இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரை, கேடிஎம் பைக் உரிமையாளர் ஒருவர் நெகிழ வைத்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரின் பைக் டயர் சமீபத்தில் பஞ்சராகியுள்ளது. ஆனால் அவர் உணவை டெலிவரி செய்ய வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் ஒருவர் தனது கேடிஎம் ஆர்சி390 பைக்கை அவருக்கு கொடுத்து உதவியுள்ளார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த சம்பவம் நள்ளிரவில் நடைபெற்றுள்ளது. என்சிஆர் பைக்கர்ஸ் என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

கேடிஎம் பைக்கில் ஒருவர் வருவதை காட்டுவதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது. அப்போது ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் தனது பைக்கை தள்ளி கொண்டு செல்வதை அவர் பார்த்துள்ளார். இதை பார்த்து வருத்தம் அடைந்த கேடிஎம் பைக் உரிமையாளர், ஸ்விக்கி டெலிவரி பாயிடம், ஏன் பைக்கை தள்ளி கொண்டு செல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

இதற்கு தனது பைக் பஞ்சர் ஆகி விட்டது எனவும், அருகில் உணவை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது எனவும் ஸ்விக்கி டெலிவரி பாய் கூறினார். இதை கேட்டதும் தனது பைக்கை டெலிவரி பாய்க்கு கேடிஎம் பைக் உரிமையாளர் வழங்கினார். முதலில் பைக்கை வாங்குவதற்கு ஸ்விக்கி டெலிவரி பாய் மறுத்து விட்டார். யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என அவர் கூறினார்.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

எனினும் கேடிஎம் பைக் உரிமையாளர் தொடர்ந்து வலியுறுத்தியதால், அவரது கேடிஎம் பைக்கை டெலிவரி பாய் பெற்று கொண்டார். இதன்பின் அவர் உணவை டெலிவரி செய்ய சென்ற நேரத்தில், அவரது பைக்கையும் கேடிஎம் பைக் உரிமையாளர் சரி செய்து கொடுத்துள்ளார். டெலிவரி பாய் சென்றதும், கேடிஎம் பைக் உரிமையாளரும், அவரது நண்பரும் பஞ்சரான பைக்கை சரி செய்ய கொண்டு சென்றனர்.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

பைக்கை சரி செய்தபோது, டயரின் ட்யூப்பை மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் கேடிஎம் பைக் உரிமையாளர் தயக்கம் அடையவில்லை. உடனடியாக புதிய ட்யூப் போடும்படி கேட்டு கொண்டார். இதற்கு ஆன்லைன் மூலம் அவர் பணமும் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் டெலிவரி பாய் அங்கு வந்து விட்டார்.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

இதன்பின் கேடிஎம் பைக் உரிமையாளருக்கு அவர் நன்றி கூறினார். மேலும் பைக்கை சரி செய்ததற்கு அவர் தனது பணத்தை கேடிஎம் பைக் உரிமையாளருக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால் கேடிஎம் பைக் உரிமையாளரோ பணமும் வேண்டாம் என கூறி விட்டார். அதற்கு பதிலாக, சாலையில் இதுபோல் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுமாறு டெலிவரி பாயிடம் அவர் வலியுறுத்தினார்.

இத செய்யறதுக்கு பெரிய மனசு வேணும்... ஸ்விக்கி டெலிவரி பாயை நெகிழ வைத்த கேடிஎம் பைக் உரிமையாளர்...

இந்த சம்பவம் தற்போது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கேடிஎம் பைக் உரிமையாளருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இனி தாங்களும் சாலையில் தவிப்பவர்களுக்கு உதவி செய்வோம் எனவும் பலர் கூறியுள்ளனர்.

சாலையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு இந்த கேடிஎம் பைக் உரிமையாளர் உதவுவது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாலையில் தவிப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த கேடிஎம் பைக் உரிமையாளர் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KTM RC390 Owner Helps Swiggy Delivery Boy - Video. Read in Tamil
Story first published: Monday, March 22, 2021, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X