அமெரிக்காவின் சதியையும் மீறி சிறகு முளைத்த அக்னி ஏவுகணை - சிறப்பம்சங்கள்!!

அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்த அக்னி ஏவுகணை திட்டத்தை முடக்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட ராஜதந்திரங்கள் மற்றும் சதிச் செயல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் கடைசியாக எழுதிய புத்தகத்தில், அக்னி ஏவுகணை திட்டத்தை முடக்குவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட சதிச் செயல்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் ராஜதந்திர முயற்சிகளை தவிடுபொடியாக்கி, அப்துல்கலாம் என்ற ஒற்றை ஆளுமையின் அசாத்திய தைரியத்தாலும், சிந்தைனையாலும் சிறகு முளைத்த அக்னி ஏவுகணை இன்று ராணுவ பலத்தில் இந்தியாவை சூப்பர் பவர் நாடுகளின் வரிசையில் கொண்டு சேர்த்துள்ளது. இந்த ஏவுகணை பற்றிய சில முக்கிய விஷயங்களை பார்க்கலாம்.

அக்னி ஏவுகணை நாயகன்

அக்னி ஏவுகணை நாயகன்

மறைந்த ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தலைமையிலான குழுவினர்தான் அக்னி ஏவுகணையை உருவாக்கினர். பஞ்ச பூதங்களில் நெருப்பை குறிக்கும் வகையில், அக்னி என்று பெயரிடப்பட்டது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்ட இந்த அக்னி ஏவுகணை இன்று 6 தலைமுறைகளை கடந்த மாடலாக மேம்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அக்னி குடும்ப வரிசை, அதன் வேகம், வீச்சு ஆகியவை பற்றிய தகவல்களை தொடர்ந்து காணலாம்.

உலக நாட்டாமையின் சதி...

உலக நாட்டாமையின் சதி...

கடந்த 1989ம் ஆண்டு மே மாதம் 22ந் தேதி அக்னி ஏவுகணை பரிசோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று அதிகாலை 3 மணிக்கு அக்னி திட்டத்தின் தலைவர் அப்துல்கலாமை ஹாட்லைனில் தொடர்பு கொண்ட அப்போதைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் அமைச்சரவை செயலாளர் டி.என்.சேஷன் அமெரிக்கா அக்னி ஏவுகணை செலுத்துவதை நிறுத்த கோரி மிகுந்த அழுத்தம் கொடுப்பதாகவும், அதனை நிறுத்த முடியுமா என்று கேட்டுள்ளார். அப்போது சாமர்த்தியமாக நிலைமையை அப்துல் கலாம் விளக்கி கூறியிருக்கிறார். இதையடுத்து, டி.என்.சேஷன் அக்னி ஏவுகணையை சோதனை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் அப்துல் கலாம் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

சிறகு முளைத்த அக்னி

சிறகு முளைத்த அக்னி

டி.என்.சேஷன் ஒப்புதல் அளித்த பின்னர் திட்டமிட்டபடி, அக்னி ஏவுகணை இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்று தாக்கி அழித்தது. இதன்மூலமாக, உலக அரங்கில் அணு ஆயுத ஏவுகணை செலுத்தும் வல்லமை கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்தது.

தனி நிதி ஒதுக்கீடு

தனி நிதி ஒதுக்கீடு

1991ல் அக்னி- 1 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அக்னி ஏவுகணையின் முக்கியத்துவம் கருதி, ராணுவ பட்ஜெட்டிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனித் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அக்னி ஏவுகணை குடும்பம்

அக்னி ஏவுகணை குடும்பம்

அக்னி -1 என்பது குறைந்த தூர ஏவுகணை. குறைந்தது 700 கிமீ தூரம் முதல் 1,250 கிமீ வரையிலான இலக்குகளை சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. திட எரிபொருளில் இயங்கும் இந்த ஏவுகணை 15 மீட்டர் நீளம் கொண்டது. 12,000 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை, 1,000 கிலோ வரை அணு ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்களை தாங்கிச் செல்லும். வினாடிக்கு 2.5 கிமீ வேகத்தில் பாய்ந்து செல்லும். கடைசியாக 8.11.2013 அன்று ஒடிஷா மாநிலம், வீலர் தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து 11வது முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

 அக்னி- 2

அக்னி- 2

அக்னி 2 என்பது நடுத்தர தூர வகை ஏவுகணை. குறைந்தது 2,000 கிமீ தூரம் முதல் 3,000 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. தற்போது பயன்பாட்டில் உள்ளது. 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணையிலும் 1,000 கிலோ வெடிபொருட்களை வைத்து செலுத்த முடியும். ராணுவ பயன்பாட்டில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுவிட்டது. பலமுறை இந்த ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதித்துள்ளனர்.

