விஸ்வரூப கமல்ஹாசனின் ரேஞ்ச்ரோவர் எவோக் - சிறப்பு பார்வை

படத்திற்கு படம் வித்தியாசம், விசித்திரமான தொழில்நுட்பம் என முற்போக்கு எண்ணங்களால் மொழி, தேசம் கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசன் உடலிலும், உள்ளத்திலும் மகா உறுதி கொண்டவர். அவ்வாறே அவர் கார்களையும் தேர்வு செய்து வாங்குகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு அவர் ஆசையாய் வாங்கிய கார்தான் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தயாரிப்பான ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி.

விஸ்வரூபம் படத்தின் நெருக்கடியான பணிகளில் கமல்ஹாசனுக்கு பயணங்களின்போது பெரும் ரிலாக்ஸ் தந்தது எவோக்தான். கட்டுமானத்தால் மிருகமாகவும், வசதிகளை வரங்கள் போன்று அளிப்பதால் கடவுளாகவும் எவோக்கை கூறலாம். மேலும், விஸ்வரூபம் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்தபோது தோளோடு தோள் நின்றது எவோக்தான்.

மெகா சைஸ் சொகுசு எஸ்யூவிகளை தயாரித்து வரும் லேண்ட்ரோவரின் மினி சைஸ் சொகுசு எஸ்யூவிதான் எவோக். உலக அளவில் அதிக டிமான்டில் இருக்கும் இந்த எஸ்யூவியை முதல் லாட்டிலேயே முன்பதிவு செய்து வாங்கினார் கமல். சோதனைகளை சாதனையாக்கி வரும் நடிகர் இந்தளவுக்கு இந்த காரை முந்திக் கொண்டு வாங்கியதன் காரணம் என்ன என்பதற்கு சான்றான வசதிகள் மற்றும் அம்சங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

டிசைன்

டிசைன்

கண்டவுடன் காதல் கொள்ள செய்யும் படு கவர்ச்சியான டிசைனுடன் எவோக் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பின்புறம் அமைதியாக கிளம்பும் டிசைன் முன்புறத்தில் பிரம்மாண்டத்துடன் முடிகிறது. இதன் கூரை சரிவாக இருப்பது போன்ற தோற்றம் கூடுதல் அழகு. எடுப்பான இதன் முகப்பில் கிரில், ஹெட்லைட் முதல் பனி விளக்குகள் வரை அனைத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது லேண்ட்ரோவர் டிசைன் டீம். தடிமனமான பக்கவாட்டு பாடி லைன்கள் எவோக்கின் முரட்டுத்தனத்தை கூட்டுகின்றன. இதன் வித்தியாசமான தோற்றமும் சாலையில் செல்லும்போது கூடுதல் ஈர்ப்பை தரும்.

ரியல் வியூ மிரரில் வசதிகள்

ரியல் வியூ மிரரில் வசதிகள்

இதன் ரியர் வியூ மிரர்கள் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கின்றன. ரியர் வியூ மிரர் எலக்ட்ரிக்கல் கன்ட்ரோல் வசதி கொண்டதுடன், இந்த கண்ணாடியை வெப்பப்படுத்த முடியும். இதனால், மழை மற்றும் பனிப் பொழிவு காலங்களில் கண்ணாடியில் ஆவி அல்லது தண்ணீர் படர்ந்திருப்பது நீங்கி சுத்தமாகி விடும். இரவில் பின்னால் வரும் வாகனங்களிலும் வரும் ஒளியால் டிரைவரின் கண்களில் கூச்சத்தை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் தானியங்கி முறையில் இதன் ரியர் வியூ கண்ணாடிகள் கருப்பு கண்ணாடியாக மாறும் வசதி கொண்டது. இது நினைவுத் திறன் வசதி கொண்டது என்பதால் டிரைவருக்கு தகுந்தவாறு ஒரு கோணத்தில் கண்ணாடியை வைத்து மெமரியில் விபரங்களை பதிவு செய்து விட்டால் அடுத்த முறை ஒரு பட்டனை அழுத்தினால் கண்ணாடி உங்களுக்கு ஏதுவான கோணத்திற்கு வந்துவிடும்.

ஹெட்லைட்

ஹெட்லைட்

இந்த காரில் ஸினான் மற்றும் எல்இடி லைட்டுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு கொண்ட ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதனால், அதிக வெளிச்சத்தை தரும் வேளையில் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அதிக கண்கூச்சதை ஏற்படுத்தாது. மைலும், வளைவுகளில் திரும்பும்போது கார் திரும்பும் திசையில் தானியங்கி முறையில் ஹெட்லைட்டுகள் திரும்பி வெளிச்சத்தை தரும்.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

எல்இடி லைட்டுகளுடன் கூடிய பனி விளக்குகள் இந்த காரின் முகப்புக்கு அணிகலன் போன்று இருக்கிறது.

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

வாகனத்தை பின்புறம் எடுக்கும்போது ரியல் வியூ கேமரா இருப்பதுடன், ஏதெனும் பொருட்கள் இருந்தால் சென்சார்களும் பீப் ஒலி எழுப்பி எச்சரிக்கும்.

