சுகோய் எஸ்யூ-24 மற்றும் எஃப்-16 போர் விமானங்களின் சிறப்பம்சங்கள்

By Saravana

ரஷ்யாவின் சுகோய் எஸ்யூ-24 போர் விமானத்தை நேற்று துருக்கியின் விமானப்படையின் எஃப்-16 ரக போர் விமானங்கள் அதிரடியாக சுட்டு வீழ்த்தின. அந்த விமானம் நடுவானிலேயே தீப்பிடித்து மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த விமானியும், ஆயுத தாக்குதல் அமைப்பை கட்டுப்படுத்தும் பொறியாளரும் பாரசூட் மூலம் குதித்துவிட்டனர்.

பிரான்ஸ் ரஃபேலுக்கு நம்ம தேஜஸ் போர் விமானம் பெட்டர்... ஏன்?

இந்த சம்பவம், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், மூன்றாவது உலகப்போர் மூள்வதற்கான ஆரம்ப நாளாக நேற்றைய தினத்தை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், ரஷ்யாவின் புகழ்பெற்ற போர் விமானங்களில் ஒன்றான சுகோய் எஸ்யூ-24 போர் விமானத்தின் சில பலவீனத்தை அதனை எளிதாக சுட்டு வீழ்த்தியுள்ளனர் துருக்கி விமானப் படையினர். அந்த பலவீனம் என்ன, சுகோய்-24 போர் விமானத்தின் பலம் என்னென்ன என்பதை ஸ்லைடரில் காணலாம்.

நவீன தயாரிப்பு

நவீன தயாரிப்பு

ரஷ்யா உடைவதற்கு முன் சோவியத் யூனியனாக இருந்தபோது தயாரிக்கப்பட்ட நவீன வகை போர் விமானம்தான் சுகோய் எஸ்யூ-24. ரஷ்யாவின் ஆளுமையயும், பாதுகாப்பையும் கட்டிக் காப்பதில் இந்த சுகோய் குடும்ப வரிசையிலான விமானங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ரஷ்யாவின் ஆயுத வியாபாரத்திற்கும், வருவாய்க்கும் அதிக பங்களிப்பை கொடுத்து வருகின்றன சுகோய் ரக போர் விமானங்கள்.

Picture credit: Alexander Mishin/Wiki Commons

சுகோய் குடும்ப வரிசை

சுகோய் குடும்ப வரிசை

கடந்த 1967ல் முதல் சுகோய் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. 1975ல் முதல் தலைமுறை சுகோய்- எஸ்யூ24 போர் விமானங்கள், சோவியத் யூனியன் விமானப் படையில் சேர்க்கப்பட்டன. தற்போது ரஷ்ய விமானப் படையிலும், ரஷ்யாவிலிருந்து பிரிந்து அந்நாட்டுக்கு எதிரியாகிவிட்ட துருக்கி விமானப்படையிலும் பயன்பாட்டில் இருக்கின்றன.

Picture credit: Alexander Mishin/Wiki Commons

சுகோய் எஸ்யூ-24

சுகோய் எஸ்யூ-24

1961ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுகோய்- எஸ்யூ7பி என்ற விமானம் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் பயன்படுத்த முடியாது. எனவே, அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக எஸ்-28 மற்றும் எஸ்32 ஆகிய மாடல்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் சிறப்பான செயல்திறன் கொண்ட மாடலாக சுகோய்- எஸ்யூ24 தயாரிக்கப்பட்டது.

பலம் என்ன?

பலம் என்ன?

சுகோய் எஸ்யூ-24 விமானத்தின் முக்கிய சிறப்பம்சம், இது சூப்பர்சானிக் விமானம். அதிவேகத்தில் பறக்கும் திறன் கொண்டது மட்டுமில்லை இதன் சிறப்பு. மிக குறைவான வேகத்தில், மிக தாழ்வாக பறந்து சென்று இலக்குகளை மிக துல்லியமாக குறிவைத்து அழிக்க முடியும். அதிகபட்சமாக 3,000 கிமீ தூரம் பறந்து சென்று வரும். இது குண்டு வீச்சு ரக விமானம். 1967 முதல் 1993 வரையிலான காலக்கட்டத்தில் 1,400 சுகோய் எஸ்யூ-24 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

Picture credit: Toshi Aoki/Wiki Commons

காக்பிட்

காக்பிட்

இந்த விமானத்தின் காக்பிட் எனப்படும் விமானி அறை பகுதியில் விமானியும், குண்டு வீச்சை கட்டுப்படுத்தும் பொறியாளரும் பக்கம் பக்கத்தில் அமரும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. பல விமானங்களில் ஒருவர் பின் ஒருவராக அமரக்கூடிய விதத்தில் இருக்கை அமைப்பு இருக்கும் என்பதை பார்த்திருக்க வாய்ப்புண்டு.

Picture credit: Dmitriy Pichugin/Wiki Commons

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

இதனை நேச நாட்டுப் படையினர் ஃபென்சர் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கின்றனர். இந்த விமானம் தாழ்வாக பறக்கும் திறன் கொண்டதோடு, அதிகபட்சமாக 57,400 அடி வரையிலான உயரத்தில் பறக்கும். ஆனால், பெரும்பாலும் அதிகபட்சமாக 36,100 அடி உயரத்தில் செலுத்துவது வழக்கம்.

