லாஃபெராரி காரின் மீது உரிமையாளரின் புல்லரிக்க வைக்கும் பாசம்!

Written By:

உங்க கார் மீது உங்களுக்கு எவ்வளவு பிரியம் இருக்கிறது என்பதை அதனை ஓட்டும் விதத்தை வைத்தோ அல்லது பராமரிப்பு செய்வதை வைத்தோ கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு சிலர் அளவுகடந்த பிரியம் காரணமாக தனியாக கராஜ் அமைத்து அல்லது வீட்டின் போர்டிகோவில் நிறுத்தி கவர் போட்டு பொத்தி பாதுகாப்பதையும் கண்டிருக்கிறோம். ஆனால், ஸ்லைடரில் காணப்போகும் கார் பிரியரின் அளவு கடந்த பாசத்தை பார்த்து கார் பிரியர்களை நெகிழ வைக்கும் என நம்பலாம்.

அதிர்ஷ்டக்கார கார்

அதிர்ஷ்டக்கார கார்

ஆம், லாஃபெராரி காரை தனது வீட்டின் வரவேற்பரையில் கொண்டு வந்து நிறுத்தி அனுதினமும் அழகு பார்க்கிறார் அதன் உரிமையாளர். இதைவிட பாதுகாப்பான இடம் இந்த காருக்கு வேறு எங்கும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

உரிமையாளர்

உரிமையாளர்

இந்த லாஃபெராரி காரின் உரிமையாளர் ஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்தவர் என அனுமானிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஏன் இவ்வாறு வீட்டிற்குள்ளேயே காரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் என்பதற்கான சுவாரஸ்யமானத் தகவலும் பரப்பப்படுகிறது.

அது என்ன?

அது என்ன?

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடந்த விபத்தில் லாஃபெராரி கார் ஒன்று விபத்தில் சிக்கியது. அது இந்த கார்தான் என்று அனுமானிக்கப்படுகிறது. அந்த விபத்து அச்சம் காரணமாகவே, தனது காரை வீட்டிற்குள் வைத்து அதன் உரிமையாளர் பாதுகாப்பதாக கூறப்படுகிறது.

விலை

விலை

இந்த லாஃபெராரி மதிப்பு ரூ.9.49 கோடி. அப்புறம், இந்தளவுக்கு பாசம் காட்டாம இருக்க முடியுமா பாஸ்.

இன்னொரு காரணம்

இன்னொரு காரணம்

நாம் வைத்திருக்கும் கார் ஷோரூமை விட்டு வெளியே வந்தததிலிருந்து ஒவ்வொரு நாளும் அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும். ஆனால், ஃபெராரி கார்களுக்கு நாள் அதிகரிக்க அதிகரிக்க மதிப்பும் உயரும். அதுவும் இவர் இவ்வாறு பாதுகாப்பதற்கான விஷயமாகவும் கருதலாம்.

விடுங்க பாஸ்...

விடுங்க பாஸ்...

பல லட்சம் கொடுத்து ரோட்டில் ஒரு கவர் கூட இல்லாமல் நிற்கும் கார்களை பார்த்து மனசு வலிக்கும். ஆனால், இந்த ஃபெராரி உரிமையாளரின் செயல் பலருக்கும் கார் பராமரிப்பு மீது ஒரு உந்துதலை நிச்சயம் ஏற்படுத்தும். சரி, ஃபீல் பண்ணாம ஒரு கவரை வாங்கி மாட்டுங்க முதல்ல...[உரியவர்களுக்கு மட்டும்].

 
English summary
The owner of a $1.4 million Ferrari LaFerrari in Slovakia likes to keep his car quite close to himself. In fact he likes to keep his mean machine in the living room of his house.
Story first published: Saturday, January 16, 2016, 15:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark