ரூ.9 கோடிக்கு புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் வாங்கிய பிரபல தொழிலதிபர்!

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை மீட்பதற்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்ட பிரபல தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கி இருக்கிறார்.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

இந்தியாவின் பாரம்பரிய மிக்க வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றாக பிர்லா குழுமம் இருந்து வருகிறது. இந்த நிறுவனம் நிலக்கரி சுரங்கம், தொலைதொடர்புத் துறை, வாகன உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை, சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

இந்த நிலையில், பிர்லா குழுமத்தின் அதிபரும், இந்தியாவின் பில்லியனர்களில் ஒருவருமான குமாரமங்களம் பிர்லா புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் வாங்கி இருக்கிறார். அதுவும் அதிக வீல் பேஸ் நீளம் கொண்ட மாடலை தேர்வு செய்து வாங்கி இருக்கிறார்.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

மும்பையில் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த இந்த காரை மிஸ்டர் ஜெயின் என்பவர் படஙகளை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த கார் குமாரமங்களம் பிர்லா பெயரில் இருக்கிறது. கடந்த மாதம் 23ந் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் எக்ஸ்டென்ட் வீல் பேஸ் மாடலானது ரூ.7.95 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாலை வரி மற்றும் இதர கட்டணங்கள் உட்பட கிட்டத்தட்ட ரூ.9 கோடி அடக்க விலை கொண்டதாக இருக்கும். சாதாரண கோஸ்ட் காரைவிட இந்த கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்ட மாடல் ரூ.1 கோடி கூடுதல் விலை கொண்டது.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

சாதாரண ரோல்ஸ்ராய்ஸ் காரைவிட இந்த எக்ஸ்டென்ட் வீல்பேஸ் மாடல் 170 மிமீ கூடுதல் நீளத்தை பெற்றிருக்கிறது. இதனால், பின்புற இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் ஒரு அறையில் அமர்ந்து இருப்பது போன்ற உணர்வை வழங்கும்.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் EWB மாடலில் ஏராளமான வசதிகள் கொடுக்கப்படுகின்றன. சாதாரண கோஸ்ட் காரைவிட இந்த காரின் கதவுகள் பெரியது. இதனால், பயணிகள் ஏறி, இறங்குவது மிகவும் சுலபமாக இருக்கும். அத்துடன், பிசினஸ் ஜெட் போன்ற அட்ஜெஸ்ட் வசதிகளு"ன் கூடிய சொகுசான இருக்கைகளை பெற்றிருக்கிறது. இந் காரில் மது வகைகளை வைத்துக் கொள்வதற்கான சிறிய குளிர்சாதன பெட்டியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

குமாரமங்களம் பிர்லா மிக நீண்ட காலமாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரையே பயன்படுத்தி வந்தார். தற்போது ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் EWB மாடலுக்கு மாறி இருக்கிறார். மேலும், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தின் கீழ்தான் செயல்பட்டு வருவதுடன், பிஎம்டபிள்யூ கார்களின் கட்டமைப்புக் கொள்கையானது ரோல்ஸ்ராய்ஸ் கார்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

நிவாரணம் கேட்ட தொழிலதிபர் ரூ.9 கோடிக்கு ரோல்ஸ்ராய்ஸ் வாங்கி அசத்தல்!

பிர்லா குழுமத்தின் கீழ் செயல்படும் வோடஃபோன் ஐடியா சந்தைப் போட்டி மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கியை செலுத்தும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த நிலையில், நஷ்டத்தில் இயங்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் வர்த்தகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு குமாரமங்களம் பிர்லா கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Billionaire Kumar Mangalam Birla has received new Rolls Royce Ghost EWB luxury car recently. Here are some important features of the car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X