழு அளவிலான உற்பத்திப் பணிகள் இப்போதுதான் நடக்கின்றன. நிஸான் மேக்னைட் மற்றும் ரெனோ கைகர் ஆகிய இரண்டு மாடல்களுக்குமே நல்ல புக்கிங் கிடைத்திருப்பதால், தற்போது இந்த ஆலை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தற்காலிகமாக பணியாளர்களும் சேர்க்கப்பட்டு உற்பத்திப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

நிஸான் நிறுவனம் மேக்னைட் உற்பத்திக்காக புதிதாக 1,000 பேரை பணியமர்த்த உள்ளது. அதேபோன்று, டீலர்களில் பணியாற்றுவதற்காக 500 பேரை பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது. இதனால், நிஸான் நிறுவனத்தின் வர்த்தகம் வரும் மாதங்களில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த கார் ஆலை வரும் ஆண்டுகளில் லாபகரமான பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ரெனோ - நிஸான் கார் ஆலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஆசியாவின் டெட்ராய்ட் என்று ஆட்டோமொபைல் துறையினரால் செல்லமாக குறிப்பிடப்படும் சென்னையில் ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஃபோர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்யூ வரிசையில் மிக பிரமாண்டமான ஆலைகளில் ஒன்றாக ரெனோ - நிஸான் கூட்டணி நிறுவனத்தின் ஆலையும் முக்கிய இடம்பெறுகிறது. சென்னையில் உள்ள கார் தொழிற்சாலைகள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், ரெனோ - நிஸான் நிறுவனத்தின் ஆலையும் இப்போது இந்த வெற்றிப் பட்டியலில் இணையும் நிலை உருவாகி இருக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting facts About Renault - Nissan Chennai plant.
Story first published: Tuesday, March 30, 2021, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X