கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

Written By:

கார் கதவுகளை ரிமோட் கன்ட்ரோல் நுட்பத்தில் திறப்பதற்கும், எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கும் இப்போது ஸ்மார்ட் கீ எனப்படும் நவீன சாவியை முன்னணி நிறுவனங்கள் வழங்குகின்றன. சில நிறுவனங்ககள் ஒருபடி மேலே போய் காரின் வேகத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் இப்போது கார் சாவியை வழங்கின்றன. 

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

இந்த நிலையில், உலகின் மிகவும் தனித்துவம் மிக்க சூப்பர் கார் மாடலான கோனிக்செக் அகெராவுக்கு விலை உயர்ந்த சாவி ஒன்றை தயாரித்து கொடுத்துள்ளது கோனிக்செக் நிறுவனம். அந்த காரின் உரிமையாளர் தெரிவித்த விருப்பத்தின் அடிப்படையில் இந்த காஸ்ட்லியான சாவி கொத்து உருவாக்கப்பட்டுள்ளது.

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

கோனிக்செக் நிறுவனத்தின் பிராண்டு முத்திரையின் வடிவிலேயே இந்த சாவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த சாவியில் மிக விலை உயர்ந்த மாணிக்கக்கல் மற்றும் சாவியை சுற்றிலும் 40 கேரட் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

உலகின் மிகவும் விலை உயர்ந்த கார் சாவி என்ற பெருமையை பெற்றுள்ளது. காருக்கு இணையான மதிப்பை இந்த சாவி கொத்து உரிமையாளருக்கு வழங்கும். இந்த சாவி கொத்தை சூப்பர்ஸ்பீடர்ஸ் என்ற இணையதளத்தை சேர்ந்தவர்கள் வாங்கி பார்த்து தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

இந்த சாவி கொத்தின் விலை மதிப்பு குறித்து கோனிக்செக் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மாணிக்கக்கல், வைரக்கற்கள் பதிக்கப்பட்ட இந்த சாவி கொத்து இந்திய மதிப்பில் ரூ.1.68 கோடி மதிப்புடையதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, பல முன்னணி சொகுசு கார் மாடல்களின் விலைக்கு நிகரானதாக இந்த சாவி கொத்து உருவாக்கப்பட்டு வாடிக்கையாளர் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கோனிக்செக் நிறுவனத்தின் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அகெரா. 2011ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. இந்த கார் ஸ்டான்டர்டு, அகெரா ஆர், அகெரா எஸ் மற்றும் அகெரா ஆர்எஸ் ஆகிய 4 மாடல்களில் வந்தது.

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

உலகின் சக்திவாய்ந்த தயாரிப்பு நிலை ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்று கோனிக்செக் அகெரா கார். இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் 1,144 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டது.

கோனிக்செக் காருக்கான விலை உயர்ந்த சாவி... விலை ஜஸ்ட் ரூ.1.70 கோடி மட்டுமே!

உலகின் அதிவேக செயல்திறன் மிக்க கார்களில் ஒன்றான கோனிக்செக் அகெரா கார் இந்திய மதிப்பில் ரூ.12.50 கோடி விலை மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோனிக்செக் அகெரா காருக்கான விலை உயர்ந்த சாவியைும், அதை பற்றிய தகவல்களையும் சூப்பர்ஸ்பீடர்ஸ் இணையதளத்த சேர்ந்த ஒருவர் விளக்குவதை வீடியோவில் காணலாம்.

புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்கள்!

இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய யமஹா எஃப்இசட்250 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Koenigsegg Designs The World's Most Expensive Car Key.
Please Wait while comments are loading...

Latest Photos