ஆசிரியருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கிய குழந்தை பற்றி தெரியுமா?

Written By:

குவைத்தில் ஒரு சிறிய குழந்தை தனது டீச்சருக்கு, மெர்சிடிஸ் பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

நீங்கள் உங்கள் ஆசிரியருக்கு ஏதாவது அன்பளிப்பு வாங்கி கொடுக்க யோசித்துள்ளீர்களா? நீங்கள் ஏன் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரை உங்கள் டீச்சருக்கு, பரிசாக கொடுக்கக்கூடாதா?

kuwaiti-girls-gifts-mercedes-benz-car-to-her-teacher

இப்படி ஒரு சம்பவம் குவைத்தில் நிஜமாக நடந்துள்ளது. எல்கேஜி அல்லது யூகேஜி எனப்படும் படிப்புகளை தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் கிண்டர்கார்டன் (Kindergarten) என அழைக்கிறோம்.

கிண்டர்கார்டனில் படிக்கும் நூர் அல் ஃபரீஸ் என்ற 5 வயது குழந்தை, நாடியா என்ற தனது ஆசிரியருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கிண்டர்கார்டன் படிப்பில் நூர் அல் ஃபரீஸ் பாஸ் ஆவதற்காக (தேறுவதற்கு) உதவியதால், நாடியா-வுக்கு இந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் பரிசாக வழங்கபட்டதாக கூறப்படுகிறது.

மேலே உள்ள இந்த படத்தில் காணப்படும் இந்த குழந்தை தான், நூர் அல் ஃபரீஸ் ஆகும். இவர், "இந்த கார் எனது மனம் கவர்ந்த ஆசிரியர் நாடியாவுக்காக" ("This car is for my favourite teacher Nadia") என்ற தகவல் அடங்கிய செய்தியுடன் தனது டீச்சர் நாடியா-வுக்கு நன்றி தெரிவிக்கும் காரின் பானட்டில் மீது அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

உள்ளூர் செய்தி நிறுவனங்களின் செய்தி படி, இந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார், நூர் அல் ஃபரீஸ்ஸின் தந்தை மூலம் ஆசிரியர் நாடியா-வுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. நூர் அல் ஃபரீஸ்ஸின் இறந்துவிட்டார். நூர் அல் ஃபரீஸ்ஸின் கல்விக்கு உதவியதோடு மட்டுமல்லாமல், நூர் அல் ஃபரீஸ் தனது தாயின் இழப்பில் ஒருந்து மீண்டு வருவதற்கும் நாடியா பெரும் பங்கு வகித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார், நூர் அல் ஃபரீஸ்ஸின் தந்தை மூலம் ஆசிரியர் கார் நாடியா-வுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நூர் அல் ஃபரீஸ்ஸின் தந்தை குறித்த தகவல்களும், இந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரின் மாடல் குறித்த தகவல்களும், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது குறித்தும் மேற்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எப்படி பார்த்தாலும், பிஞ்சு குழந்தை நூர் அல் ஃபரீஸ்ஸின், பெரிய மனதிற்கு பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்.

English summary
A Kuwaiti girl has gifted her teacher sparkly new Mercedes-Benz for helping her graduate in kindergarten! Five year old Noor Al Faris gifted her teacher Nadia brand new Mercedes-Benz. According to local media though, car was gifted to teacher by her father. He claims that, Nadia played important role in Noor's life by helping her overcome her mother's death. To know more, check here...
Story first published: Thursday, June 9, 2016, 8:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark