இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ரயில் எஞ்சின் WAP-7 பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

இந்தியாவின் அதிசக்திவாய்ந்த மற்றும் அதிவேக மின்சார ரயில் எஞ்சின்களில் ஒன்று WAP-7. இது அதிவேகமும், சக்திவாய்ந்த எஞ்சினாக குறிப்பிடுவதற்கு பிற மின்சார ரயில் எஞ்சின்களை காட்டிலும் மிகவும் வெற்றிகரமானதாக குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவின் பிரபல அதிவேக ரயில்களான ராஜ்தானி, துரந்தோ போன்ற நீண்ட தூர மற்றும் அதிவேக ரயில்களில் இந்த மின்சார ரயில் எஞ்சின்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்

மாடல்

சரக்கு ரயில்களில் அதிகம் பயன்படுத்தப்படும் WAG-9 மின்சார ரயில் எஞ்சினின் மாறுதல்கள் செய்யப்பட்ட பயணிகள் ரயில்களுக்காக உருவாக்கப்பட்ட மாடல்தான் WAP-7. மேலும், WAP-4 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டது.

WAP-7... அப்படீன்னா...?

WAP-7... அப்படீன்னா...?

WAP-7 என்பதில், W என்பது அகலப்பாதை ரயில் எஞ்சின் என்பதையும், A என்பது AC Power அதாவது, மாறுதிசை மின்னோட்டம் என்பதையும் குறிக்கிறது. இந்த ரயில் எஞ்சினை மின்மயமாக்கப்பட்ட பாதையில் மட்டும் இயக்க முடியும். P என்ற ஆங்கில எழுத்து Passenger என்ற பயணிகள் ரயிலில் பயன்படுத்துவதற்கானதாக குறிக்கிறது. 7 என்பது இதன் வரிசையில் எத்தனையாவது மாடல் என்பதை குறிக்கிறது.

தயாரிப்பு

தயாரிப்பு

இந்த WAP-7 மின்சார ரயில் எஞ்சின் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. சென்னையின் ராயபுரம், துக்ளகாபாத், பிலாய், ஹவுரா, அஜ்னி, லாலகுடா, காஸியாபாத் ஆகிய ரயில் எஞ்சின் பணிமனைகளில் பராமரிக்கப்படுகிறது.

 பயன்பாடு

பயன்பாடு

கடந்த ஆண்டு செப்டம்பர் வரையில், சித்தரஞ்சன் தொழிற்சாலையிலிருந்து 236 WAP-7 மின்சார ரயில் எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தும் பயன்பாட்டில் இருக்கின்றன.

வேகம்

வேகம்

இந்த ரயில் எஞ்சின் சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சமாக 160 கிமீ வேகம் வரை தொட்டது. ஆனால், 140 கிமீ வேகம் வரை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே அதிவேக ரயில்களில் இந்த எஞ்சின் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

எஞ்சின் சக்தி

எஞ்சின் சக்தி

அதிகபட்சமாக 6,350 குதிரைசக்தி திறனை இதன் மின் மோட்டார்கள் வெளிப்படுத்தும். இந்தியாவின் அதிசக்திவாய்ந்த ரயில் எஞ்சின்களில் ஒன்று என்பதனால், அதிகபட்சமாக 24 முதல் 26 ரயில் பெட்டிகள் வரை இணைக்க முடியும்.

 நீண்ட தூர ரயில்கள்

நீண்ட தூர ரயில்கள்

சென்னை - நிஜாமுதீன், எர்ணாகுளம்- நிஜாமுதீன், மும்பை- டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்- புது டெல்லி, பெங்களூர்- நிஜாமுதீன், எர்ணாகுளம்- நிஜாமுதீன் துரந்தோ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல நீண்ட தூர ரயில்களில் இந்த எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

இந்த ரயில் எஞ்சினில் பிரேக் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி கூடுதல் மின் சக்தியை பெறும் வசதி இருப்பது இதன் மிக முக்கிய அம்சம். இதன்மூலமாக 30 முதல் 35 சதவீதம் மின் ஆற்றல் தேவை நிறைவு செய்யப்படுகிறது.

பழுது கண்டறியும் வசதி

பழுது கண்டறியும் வசதி

இந்த எஞ்சினில் உள்ள மைக்ரோபிராசசர் மூலமாக, ரயில் எஞ்சினில் ஏற்படும் பழுதுகளை எளிதாக கண்டறிய முடியும். இதனால், எங்கு பழுது இருக்கிறது என்பதை உடனடியாக கண்டறிந்து சரிசெய்யவும் வாய்ப்புள்ளது.

ஜெனரேட்டர் தேவையில்லை...

ஜெனரேட்டர் தேவையில்லை...

ராஜ்தானி, சதாப்தி உள்ளிட்ட குளிர்சாதன ரயில் பெட்டிகளுக்கு தேவையான மின்சாரத்திற்காக தனியாக ஜெனரேட்டர் பெட்டி இணைக்கப்படுகிறது. ஆனால், இந்த ரயில் எஞ்சின் இணைக்கப்பட்டால் தனியாக ஜெனரேட்டர் ரயில் பெட்டி தேவையில்லை. இதன்மூலமாக பராமரிப்பு மற்றும் இயக்குதல் செலவு வெகுவாக மிச்சப்படுகிறதாம்.

நீங்கள் பயணிக்கும் ரயிலிலும்...

நீங்கள் பயணிக்கும் ரயிலிலும்...

வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கோவை எஸ்எஃப் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் மெயில், சென்னை- ஆழப்புழா, ஹவுரா- சென்னை மெயில், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், செனை- காஸியாபாத் ராஜ்தானி எக்ஸ்பிரஸ், சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ், சென்னை -பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது. பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் WAP-7 மற்றும் WAP-4 எஞ்சின்கள் யன்படுத்தப்படுகிறது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Please Wait while comments are loading...

Latest Photos