Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்னோவா போன்று அலுங்கல், குலுங்கல் இல்லாத பயணம்... அசத்தும் 'புஷ் புல்' ராஜ்தானி ரயில்கள்!
இனி ராஜ்தானி ரயில் பயணங்கள் இன்னமும் அதிக சொகுசாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்னோவாவில் செல்வது போன்று அலுங்கல், குலுங்கல் இல்லாத பயண அனுபவத்தையும் வழங்கும் வகையில் ராஜ்தானி ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயண நேரமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைய இருக்கிறது.

ரயில்களின் பயண நேரத்தை குறைத்து மேம்பட்ட பயண அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சிகளில் இந்திய ரயில்வேத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ராஜ்தானி ரயில்களில் புதிய தொழில்நுட்பத்தை ரயில்வேத் துறை அறிமுகப்படுத்தி வருகிறது.

'புஷ் புல்' என்று குறிப்பிடப்படும் முறையில் இரண்டு எஞ்சின்களுடன் ராஜ்தானி விரைவு ரயில்களை இயக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லி - மும்பை வழித்தடத்தில் புஷ் புல் நுட்பத்துடன் ராஜ்தானி ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக முன்புறத்தில் மட்டுமே எஞ்சின் இணைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட மலைப்பகுதி வழித்தடங்களில் மட்டும் பின்புறத்திலும் ரயில் எஞ்சின் இணைக்கப்பட்டு கூடுதல் திறன் வழங்கப்படுகின்றது. அத்துடன், சரக்கு ரயில்களில் பின்புறத்தில் எஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்படுவது வழக்கமான விஷயம்தான்.

ஆனால், தற்போது ராஜ்தானி ரயில்களில் முன்னால், பின்னால் என இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு புஷ் புல் முறைக்கு மாற்றப்படுகிறது. பின்புறத்தில் உள்ள எஞ்சின் ரயில் பெட்டிகளை முன்னோக்கி செலுத்துவதற்கான சக்தியையும் (Push), முன்புறத்தில் இருக்கும் எஞ்சின் வழக்கமாக இழுத்துச் செல்வதற்கான இழுவை திறனையும்(Pull) வழங்கும்.

இந்த இரண்டு ரயில் எஞ்சின்களும் ஒரே கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் Push Pull தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ராஜ்தானி ரயில்களில் பயன்படுத்துகின்றனர். டெல்லி - மும்பை, டெல்லி - கொல்கத்தா உள்ளிட்ட நீண்ட தூர வழித்தடங்களில் புஷ் புல் தொழில்நுட்பத்துடன் கூடிய ராஜ்தானி விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக 12 புஷ் புல் ராஜ்தானி ரயில்கள் தயாராக உள்ளதாக ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது. நாட்டில் இயக்கப்படும் அனைத்து ராஜ்தானி ரயில்களும் இந்த முறைக்கு மாற்றப்பட உள்ளது. எதிர்காலத்தில் சதாப்தி ரயில்களும் இந்த முறைக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த புஷ் புல் முறையில் மிக முக்கிய அம்சமாக, ரயில்கள் நிறுத்தும்போதும், கிளம்பும்போதும் ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி அமைப்பில் உள்ள சிறு இடைவெளி காரணமாகவும், அல்லது பிரேக் பிடிக்கும்போதும் அதிர்வுகள் அல்லது குலுங்கல் இருக்கும்.

நடுநிசியில் ரயிலில் தூங்கும் பயணிகள் இந்த அதிர்வால் திடுக்கிட்டு எழுவதற்கும், உருள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால், புஷ் புல் முறையில் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்களில் அதிர்வுகள், குலுங்கல் இல்லாத நிலை ஏற்படும். இதனால், சொகுசான பயண அனுபவத்தை பெற முடியும்.

அடுத்து, இரண்டு எஞ்சின்கள் மூலமாக இயக்கப்படுவதால், ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்போது ஏற்படும் தாமதம் மற்றும் சில ரயில் நிலையங்களில் எஞ்சின் மாற்றும்போது ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படும். இதனால், இந்த புஷ் புல் எஞ்சின்கள் மூலமாக பயண நேரம் வெகுவாக குறையும். மணிக்கு 160 கிமீ வேகம் வரை எளிதாக இயக்குவதற்கான வாய்ப்பையும் இந்த புஷ் புல் நுட்பம் வழங்குகிறது.

