கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் எனவும் அதனால் அவர்கள் ஜெயிலுக்கு போக அதிக வாய்ப்புள்ளதாகவும் இதனால் இளைஞர்கள் யாரும் இந்த சேலஞ்சை

By Balasubramanian

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் எனவும் அதனால் அவர்கள் ஜெயிலுக்கு போக அதிக வாய்ப்புள்ளதாகவும் இதனால் இளைஞர்கள் யாரும் இந்த சேலஞ்சை முயற்சிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ளூவேல் சேலஞ்ச் என்ற புதிய வீடியோகேம் வந்து அதை விளையாடுபவர்களின் உயிரை பறித்து வந்தது. இந்நிலையில் மக்கள் மத்தியில் புதிய விதமான விபரீத விளையாட்டு ஒன்று வருகிறது அது தான் கீகீ சேலஞ்ச்.

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

இதை பலர் பல விதமாக அழைக்கிறார்கள் சிலர் கீகீ சேலஞ்ச், சிலர் இன் மை பீலிங்ஸ், சில் ஷிகி சேலஞ்ச் என்று அழைக்கிறார்கள். இது என்ற வென்றால் மெதுவாக செல்லும் காரின் இருந்து இறங்கி கார் சென்று கொண்டிருக்கும் போதே காருடன் சென்று கொண்டே இன் மை பீலிங்ஸ் என் பாடலுக்கு டான்ஸ் ஆடி விட்டு மீண்டும் காருக்கும் ஏறுவதே இந்த சேலஞ்ச்

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்த சேலஞ்ச் பரவி வருகிறுது. முக்கியமாக இந்தியாவில் சில பிரபலங்கள் மத்தியிலும் இந்த சேலஞ்ச் பரவி வருகிறது. இன்று இனணயதளங்களில் இந்த சேலஞ்ச் செய்த வீடியோவை அப்லோடு செய்து வருகின்றனர். முக்கியமாக சில பிரபலங்களும் இதை செய்ய துவங்கியதால் மக்கள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது.

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

இந்த கீகீ சேலஞ்ச் செய்பவர்கள் பெரும் ஆபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. அவர்கள் கார் சென்று கொண்டிருக்கும் போதே இறங்கி ஏறுவதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இதனால் அவர்கள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

இந்த சேலஞ்சில் உள்ள ஆபத்தை உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு தடை விதித்துள்ளன. எகிப்து, ஜெர்மனி உள்ளிட்டநாடுகளில் இந்த சேலஞ்சில் ஈடுபடுபவர்களுக்கு ஜெயில் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த சேலஞ்ச் பரவ துவங்கிய உடனேயே போலீசார் அதில் உள்ள ஆபத்தை உணர்ந்திருந்தனர்.

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

இதையடுத்து மும்பை, பெங்களூரு, ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள போலீசார் பொதுமக்களுக்கு இவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என எச்சரித்தனர். ஆனாலும் தொடர்ந்து இது நடந்து கொண்டு தான் வருகிறது. ஏன் தமிழகத்தில் கூட சில இளைஞர்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர்

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

இந்நிலையில் ஐதராபாத் போலீசார் கீகீ சேலஞ்சில் ஈடுபடுபவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் நடந்து கொண்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும். அதனால் அவர் ஜெயிலுக்கு செல்லவும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 கீகீ சேலஞ்சில் ஈடுபட்டால் ஜெயில்தான் ; போலீசார் எச்சரிக்கை

மேலும் அவர்கள் இளைஞர்களுக்கு உங்கள் வாழ்க்கை மேம்படுத்த தேவையான சேலஞ்சை எடுத்துக்கொள்ளுங்கள். இது போன்ற செயல்களால் உங்கள் உயிருக்கு தான் ஆபத்து எனவும் அறிவுறத்தியுள்ளனர். இதனால் இளைஞர்களே இது போன்ற சேலஞ்சில் இனி ஈடுபடாதீர்கள்

Most Read Articles
English summary
Now JAIL for people attempting Kiki challenge outside moving cars. Read in Tamil
Story first published: Wednesday, August 1, 2018, 19:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X