விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

விமான எஞ்சின் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விமான போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதற்கு ஏற்பவும், விமானவியல் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் இக்கால கட்டத்தில் விமான எஞ்சின் தொழில்நுட்பம் வியக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

மிக பிரம்மாண்டமான விமானங்களை எந்த சிக்கலும் இல்லாமல் மேலே எழும்புவதற்கும், மோசமான வானிலைகளை கடந்து எந்த பிரச்னையும் இல்லாமல் எளிதாக தரை இறக்குவதற்கும் இந்த எஞ்சின்கள் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த நிலையில், விமான எஞ்சின்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

ஒரு விமான எஞ்சின் 28 ஃபார்முலா -1 கார்கள் எஞ்சின்கள் வெளிப்படுத்தும் அளவுக்கு திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தவையாக இருக்கின்றன. போயிங் 777 விமானத்தில் பொருத்தப்பட்டும் எஞ்சின் அதிகபட்சமாக 1.15 லட்சம் பவுண்ட் த்ரஸ்ட் சக்தியை அளிக்கும். விமானம் மேல் எழும்புவதற்கும், முன்னோக்கி செல்வதற்கும் இந்த சக்திதான் முக்கியம்.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

போயிங் 777 விமானத்தில் பயன்படுத்தப்படும் ஜிஇ90-115பி என்ற எஞ்சின் 3.25 மீட்டர் விட்டமுடையது. இதுதான் தற்போது உலகின் மிகப்பெரிய விமான எஞ்சின். மிகவும் நம்பகமான விமான எஞ்சினாகவும் குறிப்பிடப்படுகிறது.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

ஒவ்வொரு விமான மாடலின் அளவு, எடைக்கு தக்கவாறு குறிப்பிட்ட திறன் கொண்ட எஞ்சின்களையே பயன்படுத்த முடியும். எஞ்சின் பழுது போன்ற சமயங்களில் வேறு ரகத்திலான மாற்று எஞ்சினை பொருத்தி இயக்க முடியாது.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

விமான எஞ்சின்கள் தினசரி பராமரிப்பு தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் சரியாக சர்வீஸ் செய்யப்பட வேண்டும். இதனை விமான ஒழுங்குமுறை ஆணையம் சரிபார்த்து, தகுதிச் சான்று வழங்கினால் மட்டுமே பறக்கும் அனுமதியை பெற முடியும். விமானம் எவ்வளவு மணிநேரம் பறக்கிறது என்பதை பொறுத்து சர்வீஸ் இடைவெளி கணக்கிடப்படுகிறது.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

ஃப்ளைட் சைக்கிள் என்று ஒரு நடைமுறை வழக்குச் சொல் விமானப் போக்குவரத்து துறையில் பயன்படுத்தப்படுகிறது. ஒருமுறை விமானம் டேக் ஆஃப் செய்து, பயணித்து, தரை இறங்கும் வரையிலான காலத்தை ஒரு ஃப்ளைட் சைக்கிள் என்று குறிப்பிடுகின்றனர்.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

சென்னையிலிருந்து டெல்லிக்கு சென்றுவிட்டு திரும்பவும் சென்னை திரும்பினால், அது 2 'ஃப்ளைட் சைக்கிள்' என்று கணக்கில் கொள்கின்றனர்.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

இந்த ப்ளைட் சைக்கிளை வைத்தே, சர்வீஸ் செய்வதற்கான கால அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. உதாரணத்திற்கு ஏர்பஸ் ஏ330 விமானத்தின் எஞ்சின் 200 முதல் 400 ஃப்ளைட் சைக்கிள் இடையில் சிறிய அளவிலான பராமரிப்புப் பணிகளும், 7,300 ஃப்ளைட் சைக்கிளுக்கு ஒருமுறை முழுமையான சர்வீஸ் பணிகளும் செய்யப்படுகிறது.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

ஒரு எஞ்சினை சர்வீஸ் செய்வதற்காக பிரித்து மீண்டும் சரியாக கோர்த்து ஓட விடுவதற்கு 50 முதல் 60 நாட்கள் பிடிக்கும். அப்போது ரிசர்வில் இருக்கும் மாற்று எஞ்சின் விமானத்தில் பொருத்தப்பட்டு இயக்கப்படும். பெரிய விமான நிறுவனங்கள் சொந்தமாகவே எஞ்சின் பராமரிப்புப் பணிமனையை வைத்திருக்கின்றன.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

நீங்கள் பயணிப்பது போயிங், ஏர்பஸ் போன்ற முன்னணி விமான நிறுவனங்களின் விமானங்களாக இருக்கும். டிக்கெட்டிலேயே அது தெரிந்துவிடும். ஆனால், இந்த விமானங்களில் ஜிஇ, ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தயாரித்து கொடுக்கும் எஞ்சின்தான் பொருத்தப்படுகின்றன.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

ஒரு எஞ்சின் இந்திய மதிப்பில் ரூ.80 கோடி முதல் ரூ.225 கோடி மதிப்புடையது. விமானத்தின் விலையில் கணிசமான பங்கு எஞ்சினுக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 விமான எஞ்சின் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்!

விமானத்துக்கு எஞ்சின் இருதயம் போன்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், நடுவானில் விமானம் பறக்கும்போது எஞ்சின்கள் செயலிழந்தாலும் தொடர்ந்து பறக்கும். கூடுதல் விபரங்களை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

Most Read Articles
English summary
Some Things You Probably Don’t Know About Jet Engines.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X