மும்பை - டெல்லி இடையிலான வழித்தடத்தில் மட்டும் பயண நேரம் ஒன்றரை மணிநேரம் குறையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜ்தானி ரயில்களில் ஜெனரேட்டர் இணைப்பதற்கான தேவையும் தவிர்க்கப்படும். இதனால், எரிபொருள் சிக்கனம் மற்றும் இயக்குதல் செலவும் வெகுவாக குறையும் என்று ரயில்வேத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில விடுங்க இந்திய ரயில்வேத்துறை 'தங்க ரதம்' என்ற பெயரில் ஓர் ரயில் சேவையை இயக்கி வருகின்றது. இந்த ரயிலில் சரக்கு, மசாஜ்னு சொர்க்கத்தை மிஞ்சக்கூடிய சகல வசதிகளும் வழங்கப்படுகின்றதாம். இதுகுறித்த இன்னும் சுவாரஷ்யங்களைத் தொடர்ந்து கீழே பார்க்கலாம்.

கர்நாடக மாநில சுற்றுலா துறை சார்பில், தங்க ரதம் சொகுசு சுற்றுலா ரயில் சேவை, கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரயில் மூலம் ஆடம்பர சுற்றுலாக்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் மத்தியில், இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் நாளடைவில் வரவேற்பு குறைந்து, தங்க ரதம் சொகுசு சுற்றுலா ரயில் நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது.

இதன் காரணமாக தங்க ரதம் சொகுசு சுற்றுலா ரயில் சேவை, கடந்த 2017ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால் தங்க ரதம் சொகுசு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? என, ஆடம்பர சுற்றுலா பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு கூடிய விரைவில் நிறைவேற போகிறது. ஆம், நீண்ட இடைவெளிக்கு பின் தங்க ரதம் சுற்றுலா ரயில், வரும் ஜனவரி மாதம் மீண்டும் இயக்கப்படவுள்ளது.

ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் (IRCTC - Indian Railway Catering And Tourism Corporation), தங்க ரதம் சொகுசு ரயில் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு ஆடம்பர சொகுசு வசதிகள் நிரம்பிய தங்க ரதம் ரயிலை, இன்னும் பல்வேறு வசதிகளுடன் ஐஆர்சிடிசி தற்போது மேம்படுத்தியுள்ளது.

இதன்படி தங்க ரதம் சொகுசு ரயிலில், தங்கும் அறைகளும், குளியல் அறைகளும் நவீனமாக்கப்பட்டுள்ளன. தங்கும் அறைகளை பொறுத்த வரையில், பல்வேறு வசதிகளுடன் தற்போது அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஸ்மார்ட் டிவி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்.

அத்துடன் தங்க ரதம் சொகுசு ரயிலில் 'ஸ்பா' வசதியும் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள பயணிகள் இங்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இதுதவிர மதுபான கூட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்க ரதம் சொகுசு ரயிலில், அதிநவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடமும் உள்ளது. அத்துடன் 2 உணவகங்களையும் இந்த சொகுசு ரயில் பெற்றுள்ளது.

ருசி மற்றும் நளபாகம் என்ற அந்த உணவகங்களில், இயற்கை காட்சிகளை ரசித்தபடியே உணவு அருந்தும் அனுபவத்தை பயணிகள் பெற முடியும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தங்க ரதம் சொகுசு ரயில், நீண்ட இடைவெளிக்கு பின் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து, பல்வேறு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு மீண்டும் இயக்கப்படவுள்ளது.

இதன்படி 'ப்ரைடு ஆஃப் கர்நாடகா' என்ற பெயரில், மைசூரில் இருந்து புறப்படும் ரயில், பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி மற்றும் கோவா போன்ற இடங்களுக்கு செல்கிறது. இது 7 நாள் பயணம் ஆகும். அத்துடன் 'ஜூவல் ஆஃப் சவுத்' என்ற பெயரில், மைசூரில் இருந்து புறப்படும் ரயில், ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர் மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு பயணிக்கிறது. இதுவும் 7 நாள் பயணமாகும்.

அத்துடன் 'கிளிம்ப்சஸ் ஆஃப் கர்நாடகா' என்ற பெயரில், மைசூரில் இருந்து புறப்படும் ரயில், பந்திப்பூர் தேசிய பூங்கா மற்றும் ஹம்பி உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது. இது 4 நாட்களை மட்டுமே உள்ளடக்கிய பயணம் ஆகும். கட்டணம் போன்ற கூடுதல் விபரங்களை அறிந்து கொள்வதற்கு, சம்பந்தப்பட்ட அலுவலகத்தை பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.