வல்லரசுகளின் வரிசையில் இந்தியா... பிரம்மோஸ்- II ஏவுகணை பற்றிய சிறப்புத் தகவல்கள்!

By Saravana

ஹைப்பர்சானிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் சவுரியா என்ற ஏவுகணை மூலமாக, அமெரிக்காவுக்கு அடுத்து ஈடுபட்ட உலகின் இரண்டாவது நாடு இந்தியாதான் என்று சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த செய்தித் தொகுப்பில் படித்தீர்கள். மேலும், சவுரியா ஹைப்பர்சானிக் ஏவுகணையின் குறிபார்க்கும் திறன் உள்ளிட்ட சில குறைகள், பின்னடைவுகள் இருப்பதையும் தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில், ஹைப்பர்சானிக் ரகத்தில் பிரம்மோஸ்-2 என்ற புதிய ஏவுகணை இந்திய- ரஷ்ய கூட்டணியில் உருவாகி வருவதையும், அந்த செய்தியின் கடைசியில் தெரிவித்திருந்தோம். தற்போது உருவாக்க நிலையில் இருக்கும் இந்த புதிய ஹைப்பர்சானிக் ஏவுகணைதான், நம் நாட்டு படைகளில் சேர்க்கப்பட இருக்கும் முதலாவது ஹைப்பர்சானிக் ஏவுகணை என்ற பெருமையை பெற இருக்கிறது. அதாவது, இதுதான் இந்தியாவின் முதலாவது ஹைப்பர்சானிக் ஏவுகணையாக குறிப்பிடப்படும். இந்த ஏவுகணை பற்றிய சில சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

கலாம் பெயர்

கலாம் பெயர்

இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்' என்ற பெருமையுடன் அழைக்கப்படும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பெயரை பிரம்மோஸ்-II ஏவுகணைக்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரம்மோஸ்-2(K) என்று பெயரிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில எழுத்தான K என்பது கலாமின் பெயரை குறிக்கும்.

 பிரம்மோஸ்- I

பிரம்மோஸ்- I

இந்திய - ரஷ்ய கூட்டணியில் உருவான பிரம்மோஸ்-I ஏவுகணைதான் உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணை மேக்-3 (மணிக்கு 5,914கிமீ )வேகத்தில் பறக்கக்கூடியது. பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்து தரைப்படை மற்றும் கடற்படையில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன. விமானப்படையிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

 விசேஷ எரிபொருள்

விசேஷ எரிபொருள்

பிரம்மோஸ்-I ஏவுகணையை உருவாக்கிய, இந்திய- ரஷ்ய கூட்டணியின் பிரம்மோஸ் நிறுவனம்தான் இந்த புதிய ஏவுகணையையும் தயாரிக்கிறது. இதற்காக, விசேஷ திட எரிபொருள் ஒன்றை ரஷ்யா மிக ரகசியமாக உருவாக்கியிருக்கிறது. அதாவது, அமெரிக்கா, சீனா தயாரித்திருக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணையிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பமாக இருக்கும்.

வேகம்

வேகம்

பிரம்மோஸ்-I ஏவுகணை அதிகபட்சமாக மேக்-3 என்ற வேகத்தில் பாய்ந்து செல்லும். ஆனால், பிரம்மோஸ்-I ஏவுகணை இருமடங்கு வேகத்தில் செல்லக்கூடிதாக பிரம்மோஸ்- II உருவாக்கப்படுகிறது. ஒலியைவிட 7 மடங்கு அதிக வேகத்தில் செல்லத்தக்கது. அதாவது, மேக்-7 என்ற அளவில் இதன் வேகம் இருக்கும். மணிக்கு 8,575 கிமீ வேகத்தில் பாய்ந்து செல்லும். மேலும், இது உலகின் அதிவேக ஏவுகணையாகவும் இருக்கும் என்று கூறுகின்றனர். எனவே, இந்த ஏவுகணை மூலமாக வல்லரசுகளை விஞ்சும் நிலைக்கு இந்தியாவின் பலமும், மதிப்பும் உயரும்.

ரேஞ்ச்

ரேஞ்ச்

இது Cruise Missile ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணை அதிகபட்சமாக 290 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும். இது மிக குறைவான தூரம் கொண்டதாக இருப்பது பின்னடைவுதான். அதற்கான காரணத்தை அடுத்த ஸ்லைடில் பார்க்கலாம்.

ரஷ்ய ஆயுத விற்பனை கொள்கை

ரஷ்ய ஆயுத விற்பனை கொள்கை

ரஷ்யாவின் ஆயுத தொழில்நுட்ப விற்பனை கொள்கை சட்டத்தின்படி, 300 கிமீ தூரத்திற்கும் அதிகமான ரேஞ்ச் கொண்ட ஏவுகணை தொழில்நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்குவதை தடுக்கிறது. ஆனால், எதிர்காலத்தில் நடைமுறைக்கு வரும்போது இந்த ரேஞ்ச் நிச்சயமாக அதிகரிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம். மேலும், இந்த ஏவுகணையின் ரேஞ்ச் அதிகரிப்பதும் மிக எளிது என்கின்றனர்.

தாக்கும் திறன்

தாக்கும் திறன்

மேக்-1 வேகத்தில் பாய்ந்து செல்லும் ஏவுகணையைவிட மேக்-6 வேகத்தில் சென்று தாக்குதல்போது, 36 மடங்கு அதிக அழிவை ஏற்படுத்தும். குறிப்பாக, பதுங்கு குழிகளையும், அணுசக்தி மற்றும் உயிரி ஆயுத கிடங்குகளை மிகவும் துல்லியமாக அழித்துவிடும்.

