ஹெரான் ஆளில்லா போர் விமானங்களை பரிசாக வழங்கப்போகும் இஸ்ரேல்!

Written By:

பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பது உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் அளித்த வரவேற்பும், உபசரிப்பும் உலக நாடுகளின் புருவத்தை உயர்த்தி இருக்கிறது. அதேநேரத்தில்,, நமது எதிரி நாடுகளுக்கு இந்த விஷயம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

இஸ்ரேல் நாட்டுடன் பல காலமாக ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட புதிய ஹெரான் - டிபி ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்க இசைந்துள்ளது இஸ்ரேல். இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

இது மோடியின் சுற்றுப் பயணத்திற்கு இஸ்ரேல் அளிக்க இருக்கும் மெகா பரிசாகவே பாதுகாப்புத் துறை நிபுணர்களால் கருதப்படுகிறது. இந்த ஆளில்லா போர் விமானங்கள் இந்தியாவின் ராணுவ பலத்தை வெகுவாக உயர்த்தும் வாய்ப்புள்ளது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

ஏற்கனவே இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட ஹெரான் ஆளில்லா விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தி வருகிறது. ஆனால், இவை கண்காணிப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயுதங்களை பொருத்தும் வசதி இல்லை. ஆனால், புதிய ஹெரான் - டிபி ஆளில்லா விமானங்களை போர் விமானத்திற்கு இணையான அம்சங்களை பெற்றிருக்கும்.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

இலக்கை கண்டறிந்து அதனை ஏவுகணை மூலமாக தாக்கி அழிக்கும் திறனை இந்த புதிய ஹெரான் - டிபி ஆளில்லா விமானங்கள் பெற்றிருக்கின்றன. இந்த ஹெப்ரான் - டிபி விமானமானது அதிகபட்சமாக 45,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

எனவே, எதிரிகள் எளிதாக கண்டறிந்து வீழ்த்துவது கடினம். மேலும், 30 மணிநேரம் வரை வானில் பறக்கும் திறன் கொண்டது. முழுவதுமாக தானியங்கி முறையில் இயங்கும். இதனை இயக்குவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் கூட ஆட்கள் தேவைப்படமாட்டார்கள் என்பது இதன் விசேஷம்.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

அண்மையில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் எழுந்தது. அப்போது, ஆளில்லா உளவு விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், இந்த ஹெப்ரான் போர் விமானமாது ஏவுகணைகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

இந்த விமானத்துக்கு பைலட் தேவையில்லை என்பதால், போர் சமயங்களில் உயிரிழப்பு அச்சம் கொள்ள தேவையில்லை. அச்சப்படாமல் செலுத்த முடியும். மேலும், எல்லைப்பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கும் இந்த விமானம் பயன்படும்.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

விரைவில் 10 புதிய ஹெரான் டிபி ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு இஸ்ரேல் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்தான் இப்போது அண்டை நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

இந்த புதிய ஹெப்ரான்- டிபி ஆளில்லா விமானம் மூலமாக இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு வெகுவாக மேம்படும் என்று நம்பப்படுகிறது. இந்த ஹெரான் டிபி ஆளில்லா விமானம் அதிகபட்சமாக 370 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் வாய்ந்தது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

அதிகபட்சமாக 7,400 கிமீ தூரம் வரை பறக்கும் திறன் வாய்ந்தது. இந்த ஆளில்லா விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி கனடா பிடி6-67ஏ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த விமானம் 43 அடி நீளமும், 86 அடி அகலமும் கொண்டது.

ஹெரான் ஆளில்லா போர் விமானத்தை வாங்கும் இந்தியா!

இதுவரை ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பில் ரஷ்யாவுடன் இந்தியா நெருங்கிய நட்பு பாராட்டி வந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் பாதுகாப்புத் துறை சம்பந்தமான வர்த்தகத்தில் இந்தியா நட்பு பாராட்ட துவங்கியிருப்பது பல அண்டை நாடுகளுக்கு கடுகடுப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Things About Heron TP drones.
Please Wait while comments are loading...

Latest Photos