Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
காய்ச்சலா.. இறுமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக!
- Lifestyle
எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்க?உங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா?
- Movies
உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!
- Finance
இந்தியாவின் தரத்தை negative ஆக குறைத்த ஃபிட்ச்.. விளைவுகள் என்ன?
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கப்பல்களில் பயன்படுத்தப்படும் சோளக் கொல்லை பொம்மை யுக்தி... இதுவரை அறிந்திராத சுவாரஸ்யங்கள்!
பஸ், ரயில், விமானங்களில் எல்லோரும் பயணிக்கும் வாய்ப்பு எளிதாக கிட்டி விடும். இதனால், இவை பற்றிய சுவாரஸ்யங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கப்பல்கள் பற்றிய தகவல்கள் பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கப்பல்களில் உள்ள சில சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

கப்பல்கள் பற்றிய இந்த செய்தித் தொகுப்பில் கப்பல்களில் குறிப்பிடப்படும் சில குறியீட்டு எண்கள் மற்றும் சில சுவாரஸ்யங்களை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.

பதிவு எண்
வாகனங்களுக்கு இருப்பது போல கப்பல்களுக்கும் நிரந்தர பதிவு எண் உண்டு. உரிமையாளர், எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டாலும், இந்த ஐஎம்ஓ அமைப்பு வழங்கும் பதிவு எண் அனைத்து கப்பல்களிலும் எழுதப்பட்டு இருக்கும். உரிமையாளர், துறைமுக பதிவு போன்றவை மாறினாலும், இந்த ஐஎம்ஓ பதிவு எண் மட்டும் மாறாது.

இது தெரியுமா?
உலகில் உள்ள 70 சதவீத வர்த்தக கப்பல்கள் குறிப்பிட்ட சில நாடுகளின் துறைமுகத்தில் பதிவு செய்து இயக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு தென்கொரியாவை சேர்ந்த ஹான்ஜின் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் பனாமாவில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

அதேபோன்று, லைபீரியா மற்றும் மார்ஷல் தீவுகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகின்றன. உரிமையாளரின் சொந்த நாட்டு தேசியக்கொடியை தவிர்த்து, இந்த கப்பல்கள் பதிவு செய்யப்படும் அல்லது தாய் துறைமுகமாக பயன்படுத்தும் நாட்டின் தேசியக் கொடியுடன் செல்லும்.

எக்கச்சக்க வரி
இதற்கு மிக முக்கிய காரணம், உரிமையாளர் நாட்டில் கப்பல்களை பதிவு செய்து துறைமுகத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. இதனால், வரி மற்றும் கட்டணம் குறைவாக உள்ள நாடுகளை மையமாக வைத்து கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்த துறைமுகங்கள் அல்லது நாடுகளில் கப்பல்களின் வருவாய்க்கு ஏற்ப மட்டுமே வரி மற்றும் கட்டணம் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படுகின்றன.

பாரம் ஏற்றும் வரைமுறை
கப்பல்களின் பக்கநாட்டில் எடை ஏற்றுவதற்காக சில குறியீடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதில், A மற்றும் B ஆகிய எழுத்துக்கள் கொண்ட இந்த குறியீடு அமெரிக்க பீரோ ஆஃப் ஷிப்பிங் என்ற அமைப்பின் முலமாக வழங்கப்படுகின்றன. 90 சதவீத சரக்கு கப்பல்களுக்கு இந்த அமைப்பு வழங்கும் பாரம் ஏற்றும் அளவுதான் பயன்படுத்தப்படுகிறது.
Image Courtesy:Hakaimagazine

அதாவது, உப்பு சேர்ந்த கடல் நீரானது நன்னீரை விட அதிக அடர்த்தி கொண்டது. அதேபோன்று, குளிர்ச்சியான நீரும் அடர்த்தி அதிகமானது. எனவே, கப்பல் செல்லும் வழித்தடத்தின் நீரின் தன்மை மற்றும் தட்பவெப்பத்தை கணக்கில்கொண்டு பாரம் ஏற்ற வேண்டும்.

