Just In
- 3 hrs ago
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- 3 hrs ago
மாருதியின் அதிகம் மைலேஜ் தரும் காரை ரீபேட்ஜ் செய்து தெ.ஆப்பிரிக்காவில் களமிறக்கும் டொயோட்டா..
- 6 hrs ago
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- 6 hrs ago
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
Don't Miss!
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Sports
என்ன கொடும சார் இது.. சூர்யகுமாருக்கே தண்ணீர் காட்டிய சாண்ட்னர்.. அதுவும் பவர் ப்ளேவில் - ஆச்சரியம்!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Movies
பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரியல் லைஃப் சூப்பர் ஹீரோவிற்கு காஸ்ட்லியான பரிசு அறிவித்த பிரபல தொழிலதிபர்... என்ன பரிசுனு தெரியுமா?
தண்டவாளத்தில் தவறி விழுந்த குழைந்தையை மீட்டெடுத்த பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கேவிற்கு தொழிலதிபர் விலையுயர்ந்த பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

தன்னுடைய உயிரை துச்சமென நினைத்து தண்டவாளத்தில் தவறி விழுந்த குழைந்தையை மீட்டெடுத்ததற்காக ரயில்வே பணியாளர் மயூர் ஷெல்கே பல தரப்பில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றார். எதிரில் அதி-வேகத்தில் ரயில் வருவதை பார்த்தும் துணிச்சலுடன் ஓடி சென்று குழந்தையை மீட்டதற்காக திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு முக்கிய பிரபலங்கள் வரை பலர் அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களையும், மரியாதையையும் வழங்கி வருகின்றனர்.

இந்திய ரயில்வே துறை அமைச்சகம் ரூ. 50 ஆயிரம் சன்மானம் அறிவித்திருக்கின்றது. மயூர் ஷெல்கோவின் வீர தீர செயலுக்கு இந்த மிக சிறிய தொகை போதாது என்றாலும், அவருக்காக இந்த பரிசுத் தொகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது வரவேற்தக்கது.

இந்நிலையில், மயூர் ஷெல்கோவிற்கு புத்தம் புதிய பிராண்ட் நியூ பைக் ஒன்றை பரிசாக வழங்க இருப்பதாக பிரபல தொழிலதிபர் ஒருவர் அறிவித்துள்ளார். ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தரேஜா, இவரே ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவிற்கு விலையுயர்ந்த பைக்கை பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

'ஜாவா ஹீரோஸ்' எனும் புதிய திட்டத்தின் கீழ் இந்த மோட்டார்சைக்கிளை வழங்க இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். பார்வை திறன் குறைபாடுள்ள தாயுடன் ரயில்வே நடைமேடையில் சென்றுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென ரயில் இருப்புப்பாதையில் தவறி விழுந்தார்.

இதைப் பார்த்த பாயிண்ட்ஸ்மேன் மயூர் ஷெல்கே, உடனடியாக தண்டவாளத்தில் குதித்து மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையை மீட்டெடுத்தார். எதிர்புறத்தில் ரயில் மிக அதிக வேகத்தில் வந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த பின்னரும் அவர் மிக வேகமாக ஓடிச் சென்று குழந்தையை காப்பாற்றினார்.

இந்த சம்பவம்குறித்த வீடியோவை ரயில்வே துறை அமைச்சகமே முதன் முதலில் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. கடந்த 17ம் தேதி அன்று மஹராஷ்டிரா மாநிலத்தின் வாங்கனி ரயில் நிலையத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்தே மத்திய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சகம் மயூர் ஷெல்கேவிற்கு ரூ. 50,000 பரிசு தொகையை அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்தே ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் இயக்குநர் அனுபம் தரேஜா பைக் பரிசு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.

எந்த மாடல் மோட்டார்சைக்கிளை நிறுவனம் பரிசாக வழங்க இருக்கின்றது என்பதுகுறித்த தகவல் தெரியவில்லை. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் ஜாவா, 42, ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா பெராக் ஆகிய தேர்வுகளில் பைக்குகளை விற்பனைச் செய்து வருகின்றது.

ஒற்றை ஏபிஎஸ் மற்றும் இரட்டை ஏபிஎஸ் எனும் வேரியண்டுகளில் மேற்கூறிய மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், 42 மற்றும் பெராக் ஆகிய இரு மாடல்கள் மட்டும் இரட்டை சேனல் ஏபிஎஸ் வசதியில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அதேவேலையில், ஜாவா மற்றும் ஃபார்ட்டி டூ ஆகிய இரு மாடல்கள் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூவல் சேனல் ஏபிஎஸ் என இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரூ. 1,77,215 தொடங்கி ரூ. 1,97,487 வரையிலான விலையில் ஜாவா பைக்குகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது, டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஆகையால், ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்ததை விட தனியார் நிறுவனமான ஜாவா மோட்டார்சைக்கிளின் பரிசு அறிவிப்பு சற்று அதிக காஸ்ட்லியானதாக அமைய இருக்கின்றது. இதுபோன்ற என்னதான் விலையுயர்ந்த பொருட்கள் மயூர் ஷெல்கேவிற்க்கு அறிவித்தாலும், அவர் மேற்கொண்ட செயல் விலை மதிப்பற்றது என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.
-
ஹோண்டா ஆக்டிவா இ-ஸ்கூட்டர் ஜனவரியில் அறிமுகமாவது உறுதி... இந்த தகவலுக்குதான் இந்தியாவே காத்து கெடந்துச்சு!
-
எவ்வளவு காசை கொட்டி கொடுத்தாலும் இந்த புதிய ஜாவா பைக்கை வாங்குறது கஷ்டம்!! காரணம் என்ன தெரியுமா?
-
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?