சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

Written By:

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் வாய்ந்த அக்னி-5 மற்றும் அக்னி-4 ஏவுகணைகளை நம் நாட்டு பாதுகாப்புத் துறை அடுத்தடுத்து வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அண்டை நாடுகளை அலற விட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் புகுந்து அவ்வப்போது சில்மிஷம் காட்டி வரும் சீனாவிற்கு செக் வைக்கவே இந்த இரு ஏவுகணை சோதனைகளையும் நம் நாட்டு பாதுகாப்புத் துறை சோதனை நடத்தி இருக்கிறது.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

இந்த நிலையில், அக்னி-4 ஏவுகணை சோதனைகள் மூலமாக ஏவுகணை ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளை இந்தியா மீறி வருவதாக சீன மீடியாக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றன. இந்த பிரச்னையை ஐ.நா.சபை அளவுக்கு செல்லும் பிரச்னையாக பூதாகரமாக சித்தரித்து வெளியிட்டு இருப்பதுடன், அக்னி-4 போன்ற ஏவுகணையை சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தானையும் அவை தூண்டியிருக்கின்றன. இந்த நிலையில், அக்னி-4 ஏவுகணையை கண்டு சீனா அதிக அச்சமுறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அக்னி-4 ஏவுகணையின் சிறப்பை தொடர்ந்து காணலாம்.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

அக்னி வரிசையில் அதிக தூரம் பாய்ந்து செல்லும் வல்லமை கொண்ட மாடல்கள்தான் அக்னி-4 மற்றும் அக்னி-5. இந்த இரு ஏவுகணைகளும் இந்தியாவிலிருந்து அதிக தூரத்தில் உள்ள சீனாவின் முக்கிய நகரங்களை கூட தாக்கும் திறன் வாய்ந்தவை. இதனால், அந்த நாடு இந்தியாவிடம் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

அக்னி-5 ஏவுகணை 5,000 கிமீ தூரத்துக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை கொண்டது. அதேபோன்று, அக்னி-4 ஏவுகணையும் 4,000 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை அச்சு பிசகாமல் குறி வைத்து தாக்கும். இதனால், சீனாவின் எந்தவொரு பகுதியையும் தாக்கும் வல்லமையை இந்தியா பெற்றிருக்கிறது. குறிப்பாக, அந்நாட்டு ராணுவ மையங்கள், வெடிமருந்து கிடங்குகளை இந்த ஏவுகணைகளை கொண்டு எளிதில் தாக்க முடியும்.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

அக்னி-4 மற்றும் அக்னி-5 ஏவுகணைகளின் மிக முக்கிய சிறப்பம்சம். அணு ஆயுதங்களை வைத்து ஏவும் வசதியை கொண்டிருப்பதுதான். இதனால், அண்டை நாடுகள் சற்று இந்தியா மீது போர் தொடுப்பதற்கு ஒருமுறைக்கு பல முறை யோசிக்கும். இந்த ஏவுகணைகளை பிரயோகப்படுத்துவது என்பது நோக்கமல்ல என்றாலும், எதிரிகள் வாலாட்டுவதை குறைத்துக் கொள்வது நிச்சயம்.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

அக்னி-4 ஏவுகணையானது 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. இந்த ஏவுகணை இரண்டடுக்கு திட எரிபொருள் கொண்ட கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன் முனைப்பகுதியில் வெடிப்பொருட்களை வைத்து ஏவ முடியும்.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

இந்த ஏவுகணையில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் வழியில் ஏற்படும் இடையூறுகளுக்கு தக்கவாறு இலக்கை நோக்கிய பயணத்தை தானாகவே மாற்றிக்கொண்டு பயணிக்கும். இது மிக மிக நவீன தொழில்நுட்ப அம்சமாக கூற முடியும்.

இந்த ஏவுகணையை நம் நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் வாகனத்தில் வைத்து ஏவ முடியும். எல்லைக்கு மிக அருகாமையில் கொண்டு சென்று ஏவுவதன் மூலமாக, எதிரி நாடுகளுக்குள் அதிக தூர இலக்குகளை குறிவைத்து ஏவுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், எதிரிகள் எளிதில் கண்டறியாதவாறு, இடத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற ஏவுகணைகள் மிக மிக அதிவேகத்தில் பறக்கும்போது, உராய்வின் மூலமாக அதன் முன் முனைப்பகுதியில் 3,000 டிகிரி அளவுக்கு வெப்பம் உருவாகும். அந்த வெப்பத்திலிருந்து முன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் அணுவெடிப்பொருட்கள் இலக்கை தாக்கும் வரை எந்த சேதமும் ஏற்படாதவாறு தக்க பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

இந்த ஏவுகணையை ஏவுவதற்காக 8*8 தத்ரா டெலர் ரெயில் மொபைல் வாகனம் பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் எந்த நேரத்திலும் அக்னி-4 ஏவுகணையை பொருத்தி செலுத்த முடியும்.

 சீன மீடியாக்களை புலம்ப விட்ட அக்னி-4 ஏவுகணை!

அக்னி-4 ஏவுகணை வரை ராணுவ பயன்பாட்டில் சேர்க்கப்பட்டுவிட்டது. விரைவில் அக்னி-5 ஏவுகணை சேர்க்கப்பட உள்ளது. அடுத்ததாக, 8,000 முதல் 12,000 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்ல அக்னி-6 ஏவுகணை தயாரிப்பும் நடந்து வருகிறது.

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் எஸ்யூவி காரின் படங்கள்!

ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்விஆர் சொகுசு எஸ்யூவி காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Things About Agni-IV Missile.
Story first published: Monday, January 23, 2017, 12:29 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos