இந்திய வாகன உலகின் ஜாம்பவான்... டாடா மோட்டார்ஸ் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

நம் நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு குழுமமாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. பயணிகள் வாகன சந்தையில் சில தடுமாற்றங்களை சந்தித்தாலும், வர்த்தக வாகன மார்க்கெட்டில் மிக வலுவான மார்க்கெட்டை பெற்றிருக்கிறது. மேலும், சர்வதேச அளவிலும் வாகன துறையில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தி இருக்கிறது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களை கைவசம் வைத்திருப்பதோடு, வெளிநாடுகளை சேர்ந்த பல வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து உலக தரத்திற்கு இணையான தயாரிப்புகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. வாகன உலகின் மிகப் பெரிய குழுமங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் குறித்த தகவல்களை காணலாம்.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன துறையில் கால் பதித்து 70 ஆண்டுகள் ஆகிறது. 1945ம் ஆண்டு டாடா எஞ்சினியரிங் அண்ட் லோகோமோட்டிவ் கம்பெனி[டெல்கோ] என்ற பெயரில் துவங்கப்பட்டது. முதலில் ரயில் எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டது. பின்னர் வாகன தயாரிப்பு துறையில் நுழைந்த பின்னர் டாடா மோட்டார்ஸ் என்ற பெயர் மாற்றம் கண்டது.

Recommended Video - Watch Now!
Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

டாடா டெரியர் குழுமத்தின் அங்கமாக டாடா மோட்டார்ஸ் செயல்படுகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார், வேன், பஸ், டிரக்குகள், கட்டுமானத் துறைக்கான வாகனங்கள், ராணுவ வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் பென்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து டிரக் தயாரிப்பில் கால் பதித்தது டாடா மோட்டார்ஸ். எனவே, முதல்முறையாக வெளிவந்த டாடா டிரக்குகளில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவுடன் வெளிவந்தன.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

1955ம் ஆண்டு ஜெனிவா நகரிலிருந்து மும்பைக்கு மூன்று டாடா டிரக்குகள் பயணித்தன. வழியில் எந்தவொரு ரிப்பேரும் இல்லாமல் அவை மும்பை வந்தடைந்து, வியக்க வைத்தது. டிரக்குகளை ஓட்டி வந்த ஓட்டுனர்களை ஜெஆர்டி டாடா பாராட்டியபோது எடுத்த படத்தை காண்கிறீர்கள்.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளுக்கு டிரக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். தற்போது 45 நாடுகளுக்கு டாடா மோட்டார்ஸ் டிரக்குகளை ஏற்றுமதி செய்து வருகிறது. 1961ம் ஆண்டு முதலாவதாக இலங்கைக்கு டிரக் ஏற்றுமதியை டாடா மோட்டார்ஸ் துவங்கியது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

1969ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிரக்குகளில் மெர்சிடிஸ் பென்ஸ் லோகோவுக்கு பதிலாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் T என்ற லோகோவுடன் வெளிவந்தன.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

1986ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டாடா 407 மினி டிரக் வர்த்தக வாகன சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐஷர்- மிட்சுபிஷி, டிசிஎம் டொயோட்டா, ஸ்வராஜ் மஸ்தா மற்றும் ஆல்வின் நிஸான் போன்ற கூட்டணிகள் தந்த கடும் நெருக்கடிக்கு மத்தியில் டாடா 407 பெரும் வரவேற்பை பெற்றது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் மல்டி யுட்டிலிட்டி ரக கார் டாடா சுமோ. மார்க்கெட்டில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த டாடா சுமோவுக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுமந்த் மூல்ககோர் நினைவாக அவரின் பெயர் சுருக்கமாக சுமோ என்று பெயர் சூட்டப்பட்டது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

ராணுவ வாகன தயாரிப்பிலும் டாடா மோட்டார்ஸ் சிறந்து விளங்குகிறது. ராணுவத்தின் தேவையையும், சாலை நிலைகளையும் நன்கு கணித்து சிறந்த கவச வாகனங்களையும், தளவாட போக்குவரத்துக்கான வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் நம் நாட்டு ராணுவத்துக்கு சப்ளை செய்து வருகிறது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

முதல்முறையாக முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கார் டாடா இண்டிகா. இன்று பெருநகரங்களின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்வதில் டாடா இண்டிகா முக்கிய பங்கு வகிக்கிறது.

டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தளவு வளர்ச்சியை பெற்றதில், அதன் முன்னாள் தலைவராக இருந்த ரத்தன் டாடாவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், நடுத்தர வர்க்கத்தினரின் கார் கனவை நனவாக்க, உலகின் மிக குறைவான விலை காராக டாடா நானோ காரை உருவாக்கி வெளியிட்டதிலும் ரத்தன் டாடாவுக்கு முக்கிய பங்குண்டு.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று, தென்கொரியாவை சேர்ந்த தேவூ நிறுவனமும் டாடா மோட்டார்ஸ் கைவசம் உள்ளது. அடுத்து, பஸ் தயாரிப்புக்காக மார்க்கோபோலோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கிறது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

கட்டுமானத் துறை பயன்பாட்டு வாகன தயாரிப்புக்காக ஜப்பானை சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனத்துடனும், கார் உதிரிபாக தயாரிப்புக்காக ஃபியட் க்றைஸ்லர் குழுமத்துடன் டாடா மோட்டார்ஸ் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறது.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஜாம்ஷெட்பூர், பன்த்நகர், லக்ணோ, சனந்த், தார்வார்ட் மற்றும் புனே ஆகிய இடங்களில் வாகன தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இதுதவிர, அர்ஜெண்டினா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ஆலைகள் உள்ளன.

 டாடா மோட்டார்ஸ் குறித்த 10 சுவாரஸ்யத் தகவல்கள்!

வால்வோ, ஸ்கானியா மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உலகத் தரத்திலான பிரைமா பிராண்டில் டிரக்குகளை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. இந்த டிரக்குகள் சொகுசு அம்சங்களிலும், கேபின் வசதிகளிலும் சிறப்பானவையாக இருந்து வருகின்றன. இந்த டிரக்குகளை வைத்து டாடா டி1 பிரைமா டிரக் ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

English summary
Interesting Things You Didn’t Know About Tata Motors.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark