உலகின் முதல் சோலார் விமானம் இம்பல்ஸ்- 2 பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

By Saravana

சுற்றுச் சூழலுக்கு தீங்கு தராமல் சூரிய மின் சக்தியில் இயங்கும் உலகின் முதல் சோலார் விமானம் தனது உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியில் நேற்று துவங்கியது. அங்கிருந்து 12 மணி நேர பயணத்திற்கு பின் ஓமன் நாட்டில் தரையிறங்கிய அந்த விமானம் இன்று இந்தியாவை நோக்கி தனது இரண்டாவது கட்ட பயணத்தை துவங்கியிருக்கிறது.

ஆமதாபாத் மற்றும் வாரணாசி நகரங்களுக்கு வருகை தரும் இந்த சோலார் விமானம், கங்கை நதியின் மேலே பறந்து சுற்றுச்சூழல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இதைத்தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் வழியாக பறந்து மீண்டும் அபுதாபியில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த விமானத்தின் மறுபக்கத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


சோலார் இம்பல்ஸ் - 1

சோலார் இம்பல்ஸ் - 1

உலகின் முதல் சோலார் விமான திட்டத்திற்கு சோலார் இம்பல்ஸ் என்று பெயரில் அழைக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானவியல் நிபுணர் பெர்ட்ரான்ட் பிக்கார்டு இந்த விமான வடிவமைப்புக்கு தலைமை வகித்தார். மேலும், முதல்முறையாக பலூன் மூலம் உலகை வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர். இவருடன் சுவிட்சர்லாந்து தொழிலதிபர் ஆந்த்ரே பார்ஸ்பெர்க்கும் பலூனில் உலகை முதல்முதலாக வலம் வந்தனர்.

பதிவு

பதிவு

உலகின் முதல் சோலார் விமானம் HB- SIA என்ற குறியீட்டுப் பெயரில் பதிவு செய்யப்பட்டது. நடைமுறையில் இந்த விமானத்தை சோலார் இம்பல்ஸ்- 1 என்று அழைக்கின்றனர். ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய விமானமாக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 36 மணி நேரம் பயணிக்கும் திறன் கொண்டது.

இரவிலும் பயணம்

இரவிலும் பயணம்

2010ம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 8 ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து 26 மணி நேரம் பறந்து இந்த விமானம் சாதனை படைத்தது. மேலும், சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில், சேமிக்கப்பட்ட மின்சார ஆற்றலில் இரவில் தொடர்ந்து 9 மணிநேரம் பறந்ததும் பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

சோலார் இம்பல்ஸ் - 2

சோலார் இம்பல்ஸ் - 2

இம்பல்ஸ் - 1 சோலார் விமானத்தை வடிவமைத்த அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாடல்தான் தற்போது உலக சுற்றுப் பயணத்தை துவங்கியிருக்கும் இம்பல்ஸ் 2 விமானம். இந்த விமானம் HB - SIA என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2011ம் ஆண்டு இந்த விமானத்தை வடிவமைக்கும் பணிகள் துவங்கின. கடந்த ஆண்டு முதல் முறையாக பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது உலக சுற்றுப் பயணத்தை துவங்கியிருக்கிறது.

வடிவம்

வடிவம்

இந்த சோலார் விமானம் ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு இணையான நீளம் கொண்ட இறக்கைகளை கொண்டது. அதாவது இதன் இறக்கை 236 அடி நீளம் கொண்டது. அதேவேளை, ஏர்பஸ் ஏ380 விமானம் 500 டன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த இம்பல்ஸ் 2 விமானம் வெறும் 2.3 டன் மட்டுமே எடை கொண்டது. ஏனெனில், இது முழுவதும் கார்பன் ஃபைபர் தகடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சோலார் செல்கள்

சோலார் செல்கள்

இந்த விமானத்தின் இறக்கைகள் மீது 17,000 சோலார் தகடுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஆட்டோ பைலட் சிஸ்டம் இருப்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு எளிதானதாக இருக்கிறது. மேலும், நவீன விமானவியல் தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. மேலும், ஆக்சிஜன் சப்ளை செய்யும் வசதி உள்பட அதிக உயரத்தில் பறப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்த விமானம் 39,000 அடி உயரம் வரை பறக்க முடியும்.

வேகம்

வேகம்

மேலே எழும்புவதற்காக ரன்வேயில் ஓடும்போது மணிக்கு 35 கிமீ வேகத்திலும், பறக்கும்போது சராசரியாக 90 கிமீ வேகத்திலும் பறக்கும். இரவு நேரத்தில் மின் திறனை சேமிப்பதற்காக அதிகபட்சமாக 60 கிமீ வேகம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகம் வரை பறக்கக்கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கிள் சீட்டர்

சிங்கிள் சீட்டர்

விமானி மட்டுமே அமர்வதற்கான வசதி கொண்ட இந்த சிங்கிள் சீட்டர் சோலார் விமானத்தை உலக சுற்றுப் பயணத்தின்போது ஆந்த்ரே பார்ச்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்டும் மாறி மாறி இயக்க உள்ளனர்.

 உலக சுற்றுப் பயணம்

உலக சுற்றுப் பயணம்

இந்த விமானம் 5 மாதங்களில் 617 மணி நேர பயணத்தில் சுமார் 35,000 கிமீ தூரத்தை கடக்க உள்ளது. வரும் ஜூலை மாதம் இந்த விமானம் திட்டமிட்டபடி பல்வேறு நாடுகள் வழியாக மீண்டும் அபுதாபியில் தனது பயணத்தை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சவால்கள்

சவால்கள்

பல்வேறு உலக சாதனைகளை படைத்துவிட்ட இந்த விமானம், புதிய உலக சாதனைக்காக உலக சுற்றுப்பயணத்தை துவங்கியிருக்கிறது. அதேவேளையில், இந்த விமானத்தின் வடிவம் இதனை வர்த்தக ரீதியில் தயாரிப்பை கொண்டு செல்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனை மேம்படுத்தி வர்த்தக ரீதியிலான தயாரிப்பு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் ஒரேசேர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Most Read Articles
English summary
Here are given some interesting facts of World's first solar-powered aircraft Solar Impulse 2. Take a look.
Story first published: Tuesday, March 10, 2015, 14:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X