 அக்னி- 3

அக்னி- 3

நடுத்தர தூர இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை. அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை எளிதாக சமாளிக்க இந்த ஏவுகணை உதவுகிறது. 3,500 முதல் 5,000 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை சென்று தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. கடந்த 2013ம் ஆண்டில் இந்த ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டது. அதிகபட்சமாக 2.5 டன் வெடிப்பொருளை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும். இருகட்டமாக செயல்படும் திட எரிபொருள் மூலமாக இயக்கப்படுகிறது. வினாடிக்கு 6 கிமீ வேகத்தில் சீறிச் செல்லும்.

அக்னி- 4

அக்னி- 4

நடுத்தர தூர இலக்கை வைத்து ஏவக்கூடிய ஏவுகணை. குறிப்பிட்ட இடத்திலிருந்து என்று இல்லாமல், வாகனங்களில் உள்ள ஏவுதளத்தை பயன்படுத்தி, ஏவக்கூடிய வசதி கொண்டது. இந்த ஏவுகணை 3,000 கிமீ தூரம் முதல் 4,000 கிமீ தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. 20 மீட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. 3,000 டிகிரி வெப்ப நிலையில் கூட சிறப்பாக இயங்கும். கடந்த 2011ம் ஆண்டு முதல்முறையாக ஒடிஷா மாநிலம், வீலர் தீவிலிருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டது.

அக்னி- 5

அக்னி- 5

இது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறது. 5,000 கிமீ முதல் 8,000 கிமீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. ஈரடுக்கு எரிபொருள் நிலைகள் கொண்ட அக்னி- 3 ஏவுகணையில் கூடுதலாக ஒரு எரிபொருள் அடுக்கு சேர்க்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மாடல்தான் அக்னி 5 ஏவுகணை. இதுவும், வாகனங்கள் மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று எளிதாக ஏவ முடியும். கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 15ந் தேதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. தற்போது சோதனைகளில்தான் உள்ளது. விரைவில் ராணுவ பயன்பாட்டில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி -5 திட்டம் சீனாவின் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களை குறி வைத்து உருவாக்கப்பட்டதாக பேச்சும் உண்டு. அக்னி 5 ஏவுகணையை உருவாக்குவதற்கு 2,500 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

 அக்னி- 6

அக்னி- 6

அக்னி குடும்ப வரிசையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஏவுகணையாக உருவாக்கப்பட்டு வருகிறது. 8,000 கிமீ தூரம் முதல் 10,000 கிமீ தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. நிலத்தில் மட்டுமின்றி, நீர்மூழ்கி கப்பல்களிலிருந்தும் ஏவுவதற்கான வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

வல்லமை

வல்லமை

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணையை வைத்திருக்கும் நாடு என்ற பெருமை இந்தியாவும் உள்ளது.

சதி செய்த அமெரிக்காவை தாக்குமா?

சதி செய்த அமெரிக்காவை தாக்குமா?

ஒரு முறை மாணவர்களுடன் அப்துல் கலாம் லந்துரையாடியபோது, ஒரு மாணவன் அக்னி ஏவுகணை அமெரிக்காவை தாக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் சாதுர்யமாக, யாரும் நமக்கு எதிரி கிடையாது. முதலில் ஆயுதத்தை பிரயோகப்படுத்த மாட்டோம் என்று உலக நாடுகளுக்கு உறுதி கொடுத்துள்ளோம். ஆனால், போர் என்று வரும்போது உலகின் எந்த ஒரு மூலையையும் அக்னியை வைத்து தாக்க முடியும் என்று அப்துல் கலாம் ஆணித்தரமாக கூறினார். அவரது கனவுப்படியே, தற்போது அக்னி- 6 ஏவுகணை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதர சுவாரஸ்யங்கள்....

01. உலகின் அதிவேக சாலைகள்...

02. உலகின் மிகப்பெரிய பார்க்கிங் வளாகங்கள்...

03. மிகப்பெரிய தானியங்கி கார் பார்க்கிங் வளாகம்

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்...

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்...

டிரைஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்...

Most Read Articles

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Things About Agni Missiles.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X