லம்போர்கினி ஆடியோ சிஸ்டம்... விலைய எவ்வளவு இருந்தா என்னங்க?

Written By:

சூப்பர் கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லம்போர்கினி பிராண்டுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. லம்போர்கினி கார்கள் மீது தீரா ஏக்கம் கொண்ட ரசிகர்களுக்காக லம்போர்கினி பிராண்டின் சாயல் கலந்த விசேஷ பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை வாங்கி வைத்திருப்பதில் அதன் ரசிகர்கள் பேரானந்தம் காண்கிறார்கள்.

அதுபோன்று, லம்போர்கினி பிராண்டு மீது பெரும் பிரியம் கொண்டிருப்பவர்களுக்காக லம்போர்கினி பிராண்டில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது, லம்போர்கினி ஆடியோ சிஸ்டம். லம்போர்கினி கார்கள் போன்றே பல விசேஷ கட்டமைப்பு, விலையில் வந்திருக்கிறது இந்த ஆடியோ சிஸ்டம்.

பிராண்டு முத்திரை

லம்போர்கினி கார்களின் சைலென்சர் மற்றும் ஷாக் அப்சார்பரை பிரதிபலிக்கும் வகையில் ஸ்பீக்கர்களுடன் இந்த ஆடியோ சிஸ்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

கார்பன் ஃபைபர் பாகங்கள்

லம்போர்கினி கார்கள் போன்றே இந்த டாக்கிங் ஸ்டேஷனும் முழுவதும் கார்பன் ஃபைபர் பாகங்களால் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இதனால், எடை குறைவாகவும், அதிக உறுதியாகவும் இருக்கும்.

கூட்டணி

எசவோக்ஸ் ஸ்பீக்கர் என்ற இசை சாதனங்கள் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து இந்த டாக்கிங் ஸ்டேஷனை லம்போர்கினி கார் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏர்கிராஃப்ட் ஸ்டூடியோடிசைன் நிறுவனத்தின் தலைமை டிசைனரும், நிறுவனருமான மைக்ரோ பிகோராரிதான் இந்த ஆடியோ சிஸ்டத்தை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

திறன் மிக்க ஸ்பீக்கர்கள்

இந்த ஆடியோ சிஸ்டத்தின் இருபுறங்களிலும் 6.5 இன்ச் ஸ்பீக்கர்களும், 8 இன்ச் ஊஃபர்களும் பொருத்தப்பட்டுள்ளன. நடுப்பகுதியில் 15 இன்ச் நியோடிமியம் சப் ஊஃபர்கள் உள்ளன. புகைப்போக்கி குழாய் போன்ற அமைப்பிற்குள் இரண்டு ஒரு இன்ச் ட்வீட்டர்கள் உள்ளன.

புஷ் பட்டன் ஸ்டார்ட்

இந்த ஆடியோ சிஸ்டத்தில் 600 வாட் மற்றும் 200 வாட் திறனை வழங்கும் ஆம்பிளிஃபயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, லம்போர்கினி கார்களில் உள்ளது போன்ற புஷ் பட்டன் ஸ்டார்ட் சிஸ்டம், புளுடூத் வசதி போன்றவையும் முக்கியமானது.

எடை

இந்த ஆடியோ சிஸ்டம் 53 கிலோ எடை கொண்டது. 125செமீ அகலமும், 65 செமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. வரவேற்பையில் வைப்பதற்கான சிறப்பான ஆடியோ சிஸ்டமாக இது இருக்கும்.

விலை விபரம்

லம்போர்கினி நிறுவனத்தின் இணையதள ஸ்டோரில் இந்த சாதனம் விற்பனைக்கு இருக்கிறது. 24,800 யூரோ மதிப்பில் விற்பனைக்கு உள்ளது. இந்திய மதிப்பில் ரூ.16.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lamborghini Esavox Ultimate docking station.
Story first published: Wednesday, November 23, 2016, 10:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark