லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

Written By:

சூப்பர் கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற லம்போர்கினி நிறுவனம் ஆல்ஃபா ஒன் என்ற பெயரில் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

இந்த புதிய லம்போர்கினி ஸ்மார்ட்போன் சூப்பர் கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நீர்ம உலோகத்தில் தயாரிக்கப்படுவது சிறப்பு. இந்த புதிய ஸ்மார்ட்போன் 5.5 அங்குல WQHD தொடுதிரையை பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 820 பிராசசர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு துணையாக அட்ரினோ 530 கிராஃபிக் பிராசஸிங் யூனிட் செயல்படுகிறது.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வந்துள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு மூலமாக இதன் மெமரி திறனை அதிகபட்சமாக 128 ஜிபி வரை அதிகரித்துக் கொள்ள முடியும்.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 20 மெகா பிக்சல் முதன்மை கேமராவும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

விரல் ரேகை மூலமாக திறக்கும் வசதியை அளிக்கும் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு சிம் கார்டுகளை பொருத்திக் கொள்ள முடியும்.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு நவ்கட் இயங்குதளத்தை பெற்றிருக்கிறது. மேலும், 3,250 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. உள்ளூர் வரிகள் தனியாக செலுத்த வேண்டி இருக்கும். சர்வதேச அளவில் இந்த ஸ்மார்ட்போன் டெலிவிரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Recommended Video - Watch Now!
TVS Jupiter Classic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

லம்போர்கினி நிறுவனம் ஏற்கனவே 88 தவ்ரி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

லம்போர்கினி ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்- முழு விபரம்!

இந்த நிலையில், இந்த புதிய ஆல்ஃபா ஒன் ஸ்மார்ட்போனும் லம்போர்கினி காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான ஆக்சஸெரீயாக இருக்கும். லம்போர்கினி நிறுவனத்தின் இணையதளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து வாங்க முடியும்.

English summary
Lamborghini has launched the Alpha-One Android-powered smartphone, with a price tag of Rs 1.5 lakh, ex-showroom, er, exclusive of VAT what we meant. The Lamborghini Alpha-One can be purchased from the company's official website.
Story first published: Friday, August 25, 2017, 10:58 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark