விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

செயற்கையான தீவு போன்ற மிக பிரம்மாண்டமான வடிவத்தில் இருக்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் ராணுவ பலத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன.

தரைப்படை, விமானப்படையை விட ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் இப்போது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் உலகின் எந்த மூலையையும் மிக அருகாமையில் சென்று தாக்கும் வல்லமையை பெற்றிருப்பதே இதற்கு காரணம்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பல தொழில்நுட்ப சவால்களையும், அதிக அபாயங்களையும் கொண்டவை விமானம் தாங்கி போர்க்கப்பல்கள். மிதக்கும் ராணுவ தளமாக பயன்படுத்தக்கூடிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யங்கள், அதில் இருக்கும் பல சவால்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வடிவத்தில் மிகவும் பிரம்மாண்டமானவை என்பது தெரிந்ததே. பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஒன்று சேர்த்தது போன்ற உருவத்துடன் வலம் வரும் இந்த கப்பல்களை இயக்குவதும், பாதுகாப்பதும் மிகப்பெரிய காரியம்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

தரை இலக்கு, வான் இலக்கு, கடல் இலக்கு என மூன்றையும் தாக்கும் வல்லமை பொருந்தியது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள். மேலும், எதிரி நாடுகளுக்கு அருகாமையில் கொண்டு சென்று தாக்குதல் நடத்த முடியும்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் தயாரித்தது. ஆனால், அது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கியது. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட். இந்த கப்பல் 1,04,600 டன் எடை கொண்டது.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

மேலும், அமெரிக்காவின் நிமிட்ஸ் கிளாஸ் கப்பல் 1,092 அடி நீளம் கொண்டது. இந்த போர்க்கப்பலில் 90 நிலையான இறக்கை அமைப்பை கொண்ட போர் விமானங்களை நிறுத்த முடியும். உலகின் 70 சதவீத நாடுகளின் விமானப்படையின் பலத்தை ஒப்பிடும்போது, இந்த ஒரு கப்பலில் இருக்கும் விமானப் படையின் பலம் மிக அதிகமாம்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

மிதக்கும் ராணுவ தளமாக செயல்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதற்கான எரிபொருள் செலவீனம் மிக அதிகம். இதனால், அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கப்பல்களுக்கு 20 ஆண்டுகள் வரை எரிபொருள் நிரப்ப தேவையில்லை.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதற்கு நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் டாலர்கள் செலவு பிடிக்கிறது. விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வாங்குவதற்கான செலவைவிட அதனை பராமரிப்பதற்கும், இயக்குவதற்கான செலவு மிக அதிகம். எனவேதான் உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளிடம் கூட அதிக விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இல்லை.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயிற்சிக்காகவும், போர் சமயங்களிலும் விமானங்கள் செலுத்தப்படுவதும், தரை இறக்குவதுமாக மிகவும் பரபரப்பாக இருக்கும். விமானங்களால் மட்டுமின்றி, அதிக எரிபொருள், தீப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதியாகவும் இருக்கிறது. எனவே, மிகவும் அபாயகரமான பணிபுரியும் பகுதிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் அதிகபட்சமாக 500 மீட்டர் அளவுக்குத்தான் ஓடுபாதை இருக்கும். எனவே, விமானங்கள் கிளம்புவதும், தரை இறக்குவதும் மிகவும் சவால் நிறைந்த ஒன்று. விமானங்கள் மேலே எழும்புவதற்கு தேவையான வேகத்தை எட்டுவதற்காகவே, விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் கேட்டபுல்ட் என்ற இழுவை அமைப்பு இருக்கிறது.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானத்தின் எஞ்சின் சக்தியும், இந்த கேட்டபுலட் அமைப்பின் இழுவை வேகம் காரணமாக, போர் விமானம் வெறும் 2 வினாடிகளில் 0- 300 கிமீ வேகத்தை போர் விமானங்கள் எட்டிவிடும். அப்போது, முகத்தில் ஓங்கி குத்துவிடுவது போன்ற உணர்வு ஏற்படும் என பைலட்டுகள் தெரிவிக்கின்றனர்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

அதேபோன்று, தரை இறக்குவதும் மிகவும் கடினம். மோசமான சீதோஷ்ண நிலைகளின்போது, நில அதிர்வு இருப்பது போன்று கப்பலின் ஓடுபாதையில் அதிக அதிர்வுகளும், அசைவுகளும் இருக்கும். அதனை துல்லியமாக கணித்து தரை இறக்க வேண்டும்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

விமானம் தரை இறங்கும்போது கப்பலின் மேல் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் 4 தடுப்பு கம்பி வடங்களில் ஒன்றில், விமானத்தின் பின்புறம் இருக்கும் கொக்கியை மாட்டிவிட வேண்டும் பொறுப்பு பைலட்டுக்கு உள்ளது. இந்த கொக்கியில் மாட்டும்போது மணிக்கு 250 கிமீ வேகத்தில் தரை இறங்கும் விமானம் வெறும் 2 நொடிகளில் நின்றுவிடும். அதுவும் 315 அடி தூரத்திற்குள் நின்றுவிடும்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

குறிப்பாக, இரவு நேரங்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் போர் விமானங்களை தரை இறக்குவது மிகவும் சவாலான பணி என பைலட்டுகள் தெரிவிக்கின்றனர். பல அனுபவம் வாய்ந்த பைலட்டுகள் கூட இது திகிலானதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளிலிருந்து விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தற்காத்து கொள்ளும் அமைப்பு விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் உண்டு. அதேபோன்று, விமானம் மட்டுமின்றி, ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்துவதற்கான வசதிகளும் உண்டு.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

பல சவால்கள் இருந்தாலும், விமானம் தாங்கி போர்க்கப்பல் என்பது நாட்டின் பாதுகாப்பை பரைசாற்றும் விஷயமாக இருப்பதால், தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த போர்க்கப்பல்களை கட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியாவும் மிக நீண்ட காலமாக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்கி வருகிறது. 1961ம் ஆண்டு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலையும், 1987ல் ஐஎன்எஸ் விராத் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியது. தற்போது இரண்டு கப்பல்களும் சேவையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பல் சேவையில் உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுதவிர்த்து, ஐஎன்எஸ் விஷால் என்ற மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலையும் 2025ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது.

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Technical Things About Aircraft Carriers.
Story first published: Wednesday, May 31, 2017, 15:24 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos