மணிக்கு 500கிமீ வேகத்தில் பறந்த ஜப்பானின் மாக்லேவ் ரயில்!

ஜப்பானில், சோதனை ஓட்டத்தின்போது மாக்லேவ் ரயில் மணிக்கு 500கிமீ வேகத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த ரயிலில் பயணிகளும் சென்றதால், உலகின் முதல் அதிவேக பயணிகள் ரயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

ஜப்பானிலுள்ள ஃப்யூபியூகி மற்றும் உனோஹரா நகரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக ரயில் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை ஓட்ட ரயிலில் பயணிகளை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுமதிக்கப்பட்டனர்.


மாக்லேவ் ரயில்

மாக்லேவ் ரயில்

தண்டவாளத்துக்கு மேலே சக்கரங்கள் இல்லாமல் காந்தவிசை மூலம் மிதந்து செல்லும் தொழில்நுட்பம் கொண்டவை மாக்லேவ் ரயில்கள். ஜப்பானின் பொது போக்குவரத்தில் மாக்லேவ் ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிர்வுகள் குறைவான மிக சொகுசான பயணத்தை வழங்கும் இந்த மாக்லேவ் ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

உனோஹரா மற்றும் ஃபியூபியூகி இடையில் 42.8 கிமீ தூரத்துக்கு அதிவேக மாக்லேவ் ரயில் பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் பாதையில் சமீபத்தில் 8 நாட்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

குலுக்கலில் தேர்வு

குலுக்கலில் தேர்வு

சோதனை ஓட்ட மாக்லேவ் ரயில் பயணிக்க 3 லட்சம் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். அதில், 2,400 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுமதிக்கப்பட்டனர்.

திரை

திரை

மாக்லேவ் ரயில் 500கிமீ வேகத்தை தொடுவதை பயணிகள் பார்க்கும் வகையில், அனைத்துப் பெட்டிகளிலும் டிவி திரை வைக்கப்பட்டிருந்தது. ரயில் 500கிமீ வேகத்தை தொடும்போது பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பயண நேரம்

பயண நேரம்

2027ம் ஆண்டு டோக்கியோவின் சினகவா ரயில் நிலையத்திற்கும், நகோயா ரயில் நிலையத்திற்கும் இடையிலான பாதை பணிகள் நிறைவுபெறும். அதன்பின் இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரம் பாதியாக குறையும்.

புல்லட் ரயிலை விஞ்சிய மாக்லேவ்

புல்லட் ரயிலை விஞ்சிய மாக்லேவ்

தற்போது ஜப்பானில் மணிக்கு 320கிமீ வேகத்தில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மாக்லேவ் ரயில்கள் மணிக்கு 500கிமீ வேகம் வரை இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் ஒரு மாக்லேவ் ரயிலில் 1,000 பயணிகள் பயணிக்க முடியும்.

Most Read Articles
English summary
The first passengers have travelled at an incredible 500kph on a hovering bullet train in Japan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X