உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்... டொயோட்டா பற்றிய சுவராஸ்யங்கள்!

உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர் என்ற பெருமையை டொயோட்டா மீண்டும் தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு 9.98 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

இரண்டாவது இடத்தை 9.71 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும், மூன்றாவது இடத்தை 9.50 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்த ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமமும் பிடித்தன.

டொயோட்டா காருடன் நிலவுக்கு கூட சென்று வந்துவிடலாம் என்று வாடிக்கையாளர்களிடம் அதீத நம்பிக்கையை பெற்றிருக்கும் அந்த நிறுவனம் குறித்து சில சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் தொகுத்துள்ளோம்.

ஸ்தாபிதம்

ஸ்தாபிதம்

ஜப்பானில், கடந்த 1924ம் ஆண்டு துவங்கப்பட்ட விசைத்தறி எந்திர தயாரிப்பு நிறுவனமான டொயோடா ஆட்டோமேட்டிக் லூம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஓர் பிரிவாக 1933ல் டொயோட்டா ஆட்டோமோட்டிவ் பிரிவு துவங்கப்பட்டது. 1937ல் தனி நிறுவனமாக உதயமான டொயோட்டா கார் நிறுவனம் இன்று மாபெரும் பன்னாட்டு கார் நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது. டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன்(TMC) என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. ஜப்பானின், ஏய்ச்சியை தலைமையிமாக கொண்டு செயல்படுகிறது.

முதல் தயாரிப்பு

முதல் தயாரிப்பு

1934ம் ஆண்டு டொயோட்டா ஆட்டோமோட்டிவ் நிறுவனர் கிச்சிரோ டொயோட்டாவின் மேற்பார்வையில் முதல் முதலாக டைப் ஏ என்ற எஞ்சின் தயாரிக்கப்பட்டது. ஏ1 என்ற காரும், ஜி1 என்ற டிரக்கும் வடிவமைக்கப்பட்டது.

முதல் கார்

முதல் கார்

1936ல் டொயோட்டா ஏஏ முதல் காரை டொயோட்டா தயாரித்தது. இன்று பல்வேறு வகைகளில் 40க்கும் அதிகமான கார் மாடல்களை உலக அளவில் விற்பனை செய்து வருகிறது.

5 பிராண்டுகள்

5 பிராண்டுகள்

டொயோட்டா, ஹினோ, லெக்சஸ், ரான்ஸ் மற்றும் சியோன் ஆகிய 5 பிராண்டுகளில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. இதுதவிர, டெய்ட்சூ, தெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களிலும் பங்குகளை கொண்டுள்ளது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

உலக அளவில் நேரடியாக 3,34 லட்சம் தொழிலாளர்களை கொண்ட மாபெரும் வாகன தயாரிப்பு குழுமமாக டொயோட்டா செயல்படுகிறது

வருவாய்

வருவாய்

உலக அளவில் வருவாய் ஈட்டுவதில் 13வது மிகப்பெரிய நிறுவனமாகவும் விளங்குகிறது.

 உலகின் பெஸ்ட் கார் மாடல்

உலகின் பெஸ்ட் கார் மாடல்

உலகில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற பெருமையை டொயோட்டா கரொல்லா பெற்றுள்ளது. இதுவரை 39 மில்லியன் டொயோட்டா கரொல்லா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 காப்புரிமை

காப்புரிமை

கடந்த 2012ம் ஆண்டு தயாரிப்புக்கு வந்த டொயோட்டா பிரையஸ் ஹைபிரிட் காருக்கு 1,000 காப்புரிமைகளுக்கு டொயோட்டா விண்ணப்பித்தது. 70க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

8 கார் மாடல்கள் விருது

8 கார் மாடல்கள் விருது

2012ல் நம்பகமான கார் மாடல்கள் குறித்து ஜேடி பவர் நடத்திய ஆய்வில் 8 டொயோட்டா கார்கள் முதலிடம் பிடித்தன.

 ஹைபிரிட் கார்கள்

ஹைபிரிட் கார்கள்

அமெரிக்காவில் விற்பனையாகும் 75 சதவீத ஹைபிரிட் கார்கள் டொயோட்டாவின் தயாரிப்புகளே.

ஆயுள்

ஆயுள்

20 ஆண்டுகளுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட 8 சதவீதத்திற்கும் அதிகமான கார்கள் இன்னமும் சாலையில் இயங்கும் நிலையில் இருக்கின்றன.

நன்கொடை

நன்கொடை

1991ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் அரை மில்லியன் டாலரை பணமாகவோ அல்லது வேறு விதத்திலோ டொயோட்டா நிறுவனம் நன்கொடையாக வழங்குகிறது.

வடிவமைப்பு காலம்

வடிவமைப்பு காலம்

ஒரு காரை கான்செப்ட் நிலையிலிருந்து தயாரிப்பு நிலைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது டொயோட்டா.

 200 மில்லியன் கார்கள்

200 மில்லியன் கார்கள்

டொயோட்டா நிறுவனம் இதுவரை 200 மில்லியனுக்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது.

 இந்தியாவில்...

இந்தியாவில்...

1997ல் இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்தின் கூட்டணியுடன் டொயோட்டா கிர்லோஸ்கர் என்ற பெயரில் வர்த்தகத்தில் இறங்கியது. தற்போது 4,975 நேரடி பணியாளர்களுடம் இந்தியாவில் 4வது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. கர்நாடக மாநிலம், பெங்களூர் அருகேயுள்ள பிடதியில் டொயோட்டா கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.

 பெரும் இலக்கு

பெரும் இலக்கு

2008ம் ஆண்டு முதல்முதலாக உலகின் நம்பர்-1 கார் தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றது. இதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டு மீண்டும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டும் விற்பனையில் முதலிடம் வகிக்கும் டொயோட்டா நிறுவனம் இந்த ஆண்டு 10 மில்லியன் வாகனங்களை உலக அளவில் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X