வெடிபொருட்கள்

வெடிபொருட்கள்

அணு குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளை தாங்கிச் சென்று அழிக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் 2 ஏவுகணையில் அதிகபட்சமாக 300 கிலோ வெடிபொருட்களை வைத்து அனுப்ப முடியும்.

சோதனை

சோதனை

வரும் 2017ம் ஆண்டிற்குள் பிரம்மோஸ்-2 ஹைப்பர்சானிக் ஏவுகணையை தயாரித்து, முதல்கட்ட சோதனைகளை துவங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. வரும் 2022ம் ஆண்டிற்குள் ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய அம்சம்

முக்கிய அம்சம்

இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணையின் மிக முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, எதிரிநாட்டு ரேடார்கள் கணித்து, ஏவுகணையின் மூலமாக வழிமறிப்பதற்குள் காரியத்தை கச்சிதமாக முடித்துவிடும். அதாவது, குறிவைக்கப்பட்ட இலக்கை மிக சாதுர்யமாக சென்று தாக்கிவிடும். மேலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளால் கூட இதன் இலக்கை குறிபார்த்து பயணிப்பதற்கான ஜிபிஎஸ் சிஸ்டத்தில் ஊடுருவி மாற்றங்களை செய்ய இயலாது.

கலாமின் கனவு

கலாமின் கனவு

ஏவுகணை திட்டத்தில் இந்தியா உலகிற்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் கனவு. மேலும், அவரது கனவு ஏவுகணை திட்டத்தையும் தனது சகாக்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொண்டுள்ளார். வெடிப்பொருட்களை இலக்கு நோக்கி வீசிவிட்டு, அந்த ஏவுகணை திரும்பவும் ஏவப்பட்ட இடத்திற்கு திரும்ப வந்துவிட வேண்டும். அதனை மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால், தற்போது அதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை.

ஹைப்பர்சானிக் ஏவுகணை உருவான கதை

ஹைப்பர்சானிக் ஏவுகணை உருவான கதை

1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த, அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்க கடற்படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அரபி கடற்பகுதியிலிருந்து ஏவப்பட்ட தோமஹாக் ரக ஏவுகணைகள் மணிக்கு 885 கிமீ வேகத்தில் பறந்து சென்று தாக்குதல் நடத்தியது. ஆனால், 1800 கிமீ தொலைவுக்கு பறந்து சென்று தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டன. இந்த இடைப்பட்ட நேரத்தில் பின்லேடன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்ததால் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு பொய்த்தது. எனவே, நினைத்தவுடன் இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஹைப்பர்சானிக் ஏவுகணைகளின் அவசியத்தை புரிந்து கொண்டு களத்தில் குதித்தது.

 களத்தில் குதித்த சீனா

களத்தில் குதித்த சீனா

அமெரிக்காவிற்கு எப்போதுமே, தன்னிடம் இருக்கும் ஆயுத பலத்தை வைத்து உலக நாடுகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற அதிகார போதை இருக்கிறது. அவ்வப்போது, அந்நிய நாடுகளின் இடத்தில் அத்துமீறுவது, அதிகாரத்தை நிலைநாட்ட நினைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அதன்படி, சீனாவிடமும் வாலாட்டியது. எனவே, அமெரிக்காவிற்கு போட்டியாக ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டத்தை சீனா கையிலெடுத்திருப்பதுடன், மிக தீவிரமாக அதனை சோதித்து வருகிறது. இந்த ஏவுகணை திட்டத்தை 24 மணிநேரமும் அமெரிக்க உளவுத்துறை கண்காணித்து வருகிறது. அப்படியே, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் கொஞ்சம் பயம் இருக்கட்டும் என்ற கணக்கில் தற்போது இரண்டு மாத இடைவெளிகளில் WU-14 என்ற ஹைப்பர்சானிக் ஏவுகணையை தொடர்ந்து பரிசோதித்து வருகின்றன.

உள்ளுக்குள் உதறல்

உள்ளுக்குள் உதறல்

ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை எதிரிநாடுகள் அவ்வளவு எளிதாக கண்டுபிடித்து, வழிமறித்து அழிப்பது சிரமம். எனவே, சீனாவின் ஹைப்பர்சானிக் ஏவுகணை திட்டம் அமெரிக்காவிற்கு கொஞ்சம் உதறலை கொடுத்திருக்கிறது. மேலும், சீன ஏவுகணை சோதனைகள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருவதுடன், மேல்மட்டத்தில் கவலையுடன் விவாதிக்கப்படும் டாப்பிக்காக இருக்கிறதாம். நம்மைவிட இப்போது அமெரிக்காவுக்குத்தான் சீனாவின் ஏவுகணை திட்டம் கண்ணை உறுத்தி வருகிறது.

கவலை

கவலை

ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் உருவாக்கம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், இதுபோன்ற ஆயுத போட்டி, அவசியமில்லாத போர்களை ஏற்படுத்தும் என்பதுடன், அதிக அழிவுகளை தரவல்லதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், தனது நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது, இதுபோன்ற ஆயுதங்கள் அவசியமாகிறது என்று பல நாடுகள் கருத்து தெரிவிக்கின்றன.

பிரம்மோஸ்- II ஏவுகணை பற்றிய சிறப்புத் தகவல்கள்!

01. இந்தியாவின் முதல் ஹைப்பர்சானிக் ஏவுகணை

02. சுகோய் போர் விமானத்தில் 3 டன் பிரம்மோஸ் ஏவுகணையை பொருத்தும் இந்தியா!

03. அக்னி ஏவுகணையின் சிறப்புகள்

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Facts Of Brahmos II Hypersonic Missile.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X