Picture credit: Dmitriy Pichugin/Wiki Commons

வேகம்

வேகம்

இது இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட போர் விமானம். மணிக்கு 2,320 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. எனவே, ஏவுகணை தாக்குதல்களில் கூட எளிதாக தப்பிக்க முடியும். ஆனால், துருக்கியும் இந்த விமானத்தை பயன்படுத்துவதால், இந்த விமானத்தின் பலவீனம் என்ன என்பதை துல்லியமாக கணித்து சுட்டு வீழ்த்தியிருக்கிறது.

Picture credit: Alex Beltyukov/Wiki Commons

 பலவீனம்

பலவீனம்

தரைத் தாக்குதல்களில் சிறப்பான இந்த விமானத்தில் வானிலிருந்து வரும் ஏவுகணை தாக்குதல்களை எளிதாக முறியடிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் இல்லை என்பது ரஷ்யாவிற்கும், துருக்கிக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். கழுகுகளிடம் சிக்கிய புறாபோல ஆகிவிட்டது இந்த சுகோய்-24 விமானத்தின் விலை. இந்த தாக்குதலை செவ்வனே நிறைவேற்ற துருக்கி விமானப்படை பயன்படுத்தியது அமெரிக்க தயாரிப்பான எஃப்-16எஸ் என்ற போர் விமானம். சிரிய எல்லைப்பகுதியின் வான் கண்காணிப்பில் இந்த விமானங்களையே துருக்கி பயன்படுத்தி வருகிறது.

Picture credit: Alex Beltyukov/Wiki Commons

இது அமெரிக்க தயாரிப்பு

இது அமெரிக்க தயாரிப்பு

அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் [இப்போது லாக்ஹீட் மார்ட்டின்] நிறுவனத்தின் தயாரிப்புதான் எஃப்-16 ஃபால்கன் விமானம். இது பன்முக பயன்பாட்டு போர் விமானம். முதலில் அமெரிக்க விமானப்படைக்காக தயாரிக்கப்பட்டது. 1974ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அமெரிக்க போர் விமானம். பின்னர், பல்வேறு நாடுகளுக்கும் இந்த விமானம் விற்பனை செய்யப்பட்டது. பல்வேறு மேம்படுத்துதல் பணிகளுடன் தற்போதும் உற்பத்தியில் இருக்கிறது.

Picture credit: SAC Helen Farrer RAF Mobile News Team/Wiki Commons

துருக்கி விமானப்படையில்...

துருக்கி விமானப்படையில்...

எதிரி விமானங்களை வழிமறித்து அல்லது துரத்திச் சென்று தாக்குதல் நடத்துவது, எதிரி நிலைகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்துவது, வான் பரப்பு கண்காணிப்பு என பல்வேறு விதங்களிலும் பயன்படுகிறது. கடந்த 1987ல் முதல் எஃப்-16 எஸ் விமானத்தை துருக்கி விமானப்படை தனது படையில் இணைத்தது.

Picture credit: Allied Joint Force Command Brunssum/Wiki Commons

உற்பத்தி

உற்பத்தி

அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் உரிமம் பெற்று 232 எஃப்-16 ஃபால்கன் போர் விமானங்களை தங்களது நாட்டிலேயே அசெம்பிள் செய்தது துருக்கி. துருக்கி ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் இந்த பொறுப்பை ஏற்றிருந்தது.

Photo Credit: Wikipedia

எஃப்-16எஸ் போர் விமானம்

எஃப்-16எஸ் போர் விமானம்

இதுவும் சூப்பர்சானிக் வகையை சேர்ந்த ஒலியைவிட அதிவேகத்தில் செல்லும் போர் விமானம். ஆனால், பன்முக பயன்பாடு கொண்ட போர் விமானம். டெல்டா விங் எனப்படும் இறக்கை அமைப்பை கொண்டது. தற்போது ரஷ்யாவிடம் உள்ள சுகோய் எஸ்யூ-35 போர் விமானத்திற்கு இணையாக ஒப்பிடப்படும் மாடல். இதுவரை 4450க்கும் அதிகமான எஃப்-16 போர் விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன.

Picture credit: Jerry Gunner/Wiki Commons

 வேகம்

வேகம்

மணிக்கு 2,414 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. 6,000 முதல் 8,000 மணிநேரம் பறப்பதற்கான ஆயுட் காலம் கொண்ட போர் விமானம். தரையிலிருந்து 15 கிமீ உயரத்தில் செலுத்த முடியும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 3,900 கிமீ தூரம் வரை பறக்கும்.

Picture credit: SAC Helen Farrer RAF Mobile News Team/Wiki Commons

 ஏவுகணைகள்

ஏவுகணைகள்

இந்த விமானத்தில் 500 முறை சுடுவதற்கான 20மிமீ விட்டம் கொண்ட துப்பாக்கி பொருத்தப்பட்டு இருக்கிறது. வானிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் 6 ஏவுகணைகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

Picture credit: Allied Joint Force Command Brunssum/Wiki Commons

 அச்சாரம்

அச்சாரம்

1950களுக்கு பின்னர் ரஷ்ய விமானத்தை நேச நாடுகளுக்கான ஆதரவான நாடு ஒன்று சுட்டு வீழ்த்தியிருப்பது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது மூன்றாம் உலகப்போருக்கு துருக்கி அச்சாரம் போட்டுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சுகோய்- எஸ்யூ24 மற்றும் எஃப்-16எஸ் போர் விமானங்களின் பலம், பலவீனங்கள்

01. இந்திய வான்பகுதியை கட்டிக்காக்கும் போர் விமானங்கள்

02. உலகில் அதிகம் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள்

03. உலகின் மிகப்பெரிய விமானப்படைகள்

Most Read Articles
மேலும்... #ராணுவம் #military
English summary
Interesting Things About Sukhoi su-24 and F-16S Fighter jets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X