இதற்காக, கப்பலில் பாரம் ஏற்றுவதற்கான குறியீடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. குளிரான கடல் நீரில் கப்பல் செல்லும்போது W என்ற குறியீடு வரை பாரம் ஏற்றிக் கொள்ள முடியும். S என்பது கோடைகாலத்தில் கடல் நீரில் செல்வதற்கும், F என்பது நன்னீர், அதாவது ஆற்று வழித்தடங்களில் செல்லும்போது அதற்கான பாரம் ஏற்றும் அளவை குறிக்கிறது.

விசேஷ பெயிண்ட்
பொதுவாக வாகனங்களில் கண்ணை கவரும் வகையில் வர்ண பூச்சு கொடுக்கப்படுகிறது. மேலும், வாகனங்களின் பொலிவிற்கும் தரமான வர்ண பூச்சு கொடுக்கப்படுகிறது. அதேவேளை, கப்பல்களில் கொடுக்கப்படும் வர்ண பூச்சு மிகவும் விசேஷமானது.

கப்பல்களில் பொதவாக இரண்டு வண்ண பெயிண்ட் பூச்சு கொடுக்கப்படுகின்றன. இதில், தண்ணீரில் மூழ்கி இருக்கும் பகுதியில் கொடுக்கப்படும் வர்ணப் பூச்சு தண்ணீரின் அரிப்பு மற்றும் துருப்பிடித்தலை தவிர்க்கும் வகையில் விசேஷ கலவையில் கொடுக்கப்படுகின்றன.

எரிபொருள் விரய தவிர்ப்பு யுக்தி
மேலும், சில சிறிய வகை கடல் வாழ் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் பேக்டீரியா உள்ளிட்டவை கப்பலின் கீழ்பாகத்தில் குடியிருக்கத் துவங்கினால், கப்பலின் நகர்வையும், இயக்கத்தையும் பாதிக்கத் துவங்கும். மேலும், சில நேரங்களில் 40 சதவீதம் வரை எரிபொருள் செலவு கூடுதலாக வாய்ப்பு இருப்பதால், கப்பலின் அடிப்பாகத்தில் உயர் வகை பெயிண்ட் பூச்சு கொடுக்கப்படுகிறது.

மூழ்கும் அளவு
அணைக்கட்டுகளில் நீரில் அளவை பார்ப்பதற்காக கொடுக்கப்படுவது போன்று, கப்பல்களிலும் நீரில் மூழ்கி இருக்கும் அளவு குறித்த எண்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். இது கப்பலின் அடிப்பாகம் எந்த அளவுக்கு தண்ணீரில் மூழ்கி இருக்கிறது என்பதை எளிதாக கண்டறிவதற்கும், பாரம் ஏற்றுவதை நிர்ணயிப்பதற்கும் உதவுகிறது. தண்ணீரின் தன்மையை பொறுத்தும் பாரம் ஏற்றுதல் அளவு கணக்கிடப்படுகிறது.

எலித்தொல்லை
கப்பல்கள் துறைமுகத்தில் நிறுத்தியிருக்கும்போது, கயிறு மூலமாக துறைமுகத் தளத்தில் உள்ள தூண்களுடன் பிணைத்து கட்டப்பட்டு இருக்கும். அந்த கயிறுகளில் வட்டு அல்லது சதுர வடிவிலான தட்டு பொருத்தப்பட்டு இருக்கும். கயிறு மூலமாக எலிகள் கப்பலுக்குள் செல்லும் வாய்ப்பு இருப்பதை தவிர்ப்பதற்காகத்தான் இந்த வட்டு கயிற்றில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

சோளக் கொல்லை பொம்மை யுக்தி
கடல்கொள்ளையர்களின் அட்டகாசத்தால் பெரும் வணிக கப்பல்களும், கப்பல் பணியாளர்களும் பெரும் அச்சுறுத்தல்களையும், இழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

இதனை தவிர்ப்பதற்காக, சோளக் கொல்லையில் பொம்மை வைப்பது போன்று, கப்பல்களிலும், பணியாளர்கள் நின்று கண்காணிப்பது போன்ற மனித பொம்மைகளை கப்பல்களில் பயன்படுத்துகின்றனர். இது ஓரளவுக்கு கைகொடுப்பதாகவும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.