சென்னை மீது குண்டு மழை பொழிந்த எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

சென்னை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய எம்டன் போர்க்கப்பல் குறித்த சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகத்தையே கதிகலங்க வைத்த முதலாம் உலகப்போர் 1914 முதல் 1918ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் நடந்தன. இந்த நீண்ட போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை அடங்கிய நேச நாட்டு படைகளுக்கும், மைய நாடுகளாக குறிப்பிடப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஹங்கேரி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகள் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு எதிர் எதிராக போர் புரிந்தன.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த முதலாம் உலகப் போரில் பெரும் பொருட்சேதமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த நிலையில், முதலாம் உலகப்போரின்போது இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவுக்கும் தாக்குதல் இலக்கிலிருந்து தப்பவில்லை. குறிப்பாக, ஆங்கிலேயர்கள் அதிகம் வசித்த மதராசப்பட்டினம் என்றழைக்கப்பட் சென்னையை குறிவைத்து மைய நாட்டு படைகள் தாக்குதல் நடத்த முடிவு செய்தன.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

அதன் அடிப்படையில், ஜெர்மனிக்கு சொந்தமான எஸ்எம்எஸ் எம்டன் என்ற நடுத்தர வகை போர்க்கப்பல் சென்னை மீது குண்டு வீசி தாக்கி இன்றுடன் 103 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த நாளில், தமிழர்களின் சொல்லாடலில் ஒன்றிணைந்துவிட்ட எம்டன் பெயருக்கு சொந்தமான போர்க்கப்பல் குறித்த சில சுவாரஸ்ய குறிப்புகளை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

எஸ்எம்எஸ் எம்டன் போர்க்கப்பல் போலந்து நாட்டிலுள்ள டான்ஜிக் என்ற கப்பல் கட்டும் தளத்தில் ஜெர்மானிய கப்பல் வல்லுனர்களால் கட்டமைக்கப்பட்டது. இந்த கப்பல் பல்வேறு வியக்க வைக்கும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

1909ம் ஆண்டில் இந்த கப்பல் போர்ப் பணிக்காக முறைப்படி ஜெர்மனி கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பல் 388 அடி நீளம் கொண்டது. இந்த கப்பலில் இரண்டு ராட்சத நீராவி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த கப்பல் மணிக்கு 43.5 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்ததாக இருந்தது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 6,960 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த கப்பலில் 18 அதிகாரிகளும், 343 வீரர்களும் பணியாற்றினர். இந்த போர்க்கப்பலில் 20 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. முதலாம் உலகப்போரின்போது இந்த 20 பீரங்கிகளும் எந்நேரமும் தாக்குதல் நடத்தும் விதத்தில் தயார் நிலையில் இருந்தன.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த போர்க்கப்பல் அதிக காற்று வீச்சு மற்றும் அலைகள் நிறைந்த கடல் பகுதிகளிலும் மிக வேகமாக செல்லும் திறன் படைத்தது. இந்த கப்பலை பற்றி மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், ஒவ்வொரு நாட்டு கடற்பகுதியில் செல்லும்போது, அந்த நாட்டின் கொடியை கட்டிக் கொண்டு தந்திரமாக எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களை பெற்றிருக்கின்றனர்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த போர்க்கப்பல் முதலாம் உலகப்போரின்போது நேச நாட்டுப் படைகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. மொத்தம் 30 கப்பல்களை தாக்கி அழித்தது. அதேநேரத்தில், இந்த கப்பலை கொக்கோஸ் என்ற இடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான எச்எம்ஏஎஸ் சிட்னி என்ற போர்க்கப்பல் தாக்கியது. இதில், நிலைகுலைந்த எம்டன் நீரில் மூழ்கியது.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இந்த கப்பலில் இருந்த 376 பேரில் 144 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். மீதமுள்ளவர் போர்க்கைதிகளாக ஆஸ்திரேலியா கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அசாத்தியமான போர் தந்திரங்களால் நேச நாட்டுப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த கப்பல் சென்னையை தாக்கிய சம்பவத்தையும் தொடர்ந்து காணலாம்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

முதலாம் உலகப்போரில் நேச நாட்டுப் படைகளின் ஆதிக்கம் அதிகமிருந்ததால், நேச நாட்டு படைகளுக்கு சொந்தமான பகுதிகளில் தாக்குதல் நடத்துவதில் மைய நாடுகளின் பிரிவில் முக்கிய பங்கு வகித்த ஜெர்மனி திட்டம் போட்டது. அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம் சென்னை.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இதற்கு அவர்கள் தேர்வு செய்த கப்பல் எம்டன். 1914ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்டன் போர்க்கப்பல் சென்னையை நோக்கி விரைந்தது. இந்த போர்க்கப்பலில் தமிழகத்தை சேர்ந்த செண்பகராமன் என்ற வீரரும் இருந்தார். இவர் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியாவை விடுவிக்கும் நோக்கில் மைய நாட்டு படையில் சேர்ந்து மிக தீவிரமான முறையில் இயங்கினார்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

சென்னையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் எம்டன் கப்பல் நிலைநிறுத்தப்பட்டது. இரவில் சென்னை மீது குண்டு வீசுவதற்கு முடிவு செய்யப்பட்டு, எம்டன் கப்பல் ஆயத்தமாக இருந்தது. எம்டன் கப்பல் சென்னையை தாக்க வந்திருப்பதை அறிந்த ஆங்கிலேயர்கள், திகிலடைந்து, உடனடியாக சென்னை முழுவதும் விளக்குகள அணைத்தனர்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

ஆனால், அப்போது கலங்கரை விளக்கமாக இருந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் கோபுரத்தின் மீது இருந்த விளக்கை அவசரத்தில் அணைக்க மறந்து விட்டனர். இதனால், அந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கை அடையாளமாக வைத்து தாக்குதலை நடத்த தொடங்கினர் எம்டன் போர்க்கப்பலில் இருந்த வீரர்கள்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

எம்டன் போர்க்கப்பலில் இருந்து 130 முறை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த குண்டு வீச்சில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. ஆனால், சென்னையில் இருந்த ஆங்கிலேயருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. பல கிலோமீட்டர் தூரம் தீப்பிழம்புகள் சிதறி விழுந்தன.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டுகளில் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சுவர் மீது விழுந்து வெடித்தது. அதில், அந்த சுற்றுச் சுவர் கடுமையாக சேதமடைந்தது. மற்றொரு குண்டு வெடிக்கவில்லை. அது தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த சிறப்புத் தகவல்கள்!

இன்றும் தமிழக மக்களின் சொல்லாடலோடு எம்டன் என்ற பெயர் நிலைத்து நிற்கிறது. ஆம், அசாத்தியமாகவும், சாதுரியமாகவும் செயல்படுகிறவர்களை, அவன் எம்டன்பா என்று சொல்வதை நாம் அவ்வப்போது கேட்பதுண்டு. அதற்கு காரணம், இந்த எம்டன் போர்க்கப்பல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Interesting Facts About SMS Emden Warship.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X