உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில் இதுதான்!

உலகின் மிகவும் ஆடம்பரமான சொகுசு ரயில் ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிக மிக சொகுசான ரயில் ஒன்றை ஜப்பான் ரயில்வே துறை இயக்கி வருகிறது. சகல வசதிகளுடன் கவரும் இந்த சொகுசு ரயில் குறித்த தகவல்கள், படங்களை தொடர்ந்து காணலாம்.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் இந்த புதிய சொகுசு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சொகுசு ரயிலின் உட்புறமும், வெளிப்புறமும் மிகவும் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு சொகுசு பஸ்கள் போல முகப்பு தோற்றம் காட்சியளிக்கிறது.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

அதிக அளவில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டு நகரும் கண்ணாடி மாளிகை போல் காட்சியளிக்கிறது. வெளிப்புறத்தை தெளிவாக பார்க்கும் வகையில், பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

ஷிகி- ஷிமா என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சொகுசு ரயிலில் 10 சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. 17 விருந்தினர்கள் அறைகள் இருக்கின்றன. இருவர் மட்டுமே செல்வதற்கான தனி அறைகளும் உண்டு.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

இந்த சொகுசு ரயிலில் உயர்வகை படுக்கையறை, குளியலறை உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. பயணிகள் பட்ஜெட்டை பொறுத்து ஓர் இரவு முதல் மூன்று இரவு அல்லது 4 நாட்கள் வரையிலான பயணத் திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

பியானோ வாசிப்பதற்கான இடவசதி, சாப்பாட்டு கூடம் உள்ளிட்டவையும் தனித்தனியாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. பயணத்தின்போது ஓய்வுக்கும், பொழுதுபோக்கிற்கும் பஞ்சமில்லாத வகையில் வடிவமைத்துள்ளனர்.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

ஜப்பானின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் இதர உயர்தர உணவு வகைகள் இந்த ரயிலில் பரிமாறப்படும். இந்த ரயிலில் பயணிப்பதற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனராம்.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

டோக்கியோ- ஹோக்கிடோ ஆகிய நகரங்களுக்கு இடையில் இயக்கப்படுகிறது. ஈசிஆர் ரோடு போல கடற்கரையோரமாக இந்த ரயில் பயணிக்கும். இது சுற்றுலா ரயிலாக இயக்கப்படுகிறது.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

இந்த ரயிலின் உயர் வகுப்பு அறையில் பயணிப்பதற்கு 4 நாட்களுக்கு ரூ.6.40 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பதற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1.83 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் காஸ்ட்லியான சொகுசு ரயில்: ஜப்பானில் அறிமுகம்!

இதனை நகரும் நட்சத்திர ஓட்டலாக வர்ணிக்கின்றனர். இந்த ரயிலின் ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து நேர்த்தியாக அமைத்துள்ளனர். இந்த ரயிலை கென் கியோயுகி ஒகுயாமா என்ற பிரபல டிசைனர் வடிவைத்துள்ளார்.

Photo Credit: Nikkei And JR East

Most Read Articles
English summary
Japan's ultra-luxurious train hits the tracks.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X