டயர் கிழிந்தாலும் ஸிப் கேபிள்களை போட்டு ஓட்டும் அதிசயம்... ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குளின் டயர்கள்

டக்கார் ராலி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வீரர்களின் சாகச செயல்களும், சில சுவாரஸ்ய சம்பவங்களும் மோட்டார் பந்தய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. அந்த வகையில், கேடிஎம் ஃபேக்டரி அணி வீரர் டோபி பிரைஸ் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

டக்கார் ராலியின் பைக் பிரிவில் முன்னணி வீரர்களில் ஒருவர் டோபி பிரைஸ். ரெட்புல் ஃபேக்டரி கேடிஎம் ராலி டீம் சார்பில் பங்கேற்று வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டோபி பிரைஸ் 2016 மற்றும் 2019ம் ஆண்டு டக்கார் ராலி போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர். மூன்றாவது முறையாக டக்கார் ராலியில் சாம்பியன் பட்டம் பெறும் கனவுடன் உத்வேகத்துடன் டக்கார் ராலியில் பங்கேற்று அசத்தி வருகிறார்.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

இந்த சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த 7வது ஸ்டேஜ் பந்தயத்தின்போது, டோபி பிரைஸ் பைக்கின் பின்புற டயர் கிழிந்துவிட்டது. அத்துடன் அந்த 7வது ஸ்டேஜை நிறைவு செய்த டோபி பிரைஸ், மறுநாள் நடந்த 8வது ஸ்டேஜ் பந்தயத்தில் டயரை மாற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

மாரத்தான் ஸ்டேஜ் போட்டியின்போது டயரை மாற்றுவதற்கு 30 நிமிடங்கள் அபராதம் விதிக்கப்படுவதை கருத்தில்க்கொண்டு, தொடர்ந்து தனது பைக்கின் கிழிந்த டயருடன் பங்கேற்றார். மேலும், கிழிந்த டயரை ஸிப் கேபிள் போட்டு இறுக்கிக் கட்டிக் கொண்டு பங்கேற்றார்.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

வழக்கமாக செல்வது போன்று அதிவேகத்தில் கவனம் செலுத்தாமல், நேரத்தையும், வழித்தடத்தையும் சரியாக கணக்கிட்டு, சரியான வேகத்தில் பைக்கை செலுத்தி 8வது ஸ்டேஜ் போட்டியை நிறைவு செய்தார். இதில் சுவாரஸ்ய விஷயம், அதிக தூரம் கொண்ட 8வது ஸ்டேஜ் பந்தயத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தினார். அதுவும் அந்த கிழிந்து போன டயருடன் நிறைவு செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில், அவர் தனது பைக்கின் கிழிந்த டயரை ஸிப் கேபிள் போட்டு இறுக்கிக் கட்டுவது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. அது எவ்வாறு கிழிந்த டயரை ஸிப் கேபிள் போட்டு கட்டிக் கொண்டு ஓட்ட முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

டக்கார் ராலியில் பயன்படுத்தப்படும் பந்தய வகை பைக்குகளில் மிச்செலின் நிறுவனத்தின் மில் பட்டன் கொண்ட விசேஷ டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ட்யூப்லெஸ் வகை டயர்களில் காற்றுக்கு பதிலாக 'பிப் மூசே' என்ற கெட்டித்தன்மை கொண்ட ரசாயன நுரை கலவை இடம்பெறுகிறது. மிக மிக கரடுமுரடான நிலப்பரப்புகளை இந்த டயர்கள் மூலமாகவே வீரர்கள் அதிக நம்பிக்கையுடன் சீறிப்பாய்ந்து செல்கின்றனர்.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

இந்த கலவை டயரின் வெளிப்புறம் கிழிந்தாலும், தொடர்ந்து பைக்கை செலுத்துவதற்கு உட்புறத்தில் கடினமான தன்மையுடன் உறுதியை டயருக்கு வழங்குகிறது. எனவே, டயரின் வெளிப்புறத்தை மட்டும் ஸிப் கேபிள்களை கொண்டு சக்கரத்துடன் இறுக்கிக் கொண்டு 8வது ஸ்டேஜ் பந்தயத்தை டோபி பிரைஸ் நிறைவு செய்துள்ளார்.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

இந்த ஆண்டு டக்கார் ராலி போட்டியில் வீரர்கள் மொத்தமாகவே 6 டயர்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு இருப்பதும் டோபி பிரைஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. எனவே, வேறு வழியின்றி இந்த ஜுகாத் வேலைப்பாட்டுடன் தனது பைக் டயரை சரிசெய்து கொண்டு டக்கார் ராலியின் 8வது மாரத்தான் ஸ்டேஜ் பந்தயத்தை ஒரு கை பார்த்துள்ளார்.

 ஆச்சர்யப்படுத்தும் டக்கார் ராலி பைக்குகளின் மிச்செலின் டயர்!

இதனிடையே, 9வது ஸ்டேஜ் பந்தயத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த டோபி பிரைஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுமொத்த பைக் பிரிவில் இரண்டாவது இடத்தில் இருந்த அவர் துரதிருஷ்டவசமாக போட்டியில் இருந்து வெளியேறியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Most Read Articles

English summary
Dakar motorcycles ride on special Michelin tubeless tyres and here are some interesting things about this tyres.
Story first published: Thursday, January 14, 2021, 15:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X