Just In
- 8 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 11 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 13 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு காரை வாங்கிய முன்னாள் முதல்வரின் பேரன்... இதெல்லாம் அவருக்கு சாதாரணமப்பா!
முன்னாள் முதல்வரின் பேரன், பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். கடின உழைப்பாளியான இவர், ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும் அறியப்படுகிறார். குறிப்பாக மற்ற நடிகர்களை போலவே, விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதில் ஜூனியர் என்டிஆர் அதிக ஆர்வம் காட்ட கூடியவராக உள்ளார்.

இதன்படி ஜூனியர் என்டிஆரின் கராஜிற்கு விலை உயர்ந்த கார் ஒன்று விரைவில் வரவுள்ளது. ஆம், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ள லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரை ஜூனியர் என்டிஆர் தற்போது வாங்கியுள்ளார். லம்போர்கினி நிறுவனம் உருஸ் காரை ஜூனியர் என்டிஆருக்கு அடுத்த மாதம் டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதம் ஐதராபாத் வரவுள்ள லம்போர்கினி உருஸ் காரை ஜூனியர் என்டிஆர் ஓட்டுவதை அவரது ரசிகர்கள் பார்க்க முடியும் என நாம் நம்பலாம். ஜூனியர் என்டிஆர் ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்திருந்தபோது லம்போர்கினி உருஸ் காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கார் அவரை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே புதிதாக லம்போர்கினி உருஸ் காரை வாங்குவதற்கு ஜூனியர் என்டிஆர் திட்டமிட்டு கொண்டிருந்தார். அவரது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. ஜூனியர் என்டிஆரின் தேவைகளுக்கு ஏற்ப லம்போர்கினி உருஸ் காரில் ஒரு சில மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரனான ஜூனியர் என்டிஆர் தற்போது லம்போர்கினி உருஸ் காரை வாங்கியுள்ள நிலையில், ஏற்கனவே இந்திய நடிகர்கள் பலர் அந்த காரை வைத்துள்ளனர். இதில், புனித் ராஜ்குமார், தர்ஷன், ரன்வீர் சிங் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். இதுதவிர இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியிடமும் லம்போர்கினி உருஸ் கார் இருக்கிறது.

லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர், ட்வின் டர்போ, பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 641 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. இன்ஜின் சக்தியானது, 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலமாக, நான்கு சக்கரங்களுக்கும் கடத்தப்படுகிறது. இது சூப்பர் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

லம்போர்கினி உருஸ் காரின் விலை 3.10 கோடி ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்தியாவில் 100வது உருஸ் எஸ்யூவி காரை டெலிவரி செய்துள்ளதாக லம்போர்கினி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அறிவித்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பிற்கு இது ஒரு சாட்சி மட்டுமே.

இந்தியாவில் லம்போர்கினி நிறுவனம் உருஸ் காரை, சிபியூ (CBU - Completely Built Unit) வழியில் விற்பனை செய்து வருகிறது. அதாவது முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விலை அதிகமாக உள்ளது.