 கண்ணாடிகளில் சிறப்பு பூச்சு

கண்ணாடிகளில் சிறப்பு பூச்சு

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் சிறப்பு பூச்சு பூசப்பட்டிருப்பதால் அகச்சிவப்பு கதிர்கள் மற்றும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கதிர்களை காருக்குள் வராமல் தடுக்கும் வசதிகொண்டது. மழை வந்தால் இதன் வைப்பர்கள் தானியங்கி முறையில் இயங்கும்.

அலாய் வீல்

அலாய் வீல்

இந்த காரில் 18 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. விருப்பம்போல் அலாய் வீல் டிசைன்களை தேர்வு செய்யும் வசதியும் உண்டு.

 கண்ணாடி கூரை

கண்ணாடி கூரை

இந்த காரில் மிக விசாலமான கண்ணாடி கூரை பொருத்தப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

அல்மாண்ட்/ எஸ்பிரஸ்ஸோ கலவை லெதர், எபோனி கலவை லெதர் மற்றும் சிர்ரு லூனார் கலவை லெதர் என மூன்று விதமான இன்டிரியர் மாடல்களில் கிடைக்கிறது. கமலிடம் இருப்பது எபோனி கலவை லெதர் இன்டிரியர் கொண்ட எவோக்.

இன்டிரியர் அம்சங்கள்

இன்டிரியர் அம்சங்கள்

இந்த காரின் உட்புறத்தில் வாடிக்கையாளரின் மூடுக்கு தகுந்தவாறு மாறிக் கொள்ளும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது முக்கிய அம்சம். ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளன. இதேபோன்று, ஆக்ஸ்போர்டு லெதர் என்ற உயர்ரக உறையுடன் சூழப்பட்டுள்ளது ஸ்டீயரிங் வீல்.

புஷ் பட்டன் ஸ்டார்ட்

புஷ் பட்டன் ஸ்டார்ட்

இந்த காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி இருக்கிறது. பாக்கெட்டில் சாவி இருந்தால் போதும் காரை இந்த பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்யவும், ஆஃப் செய்யவும் முடியும்.

 கிளைமேட் கன்ட்ரோல்

கிளைமேட் கன்ட்ரோல்

இந்த காரில் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி தூய காற்றை கேபினுக்குள் வழங்கும் வசதியுடன் கூடிய கிளைமேட் கன்ட்ரோல் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கு தனியாக ஏசி வென்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

பின் இருக்கையில் கூடுதல் வசதி

பின் இருக்கையில் கூடுதல் வசதி

பின்இருக்கையின் ஆர்ம்ரெஸ்ட்டில் கப் ஹோல்டர்கள் உள்ளன. இதன் இருக்கைகள் உயர்ரக லெதர் கொண்டிருப்பதால் அதிக சொகுசை வழங்குவதோடு காருக்கு பிரிமியம் லுக்கையும் வழங்குகிறது.

எஞ்சின்

எஞ்சின்

எவோக்கில் 190 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் எஸ்டி4 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் குறைந்த கார்பன் புகையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த காரில் பேடில் ஷிப்ட் கியர் மாற்றும் வசதியும் உண்டு.

டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ்

டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ்

சாலைநிலைகளுக்கு ஏற்ற டெர்ரெய்ன் ரெஸ்பான்ஸ், ஹில் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் என சகல பாதுகாப்பு வசதிகளும் இந்த காரில் இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

எலக்ட்ரானிக் தொழில்பட்துடன் கூடிய டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் கொண்டிருக்கிறது.

 இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் 8 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கிறது. புளூடூத் இணைப்பு வசதி, வழிகாட்டி வசதி, மியூசிக் பிளேயர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இது வழங்கும்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஆர்பிஎம் மீட்டர்களை கொண்டிருக்கிறது. மேலும், சர்வீஸ் நினைவூட்டல், டிரிப் மீட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த டிஜிட்டல் இன்பர்மேஷன் டிஸ்ப்ளே வழங்கும்.

மியூசிக் சிஸ்டம்

மியூசிக் சிஸ்டம்

சப் ஊஃபருடன் 11 ஸ்பீக்கர்கள் கொண்ட 380 வாட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது பயணத்தின்போது பரவச அனுபவத்தை வழங்கும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

இந்த கார் ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. டிரைவரின் தேவைக்கேற்ப எளிதாக மாற்றிக் கொள்ளும் எலக்ட்ரானிக் ஷிப்ட் தொழில்நுட்ப வசதி உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

சோதனைநிலைகளில் லிட்டருக்கு 5.5 கிமீ மைலேஜ் தருவதாக லேண்ட்ரோவர் தெரிவிக்கிறது. அப்படியானால் நடைமுறையில் எவ்வளவு மைலேஜ் கொடுக்கும் என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

மூடுக்கு தகுந்தமாதிரி லைட் செட்டிங்

மூடுக்கு தகுந்தமாதிரி லைட் செட்டிங்

பயணிகளின் மூடுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட எல்இடி லைட் செட்டிங் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விலை

இந்தியாவில் விலை

ரூ.80 லட்சம் விலையில் இந்தியாவில் எவோக் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #evoque #car review #review
English summary
Kamal Haasan, the tamil actor who has showcased his acting skills in several languages (very much similar to drivespark.com's multi -language set up) has bought himself a brand new Range Rover Evoque premium SUV. The Universal Hero has been driving Around Chennai with his latest car which is the latest buzz in town.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X