Just In
- 1 hr ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 2 hrs ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 3 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மசூதி ரூபத்தில் மறைந்துள்ள ஆபத்து... கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடக்கலாம்
கோழிக்கோட்டை போல் கொல்கத்தா ஏர்போர்ட்டிலும் பேரழிவு நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னைகளுக்கு மத்தியில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடைபெற்ற விபத்து, இந்தியாவையே உலுக்கியது. இந்த கோர விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோழிக்கோடு விமான நிலைய துயர சம்பவத்திற்கு, அதன் டேபிள் டாப் வகை ஓடுபாதைதான் (Runway) மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக சாதாரண ஓடுபாதைகள் சமதளத்தில் அமைக்கப்படும். எனவே விமானத்தை தரையிறக்குவது மிக எளிது. ஆனால் டேபிள் டாப் வகை ஓடுபாதைகள் மலைக்குன்றுகள் அல்லது உயரமான இடங்களில் அமைக்கப்படுகின்றன. எனவே அதன் இருபுறமும் பள்ளங்கள் இருக்கும். இத்தகைய ஓடுபாதைகளில் விமானத்தை தரையிறக்குவது மிகவும் கடினம்.

விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சென்றால், பள்ளத்தில் விழுந்து விடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். எனவே கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான், விமானிகள் விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும். அதுவும் மழை, பனி என வானிலை மிகவும் மோசமாக இருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும்.

எனவே டேபிள் டாப் வகை ஓடுபாதைகள் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகின்றன. கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட சோக சம்பத்தை தொடர்ந்து, கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் அடுத்த பேரழிவு நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Image Courtesy: Paul Hamilton/Wiki Commons
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை குறித்த கவலை விமான நிலைய அதிகாரிகளை ஆட்கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் இருந்து 280 மீட்டருக்குள் பக்ரா மசூதி (Bakra mosque) அமைந்திருப்பதுதான் இந்த அச்சத்திற்கு காரணம். இந்த மசூதி, 120 ஆண்டுகள் பழமையானது ஆகும்.

Image Courtesy: Rameshng/Wiki Commons
இந்த ஓடுபாதையை வடக்கு நோக்கி நீட்டிக்க முடியவில்லை. எனவே இந்திய விமான நிலைய ஆணையம் (AAI - Airports Authority of India) அதனை தெற்கு நோக்கி நீட்டித்துள்ளது. எனினும் முதன்மை ஓடுபாதையின் நீளத்திற்கு பொருந்தும் வகையில் அதனை நீட்டிக்க முடியவில்லை. கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy: Rameshng/Wiki Commons
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருப்பதால், பக்ரா மசூதிக்கு எதிராக கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் தற்போது ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டாம் ஓடுபாதையின் முன் பக்ரா மசூதி இருக்கிறது என்பதுதான் அதிகாரிகளின் தற்போதைய பிரச்னையாக உள்ளது.

Image Courtesy: Rameshng/Wiki Commons
ஓடுபாதை முடிவு பாதுகாப்பு பகுதி (Runway End Safety Area - RESA) விதிமுறைப்படி, ஓடுபாதையின் முடிவு பகுதியில் இருந்து, 240 மீட்டர்களை குறைந்தபட்ச பாதுகாப்பு இடைவெளியாக கடைபிடித்தாக வேண்டும். கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள இந்த பிரச்னை இதற்கு முன்பாக பலமுறை எழுப்பப்பட்டு விட்டது. ஆனால் தற்போது வரை அதற்கு எந்தவித தீர்வும் காணப்படவில்லை.

Image Courtesy: Rameshng/Wiki Commons
பக்ரா மசூதி இன்னமும் அங்கேயேதான் இருக்கிறது. இந்த பிரச்னை தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைமை செயலாளரிடம், கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் ஏற்கனவே பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனவே இந்த பிரச்னையை தீர்ப்பதற்காக மேற்கு வங்க மாநில அரசுடன், கொல்கத்தா விமான நிலையத்தின் அதிகாரிகள் மீண்டும் பேசவுள்ளனர். இது குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் அரவிந்த் சிங் கூறுகையில், ''பொதுவாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஓடுபாதை முடிவடையும் பகுதியில் கொஞ்சம் இடம் விடப்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் இது கடைபிடிக்கப்பட்டிருந்தால், ஒருவேளை விபத்து நடக்காமல் கூட இருந்திருக்கலாம். ஓடுபாதை முடிவடையும் இடத்தில், பாதுகாப்பிற்காக இந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோழிக்கோட்டில் நடந்த துயர சம்பவத்திற்கு பின், நாட்டின் விமான நிலைய ஓடுபாதை பாதுகாப்பு அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

கொல்கத்தா விமான நிலையத்தின் மசூதி விவகாரம் மிகவும் 'சென்சிட்டிவ்' ஆனது. இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, கொல்கத்தா விமான நிலையத்தின் இரண்டாவது ஓடுபாதை நீட்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க மாநில அரசுடன் மீண்டும் நாங்கள் விவாதிப்போம்'' என்றார்.

கொல்கத்தா விமான நிலையத்தின் முதன்மை ஓடுபாதையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது ஓடுபாதை மிக குறுகியதாக உள்ளது. இந்த ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்குவதில் அசௌகரியம் இருப்பதாகவும், எனவே கடந்த காலங்களில் விமானிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.