மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

Written By:

உலகில் எண்ணற்ற கார் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அனைவரின் கனவு பிராண்டாக இருப்பது ரோல்ஸ்ராய்ஸ். கார்களின் பிக்பாஸ் என்ற பெருமைக்குரிய ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கு இந்தளவுக்கு மதிப்பும், மரியாதையும் இருப்பதற்கான சில சுவாரஸ்ய காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஒரு கார் வாங்க வேண்டும் என்று விரும்புகிறோம். விரும்பும் காரை தேர்வு செய்து வைத்துக் கொண்டு, ஷோரூமில் சென்று முன்பதிவு செய்து விடுகிறோம். கார் மாடலை பொறுத்து, சில நாட்களிலோ அல்லது சில வாரங்களில் கையில் டெலிவிரி பெற்று விடுகிறோம்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அப்படி இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும், எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறு ஒவ்வொரு காரையும் ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து கொடுக்கிறது. எனவேதான், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பிற கார்களிடத்தில் இருந்து அதிகம் வேறுபடுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'Bespoke' கார் மாடல்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

பொதுவாக, முன்பதிவு செய்ததிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை டெலிவிரி பெறுவதற்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பிடிக்கும். வாடிக்கையாளர் கொடுக்கும் கஸ்டமைஸ் தேர்வுகளை பொறுத்து இந்த காத்திருப்பு காலம் வேறுபடுகிறது.

உதாரணத்திற்கு, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை இந்தியாவில் டெலிவிரி பெறுவதற்கு 8 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை காத்திருப்பு காலம் தேவைப்படும்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவோருக்கு வண்ணத்தை தேர்வு செய்வதற்கே சில தினங்கள் மண்டை காயும். ஆம். 44,000 வண்ண தேர்வுகளில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் கிடைக்கின்றன. நீங்கள் மனதில் நினைக்கும் வண்ணத்தை தேர்வு செய்து உங்கள் காரை டெலிவிரி பெற முடியும்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

காரின் வண்ணம் மட்டுமல்ல, காரின் உட்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள், இருக்கைகள், மர வேலைப்பாடுகள், ஆக்சஸெரீகள் என அனைத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரிலேயே செய்து கொடுக்கப்படுகின்றன.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

சில பெரும் பணக்காரர்கள், தங்கம், வைரம், வைடூரியம் போன்ற உயர்வகை ஆபரண பொருட்களை பதித்தும் கார்களை ஆர்டர் செய்கின்றனர். இந்த கார்களை டெலிவிரி கொடுப்பதற்கு கூடுதலாக சில மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்துமே மனித ஆற்றலின் மூலமாக உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாகமும் பணியாளர்கள் மூலமாகவே பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. தயாரிப்பில் எந்திரங்களின் பயன்பாடு மிக குறைவு. இங்கிலாந்தில் உள்ள குட்வுட் என்ற இடத்தில்தான் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

மேலும், ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கான ஆக்சஸெரீகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படுகின்றன. வாடிக்கையாளர் பெயர் பொறிக்கப்பட்ட இருக்கைகள், இன்டீரியர், திருமண வைபவங்களில் பரிசு கொடுக்கப்படும் கார்களில் மணமக்களின் பெயர்கள் பொறித்து தருவது என உலகின் மிகவும் தனித்துவமான காரை பெறுவதற்கான வாய்ப்பை ரோல்ஸ்ராய்ஸ் வழங்குகிறது.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இவ்வளவு சிரத்தை எடுத்து காரை தயாரிப்பதற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் பின்புலத்தையும் ஆராய ரோல்ஸ்ராய்ஸ் தவறுவதில்லை.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்குவோர் அதனை வாங்குவதற்கும், பராமரிப்பதற்குமான பண பலம் இருப்பதை முதலில் பார்ப்பது இயல்புதான்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

இது கார்களை வாங்கும் எல்லா வாடிக்கையாளர்களுக்குமான விஷயம்தான். அதைத்தாண்டி, ஒரு விஷயத்தை ரோல்ஸ்ராய்ஸ் கடைபிடிக்கிறது. எப்படி, தனது மகள் நல்ல இடத்தில் வாழ வேண்டும் என்று பெண்ணை பெற்றோர் விரும்புவதுடன், மாப்பிள்ளை பற்றி தீர விசாரித்து முடிவு எடுக்கிறார்களோ? அது போன்ற ஒரு விஷயத்தை கடைபிடிக்கிறது.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

ஆம். ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவதற்கு பணம் இருந்தால் போதும் என்பது ஒரு புறம் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு குற்றப் பின்னணி இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே ரோல்ஸ்ராய்ஸ் முடிவு செய்கிறது.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

சில வாடிக்கையாளர்களின் முந்தைய இரண்டு தலைமுறைகள் வரை குற்றப் பின்னணி இருக்கிறதா என்பதை ஆராயவும் அந்த நிறுவனம் தயங்குவதில்லை. தனது பிராண்டு மதிப்பை பாதுகாப்பதற்கான முயற்சியாக இதனை ரோல்ஸ்ராய்ஸ் கடைபிடிக்கிறது.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

குற்றப் பின்னணி உள்ள சிலரும் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், சந்தேகம் எழுந்தால் மட்டுமே இந்த நடைமுறை சற்று ஆழமாக பின்பற்றப்படும்.

கார்களின் 'பிக்பாக்ஸ்' ரோல்ஸ்ராய்ஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

மற்றபடி, பணமிருந்தால் ரோல்ஸ்ராய்ஸ் வாங்க முடியும் என்பதில் எந்த இடைஞ்சலும் இல்லை என்பதை கூறிக் கொண்டு, மற்றொரு சிறப்பு செய்தியில் சந்திப்போம்.

English summary
Interesting Things About RollsRoyce Cars.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark