இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும் புதிய அப்பாச்சி ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

நம் நாட்டு ராணுவத்திற்காக தாக்குதல் சிறப்பம்சங்கள் பொருந்திய, 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட இருக்கின்றன. இந்த ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

ஆயுதங்கள் பொருத்தப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ராணுவம் கொடுத்த கோரிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறையின் கொள்முதல் பிரிவு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே இந்திய விமானப்படையின் பயன்பாட்டிற்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இப்போது ராணுவத்திற்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டு இருக்கிறது.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

மொத்தம் 6 ஹெலிகாப்டர்கள் ரூ.4,168 கோடி மதிப்பில் ராணுவத்திற்காக வாங்கப்பட உள்ளன. உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றை போயிங் நிறுவனம் வழங்கும்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

தற்போது ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள ரஷ்ய தயாரிப்புகளான எம்ஐ- 25 மற்றும் எம்ஐ-35 ஆகிய ஹெலிகாப்டர் மாடல்கள் பழமையாகிவிட்டதால், இந்த புதிய தாக்குதல் ஹெலிகாப்டர்களை ராணுவம் வாங்க இருக்கிறது.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

1975ம் ஆண்டில் அ்பபாச்சி ஏஎச்- 64இ ராணுவ ஹெலிகாப்டரை அமெரிக்காவை சேர்ந்த ஹக்கெஸ் நிறுவனம் தயாரித்தது. 1981ல் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சோதனைக்காக அமெரிக்க ராணுவத்திடம் வழங்கப்பட்டது.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

இந்த நிலையில், 1984ம் ஆண்டில் இந்த ஹெலிகாப்டர் தயாரிப்பு உரிமையை மெக்டொனல் டக்ளஸ் நிறுவனம் வாங்கியது. இதைத்தொடர்ந்து, 1997ல் போயிங் விமான நிறுவனம் இந்த ஹெலிகாப்டர் தயாரிப்பு உரிமையை பெற்றது. இதுவரை 2,000க்கும் அதிகமான அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் கால மாற்றத்துக்கு தக்கவாறு அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. அத்துடன், ஏஎச்-64 என்ற மாடல் ஏ, பி, சி, டி ஆகிய வரிசைகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா வாங்க இருக்கும் மாடல் ஏஎச்-64 இ என்ற மாடல். இது மிகவும் நவீன வகை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் துணை விமானி அல்லது துப்பாக்கியை கையாளும் வீரருக்கு விசேஷ ஹெல்மெட் கொடுக்கப்படுகிறது. இந்த ஹெல்மெட்டில் இருக்கும் திரை மூலமாக, இந்த ஹெலிகாப்டரின் 30மிமீ ஆட்டோமேட்டிக் எம்230 செயின் துப்பாக்கியை துல்லியமாக இயக்க முடியும். இலக்கை சரியாக குறிபார்த்து தாக்குதல் நடத்த முடியும்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

இரவு நேரத்தில் இயக்குவதற்கான நைட் விஷன் அசிஸ்ட் சிஸ்டமும் இருக்கிறது. இது சர்ஜிக்கல் தாக்குதல் உள்ளிட்டவற்றை துல்லியமாக நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

இந்த ஹெலிகாப்டரில் இரண்டு ஜெனரல் எலக்ட்ரிக் டி700- ஜிஇ 701 டர்போசாஃப்ட் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக மணிக்கு 365 கிமீ வேகம் வரை செல்லும். மணிக்கு 265 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது, 480 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதேபோன்று, 480 கிமீ பரப்பளவுக்கு தாக்குதல் நடத்த முடியும். எல்லையோரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் சீன துருப்புகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதை கண்காணிக்கவும், தேவைப்பட்டால் தாக்குதல் நடத்தவும் இந்த ஹெலிகாப்டர் உதவும்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

உலகிலேயே மிகவும் நவீன அம்சங்கள் பொருந்தியது ஏஎச்-64 இ ஹெலிகாப்டர். இந்த ஹெலிகாப்டர்களில் 812- ஏஜிஎம்-114எல்-3 ஹெல்ஃபயர் லாங்போ ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அதேபோன்று, 542 ஏஜிஎம்- 114ஆர்-3 ஹெல்ஃபயர் 2 ஏவுகணைகளும், 245 ஸ்டிங்கெர் பிளாக் ஐ- 92எச் ஏவுகணைகளும், 12 ஏஎன்/ஏபிஜி 78 ரேடார்களும் பொருத்தப்பட்டு இருக்கும்.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

இந்த ஏவுகணைகள் மற்றும் ரேடார் சாதனங்கள் அமெரிக்க படைகளில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிக நவீனமான ஏவுகணை மற்றும் சாதனங்களை இந்த ஹெலிகாப்டர்கள் பெற்றிருக்கும். ஈராக் போர், வளைகுடா போர் உள்ளிட்ட பல ராணுவ நடவடிக்கைகளில் இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அப்பாச்சி ராணுவ ஹெலிகாப்டர்களின் சிறப்பம்சங்கள்!

வரும் 2019ம் ஆண்டில் இந்திய விமானப்படைக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கும். இந்திய விமானப் படைக்கு 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் டெலிவிரி கொடுக்கப்பட்டவுடன், அடுத்து ராணுவத்திற்கு 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் டெலிவிரி கொடுக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Things About Apache AH-64E Helicopter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X